இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 3 : Pedu pera nil
இலக்கணத் தேர்ச்சி கொள்
1. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
விடை
பகுபத உறுப்புகள் மொத்தம் ஆறு.
அவை: பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவை ஆகும்.
2. காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை
ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் காட்டும் உறுப்பு கால இடைநிலை அல்லது காலம் காட்டும் இடைநிலை எனப்படும்.
எ.கா:
❖ செய்தான் - செய் + த் + ஆன் - த் (இறந்தகால இடைநிலை)
❖ செய்கிறான் - செய் + கிறு + ஆன் - கிறு (நிகழ்கால இடைநிலை)
❖ செய்வான் – செய் + வ் + ஆன் - வ் (எதிர்கால இடைநிலை)
3. பகுபதத்தில் சந்தி, சாரியை எவ்வெவ்விடங்களில் அமையும்?
விடை
சந்தி
❖ பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் சந்தி வரும்.
❖ சான்றாக த், ப், க் எனும் மூன்றெழுத்துகளும் சந்தியாக அமையும்.
சாரியை:
❖ பகுதியோடு இடைநிலையும், இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாகச் சார்ந்து இயைபு வரும் உறுப்பு சாரியை ஆகும்.
❖ சாரியைக்குப் பொருளில்லை.
❖ கு, அன் - என்பன சாரியைகள் ஆகும்.
4. விகுதிகள் எவற்றை உணர்த்தும்?
விடை
விகுதி, ஒரு வினைமுற்றுச் சொல்லின் இறுதியின் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும்.
5. பகுபத உறுப்பிலக்கணம் தருக.
6. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்க.
அன் – வந்தனன்; இன் - முறிந்தது; கு - காண்குவன்; அன் - சென்றன
விடை: இன் - முறிந்தது.
7. பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.
விடை:
பேசு – பேசினான் பேசுகிறான் பேசுவான் பேசான்
எழுது -- எழுதினான் எழுதுகிறான் எழுதுவான எழுதான்
வணங்கு - வணங்கினான் வணங்குகிறான் வணங்குவான் வணங்கான்
8. வேர்ச்சொல், எதிர்மறை இடைநிலை, விகுதி ஆகியவற்றைச் சேர்த்துச் சொற்களை உருவாக்குக,
விடை :
பார் – பாரான்
காண் – காணலள்
உரை – உரைத்திலர்
கற்பவை கற்றபின்
1. உங்கள் ஊரின் அருகிலுள்ள, உங்களுக்குத் தெரிந்த மலைகளின் பெயர்க் காரணத்தை அறிந்து வகுப்பில் பகிர்ந்துகொள்க.
விடை
கொல்லிமலை:
இம்மலை தமிழ் நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. சங்க இலக்கியங்களில் சிறப்பாகப் பாடப்பெற்ற மலை. கடையேழு வள்ளல்களில் ஒருவனும் சிறந்த வில் வீரனுமாகிய 'வல்வில் ஓரியால்' ஆட்சி செய்யப்பட்ட மலை. அகநானூறு, புறநானூறு நூல்களில் பாடப்படும் மலை. இம்மலைப்பகுதி, பெண் தெய்வமான 'எட்டுக்கை அம்மன்'-னால் பாதுகாக்கப்படுகிறது என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. பல நோய்களைக் கொல்லும் மூலிகைச் செடிகள், பண்ணைகள் இங்கு உண்டு.
ஏற்காடு: (The land of seven forest)
இம்மலை சேலம் மாவட்டத்தில் உள்ளது. ஏல் + காடு (ஏழு + காடு) ஏற்காடு என அழைக்கப் படுகிறது. இம்மலைப் பகுதியைச் சுற்றி ஏழு காடுகள் உள்ளன என்பர். மிளகு, ஏலம் போன்ற வாசனைத் திரவியங்கள் விளையும் மலை இதுவாகும். மாணவர்களே, இவற்றைப் போன்று நீவிர் அறிந்த இன்னும் சிலவற்றை ஒருவருக்கொருவர் கலந்துரையாடி தெளிவு பெறுங்கள்.
2. மலை குறித்த வேறு சொற்களையும் மலை சார்ந்த கலைச்சொற்களையும் திரட்டிப் பட்டியல் உருவாக்குக.
விடை
அசலம் - மலை (அசையா நிலை) அசையாமல் உறுதியாய் இருப்பதால் அசலம்.
குன்றம் - சிறுமலை, (சிறிய மலைப்பகுதி)
குவடு - மலையுச்சி (மலையின் உச்சிப்பகுதியைக் குறிப்பது)
சிகரம் - மலையுச்சி, மலை, உயர்ச்சி (கிராம்பு, சுக்கு, இலவங்கம் விளையும் பகுதி)
சிகரி - மலை
சிகரி திம்பம் - மலை வேம்பு
3. எந்தெந்த நாடுகளில் காவடி ஆட்டம் இன்றளவும் நிகழ்த்தப்படுகிறது? அதற்கான காரணங்களைத் திரட்டிக் கலந்துரையாடுக.
விடை
கலந்துரையாடல்:
என்னருமை மாணவர்களே! இப்பாடப்பகுதியில் "காவடிச்சிந்து” என்பது பற்றிப் பயின்றோம். "காவடி"
எந்தெந்த நாடுகளில் காவடி ஆடி மகிழ்வர் என்பது குறித்துக் கலந்துரையாடுவோம்.
ஆசிரியர் : இன்றையக் காலக்கட்டத்தில் எந்தெந்த நாடுகளில் காவடி நிகழ்த்தப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா!
இனியன் : ஐயா! சென்ற வாரம் செய்தித்தாளில் "சிங்கப்பூரில்" நடந்ததாகப் படித்தேன்.
தமிழினி : ஐயா, நான் மலேசியாவில் நடைபெற்றது என்று தொலைக்காட்சியில் பார்த்தேன்,
மாலினி : ஐயா! நான் இலங்கையில் நடைபெற்றதாக தெரிந்து கொண்டேன். என் உறவினர் ஒருவர் அங்கிருந்து வந்திருந்தார் அவர் கூறினார்.
ஆசிரியர் : மிகவும் சரியாகக் கூறினீர்கள். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இன்றளவும் நடைபெறுகிறது. அதற்கான காரணம் அறிவீர்களா?
தமிழினி : தமிழர்கள் வாழ்வதுதான், காரணம்.
ஆசிரியர் : யாராவது கூறுகிறீர்களா?
தமிழினி : தமிழர் வாழ்வதால்....
ஆசிரியர் : தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனார். தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானை வழிபட கோவில் கட்டுகின்றனர். பின்னர் அக்கோவிலில் விழா நடக்கும் பொழுதெல்லாம் பாடி, ஆடி காவடி எடுத்துச் செல்கின்றனர்.
இனியன் : காவடியில் ஏதேனும் வகைகள் உண்டா ஐயா.
ஆசிரியர் : உண்டு ! வழிபாட்டுக்கு எடுத்துச்செல்லும் வழிபாட்டுப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு "பால் காவடி”, “புஷ்பக்காவடி”,
"பன்னீர்க் காவடி”, “தேன் காவடி” என்று வகைப்படுத்தி அதற்கேற்றப் பாடல்களைப் பாடி முருகப்பெருமானை வாழ்த்தி மகிழ்வர்.
மாணவர்கள் : இக்கலந்துரையாடல் எமக்கு மிகவும் பயனுடையதாய் இருந்தது. நன்றி
4. நீங்கள் விரும்பும் தலைப்பில் எதுகை, மோனை, சந்தநயம் கொண்ட பாடல் ஒன்றை எழுதி, காட்சிப்படுத்துக.
விடை
தமிழ்க்கடவுள்
இலங்கை முருகனுக்கோர்
கதிர்காமம் - பொருள்
இலங்கும் மலேசியாவில் - பல
கிராமம் துலங்கும்
இலண்டனுக்கும் தொடர்ந்து வந்தான்-எங்கள்
சுவாமி நாதன் அருளைச்
சுரக்க வந்தாள்
5. திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றமே - விவாதிக்க.
விடை
மணக்கொடை கேட்பது குற்றமே!
முள்காலத்தில் மணக்கொடை என்பது, மணம் முடிக்கப்போகும் பெண்ணுக்காக, மணமகன் வீட்டார் கொடுக்கும் பரிசுத்தொகையாகும். இச்செய்தியை இலக்கியங்கள் மணக்கொடை என்றும், பேச்சு வழக்கில் "பரிசம் போடுதல்” என்றும் கூறுவர்.
ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. "அன்பையும், அறனையும்” அடிப்படையாய்க் கொண்டு அமைக்கப்பட வேண்டிய மணவிழாக்கள், “நகை தொகை”யை அடிப்படையாய்க் கொண்டு அமைக்கப்படுகிறது. மணமகன் வீட்டார் கொடுத்த கொடை, கொஞ்சங் கொஞ்சமாக கட்டாய வசூல் செய்யும் வரதட்சணையாக மாறிவிட்டது. இதனால் பெண்ணைப் பெற்றவர்கள் கலங்கி நிற்கும் கடனாளியானார்கள். பெண்ணின் திருமண வயது உயர்ந்து கொண்டே போய், நடுத்தர வர்க்கத்துப் பெண்களுக்கு மணம் ஒரு நனவாகா கனவாகவே இருக்கும் நிலை வந்துவிட்டது.
வரதட்சணையை அடிப்படையாய்க் கொண்டு பல விவாகரத்துக்கள், அதனால் பாதிக்கப்படும் மழலைச் செல்வங்கள் என ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் “மணக்கொடை”யை கொடுப்பதும் குற்றமே! வாங்குவதும் குற்றமே!!
6. உலகியல் கருத்துகளைப் பேசும் ஏதேனும் ஓர் இலக்கியப் பாடலின் நயமும் சொல்லும் பொருளும் குறித்து வகுப்பில் பேசுக.
விடை
நம் தமிழ் இலக்கியங்கள் பலவும் வாழ்வியல் நெறிகளைப் பேசுவன என்பதை மறுக்க இயலாது. மமதையான எண்ணம், தான் என்னும் அகந்தை, நானே அனைத்தும் அறிவேன் என்ற எண்ணம் மனிதர்க்கு இருத்தல் கூடாது. ஒரு சிறு உயிர் செய்யும் செயலை நம்மால் செய்ய முடியாத நிலையில் அவ்வாறு எண்ணலாமா? என்ற கருத்தை, சிறுபஞ்சமூலம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.
“வான்குருவிக்கூடு அரக்கு வாலுலண்டு நூல்புழுக்கோல்
தேன் புரிந்து யார்க்கும் செயலாகா - தாம்புரீஇ
வல்லவர் வாய்ப்பன என்னார் ஒவ்வொருவர்க்கு
ஒலீகாது ஒன்று படும்"
பொருள்:
வான் குருவிக்கூடு - தூக்கணாங்குருவிக்கூடு
அரக்கு - எறும்புப்பற்று
உலண்டு புழுகோல் - பட்டுப்புழுவின் நூல்கூடு
தேன்புரி - தேனீயின் தேனடை
இவற்றை எத்தகு கல்விவல்லார்க்கும் செய்ய இயலாது. எனவே யாரையும் ஏளனமாக இழிவாக எண்ணுதல் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு வல்லமையை இறைவன் தந்திருப்பான். பிறரை இழிவாக எண்ணுதல் கூட ஒருவருக்குத் தீங்கு தரும் என்ற உலகியல் செய்தியை இப்பாடல் கூறுகிறது.
7. உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் கேள்வியுற்ற "பிறர்க்கென முயலுநர்” எவரேனும் ஒருவர் குறித்த தகவலைத் திரட்டிக் கட்டுரை உருவாக்குக.
விடை
பிறர்க்கென முயலுநர்:
பிறர்க்கென முயலுநர் யார்? யாரைப் பற்றி எழுதுவது? எண்ணி எண்ணிப் பார்த்தேன். யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. பிறர்க்கென முயன்றவர், மனித இனத்தின் மாண்புகளை மதித்தவர், நாட்டின் அடிமைத்தளையை அகற்றிய அஞ்சா நெஞ்சினர். கிராம ராச்சியம் அமைத்திட முனைந்த அண்ணல் காந்தி அன்றி யார்! இந்த தலைப்பிற்குரியவர் ஆக முடியும்!
"நாமிருக்கும் நாடு நமதென்ப தறிந்தோம்” என்று உறுதி எழச்செய்தவர்
“இந்தியா என்றொரு நாடுண்டு அங்கு
ஏலம் கிராம்பு பெறுவதுண்டு
போக்கு அறியா மக்களுண்டு” என்று இருந்த நிலையை மாற்றி,
“இந்தியா என்றொரு நாடுண்டு அங்கு
விழிப்பும் எழுச்சியும் மிக உண்டு” என்ற நிலைக்கு மாற்றியவர்.
8. நீங்கள் கண்டுகளித்த ஏறு தழுவுதல் நிகழ்வின் காட்சிகளை வகுப்பில் நேர்முக வருணனை செய்து காட்டுக!
விடை
ஏறு தழுவுத:
எங்கள் ஊருக்கு அருகில் தம்மம்பட்டி என்றொரு ஊர் உள்ளது. அங்கு பொங்கலுக்கு மட்டுமல்ல ஊர் கோவில் திருவிழாவுக்கும் ஏறுதழுவதல் நிகழ்ச்சி நடத்துவார்கள். முந்தைய நாளில் இருந்தே சுற்றுக் கிராமங்களில், அண்டை மாவட்டங்களில் இருந்தெல்லாம் காளைகள் வந்து இறங்க ஆரம்பித்தன.
ஒவ்வொரு காளையும் பார்ப்பதற்கே பயமுறுத்துவதாக இருந்தது. காலை முதல் ஊரில் களியாட்டம் தொடங்கியது ஒவ்வொரு காளையும் உள் வாடிக்கு அழைத்து வரப்பட்டது. ஒரு காளை இராஜாளி மாதிரி கெம்பீரமாக நின்றது. ஒரு காளை கரும்பிசாசு போல் பார்ப்பதற்கே அச்சம் தருவதாக இருந்தது.
காளையின் மூச்சு தரையில் பட்டபோது மண் சிதறிப் பறந்தது ஆ... காளை வாடி வாசலுக்கு வந்துவிட்டது. இளைஞர்கள் காளையோடு காளையாக தாவுகிறார்கள்! பிடிக்கு அகப்படாமல் நழுவுகிறது. இளைஞனும் விடவில்லை கூட்டத்தினரின் விசில் சத்தம் காதை பிளக்கிறது... களியாட்டம் மிகுகிறது. காளை ஒரு போர்வீரன் போல் முட்டுகிறது... தாழப்பார்க்கிறது... ஒரு தவ்வு, இரண்டாவது தவ்வூ.. மூன்றாவது தவ்வில் சோர்ந்து... வீரனின் கைக்குள் சிக்கிவிட்டது. அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருளான இரண்டு சரவன் தங்கமும் அவனுக்குச் சொந்தமாயின. ஒரே நாளில் அந்த இளைஞன் அந்த சுற்றுப்புறம் கிராமங்கள் அனைத்திற்கும் தெரிந்த ஒரு வீரன் ஆகிவிட்டான். எல்லோரும் வாழ்த்தினாங்க... நீ புலியடா! சாதாரண மனிதன் அல்ல... என்று பாராட்ட இளைஞனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ...
இயல் 3
திருக்குறள்
கற்பவை கற்றபின்
1. படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
அ) வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
ஆ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
இ) நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
[விடை : இ) நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.]
2. துன்பப்படுபவர் ----
அ) தீக்காயம் பட்டவர்
இ) பொருளைக் காக்காதவர்
ஆ) தீயினால் சுட்டவர்
ஈ) நாவைக் காக்காதவர்
[விடை : ஈ) நாவைக் காக்காதவர்]
3. பினிவரும் நாலடியார் பாடனின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
'மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.'
அ) ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்
ஆ) நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
இ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
[விடை : ஆ) நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.]
4. கீழ்க்கானும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
பூக்களுக்கும் முட்களுக்கும் இடையில்
பழங்குகிறது யோசனை
பாசத்துக்கும் நியாயத்துக்கும் நடுவில்
நகங்குகிறது அறம்
இன்பத்துக்கும் பேராசைக்கும் நடக்கும்
போராட்டத்தில் வெடிக்கின்றன
வெளியில் குண்டுகளும் வீட்டில் சண்டைகளும்.....
ஆசை அறுத்தல் எளிதல்ல!
முயன்று பார்க்கலாம் வா!
அ) அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
ஆ) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
இ) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவெண்ணும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
[விடை : இ) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவெண்ணும்
துன்பத்துள் துன்பம் கெடின்.]
5. 'ஒப்பரவு' என்பதன் பொருள்
அ) அடக்கமுடையது
ஆ) பண்புடையது
இ) ஊருக்கு உதவுவது
ஈ) செல்வமுடையது
[விடை : இ) ஊருக்கு உதவுவது]
6. பொருத்துக.
அ) வாழ்பவன் -
i) காத்திருப்பவன்
ஆ) வாழாதவன் -
ii) மருந்தாகும் மரமானவன்
இ) தோன்றுபவன் -
iii) ஒத்ததறிபவன்
ஈ) வெல்ல நினைப்பவன் -
iv) புகழ் தரும் பண்புடையவன்
உ) பெரும் பண்புடையவன் -
v) இசையொழித்தவன்
vi) வீழ்பவன்
விடை :
அ) வாழ்பவன் - iii) ஒத்ததறிபவன்
ஆ) வாழாதவன் - v) இசையொழித்தவன்
இ) தோன்றுபவன் - iv) புகழ் தரும் பண்புடையவன்
ஈ) வெல்ல நினைப்பவன் - i) காத்திருப்பவன்
உ) பெரும் பண்புடையவன் - ii) மருந்தாகும் மரமானவன்
7. இலக்கணக்குறிப்புத் தருக.
அ) சுடச்சுடரும்
ஆ) சுடச்சுடரும் பொன்
இ) சுடச்சுட
விடை:
அ) சுடச்சுடரும் - உயர்வு சிறப்பும்மை
ஆ) சுடச்சுடரும் பொன் - செய்யும் எனும் வாய்பாட்டு வினையெச்சம்
இ) சுடச்சுட - அடுக்குத்தொடர்
8. விரைந்து கெடுபவன் யார்?
அ) பிறருடன் ஒத்துப்போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவர்.
ஆ) பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.
இ) பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.
ஈ) பிறருடன் ஒத்துப் போகாதவன். தன் வலிமை அறியாதவன். தன்னை உயர்வாக நினைப்பவன்.
[விடை: ஈ) பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.]
9. வேளாண்மை செய்தற்பொருட்டு - பொருள் கூறுக.
விடை
வேளாண்மை செய்தற்பொருட்டு - பிறருக்கு உதவி செய்வதற்கு.
10. பற்று நீங்கியவனுக்கு உண்டாவது - பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது
அ) பற்றுகள் பெருகும் -
பொருள்களின் இன்பம் பெருகும்
ஆ) பற்றுகள் அகலும் -
பொருள்களின் துன்பம் அகலும்
இ) பொருள்களின் நுண்பம் அகலும் -
பற்றுகள் அகலும்
ஈ) பொருள்களின் இன்பம் பெருகும் -
பற்றுகள் பெருகும்
[விடை: ஆ) பற்றுகள் அகலும் - பொருள்களின் துனிபம் அகலும்]
11. அருவினை - புணர்ச்சி விதி கூறுக.
விடை
அருவினை - அருமை + வினை
விதி : 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி, நிலைமொழில் ஈற்றில் 'மை' விகுதி கெட்டு அரு + வினை - அருவினை எனப் புணர்ந்தது.
குறுவினா
1. தீயினால் சுட்டதைப் புண் என்றும், நாவினால் சுட்டதை வடு என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?
விடை :
❖ தீயினால் சுட்ட புண்ணால் வடு உண்டானாலும் உள்ளே ஆறிவிடும்.
❖ நாவினால் சுட்ட புண்ணால் உடலின் புறத்தை வடு உண்டாகவிட்டாலும் உள்ளே ஆறாது.
2. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் - இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
விடை
உவமை : தன் எல்லா உறுப்புகளையும் (பாகங்கள்) மருந்தாகத் தரும் மரம்.
உவமேயம் : பெருந்தகையானிடம் உள்ள செல்வம்.
பொருத்தம் : பெருந்தகையானிடம் உள்ள செல்வமானது, தன் எல்லா உறுப்புகளையும் மருந்தாகத் தரும் மரத்தைப் போன்றது.
3. எதற்கு முன் நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது?
விடை
நாக்கு அடைத்தல், விக்கல் வருதல் இவற்றால் உயிர்க்கு இறுதி வருவதற்கு முன் நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும் என்று வாழ்க்கை நிலையாமைப் பற்றித் திருக்குறள் கூறுகிறது.
4. சீர்தூக்கி ஆராயவேளர்டிய ஆற்றல்கள் யாவை?
விடை
செயல் வலிமை, தன் வலிமை, பகை வலிமை, துணை வலிமை இவை நான்கும் ஆராய்ந்து செயல்பட வேண்டிய செயல்கள் ஆகும்.
5. மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?
விடை
❖ பெருந்தகையாளனிடம் இருக்கும் செல்வமே மருந்து.
❖ மருந்து மரமாக இருப்பவர் பெருந்தகையாளன்.
சிறுவினா
1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
விடை
அணி இலக்கணம்:
முதலில் இரு பொருட்களுக்கு ஒப்புமை கூறி, ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்.
சான்று:
தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
சான்று விளக்கம்:
ஒற்றுமை : தீயினாலும் புண் ஏற்படும், நாவினாலும் புண் ஏற்படும்.
வேற்றுமை : தீயினால் சுட்ட புண் உள்ளே ஆறும், நாவினால் சுட்ட புண் உள்ளே ஆறாது. எனவே, இது வேற்றுமை அணி ஆகும்.
2. புகழுக்குரிய பண்புகளாக நீவிர் கருதுவன யாவை? புகழின் பெருமையைப் பொதுமறை வழி நின்று கூறுக.
விடை
❖ அன்பு, அடக்கம், அறிவு, பேராண்மை, அருள், இரக்கம், ஈதல் என்பன புகழுக்குரிய பண்புகள்.
❖ இணையற்ற உயர்ந்த புகழைப் போல உலகத்தில் ஒப்பற்ற ஒன்றாக நிலைத்து நிற்பது வேறொன்றும் இல்லை. தோன்னால் புகழ் தரும் பண்புகளுடன் தோன்றுக! இல்லையெனில் தோன்றாமல் இருப்பதே நல்லது. பழியில்லாமல் வாழ்வரே வாழ்பவர்; புகழில்லாமல் வாழ்பவர் வாழாதவர்.
3. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் - இக்குறட்பாவை அலகிட்டு வாய்பாடு கூறுக.
விடை
இக்குறட்பாவில் ஈற்றுச்சீர் மலர் எனும் வாய்பாடு கொண்டு முடிந்துள்ளது.
4. சொற்பொருள் பின்வருநிலையணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக.
வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
விடை
அணி இலக்கணம்:
செய்யுளில் முன்னர் வந்த சொல் அதேப் பொருளில் பின்னர் பலமுறை வந்து பொருள் தருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
சான்று:
வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
பொருத்தம்:
இக்குறட்பாவில் வலி என்னும் சொல் மீண்டும் மீண்டும் பயின்று வந்து வலிமை என்னும் ஒரே பொருளைத் தருகிறது. எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
விளக்கம்:
செயல் வலிமை, தன் வலிமை, பகை வலிமை, துணை வலிமை இவை நான்கும் ஆராய்ந்து செயல்பட வேண்டிய செயல்கள் ஆகும்.
5. விரும்பியதை அடைவது எப்படி? குறள்வழி விளக்குக.
விடை
'வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.'
தாம் விரும்பியதை விரும்பியவாறே பெற முடியும் என்பதால், செய்ய முடிந்த தவத்தினை இப்பொழுதே இங்கேயே முயன்று செய்யலாம்.
நெடுவினா
1. கொடையில் சிறந்து விளங்க வள்ளுவம் கூறும் வழிகளை ஒப்புரவறிதல் அதிகாரம்வழி நிறுவுக.
விடை
'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு'
ஒருவர் விடாமுயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம் தகுதியுடையவருக்கு உதவி செய்வதற்கே ஆகும்.
"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்”
உயர்ந்தாரின் உலக நடைமுறையோடு ஒத்துப் போகிறவனே உயிர் வாழ்பவன். அவ்வாறு ஒத்துப் போகாதவன் செத்தவர்களுள் ஒருவனாகவே கருதப்படுவான்.
"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்”
பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளையும் மருந்தாக மக்களுக்குத் தரும் மரத்தைப் போன்றதாகும்.
உலக நடைமுறையோடு ஒத்துப்போதல், உறுப்புகளை மருந்தாகத் தரும் மரத்தைப் போல் இருத்தல் என்பன கொடையின் பண்பாக வள்ளுவம் கூறுகிறது.
2. அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும்' - இக்கூற்றை முப்பால்வழி விளக்குக.
விடை
‘நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது’
அடக்கமுடையவனின் உயர்வு:
நேர்மையின் வழி மாறாது அடக்காமல் இருப்பவனின் உயர்வானது, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது,
நா - காக்காவிட்டால் உண்டாகும் துன்பம்:
ஒருவர் எதனைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்க வேண்டும். அவ்வாறு காக்காமல் விட்டால் சொற்குற்றத்திற்கு ஆளாகித் துன்பப்படுவர்.
தீயினாலும், நாவினாலும் சுட்ட புண்ணின் தன்மை:
❖ தீயினால் சுட்ட புண்ணால் உடலில் வடு உண்டாகும். ஆனால் உள்புறத்தில் ஆறிவிடும். ஆனால், நாவினால் கட்ட புண்ணால் உடலின் புறத்தே வடு உண்டாகாது. ஆனால் மனதில் என்றும் ஆறாது.
❖ இவ்வாறு நேர்மை வழி மாறாது நடத்தல், நாவினைக் காத்தல், நாவினால் பிறரை துன்புறுத்தாமை என்னும் இத்தகைய அடக்கமுடைமையே ஒருவனை வாழ்விளில் உயர்த்தும் என்பது முப்பாலின் வழக்காகும்.
இணையச் செயல்பாடு
கலைகளும் பண்பாடும்
ஓவியங்களுடன் ஒரு பயணம்!
படிகள்:
● கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி Google art and
culture என்னும் இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
● ரவி வர்மா அவர்களின் ஓவியங்கள் திரையில் தோன்றும்.
● அவற்றைச் சுட்டி கொண்டு நகர்த்த ஓவியங்கள் 360° கோணத்தில் தோன்றும். நேரில் காணும் அனுபவத்தைப் பெறுக.
செயல்பாட்டின் படிநிலைக்கான படங்கள் :
செயல்பாட்டிற்கான உரலி
https://artsandculture.google.com/
streetview/raja-ravi-varma-
heritage-foundation-collection-
gallery-view/fQFxj6YrcBDJiw?sv_
Ing=77.59937292692939&sv_
lat=12.9757285677438&sv_
h=130.35395983915996&sv_p=
-9.169553531351482&sv_pid=_IDC-
OrBSvDSq8auvbrVtw&sv_z=
1.063906826543585
படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.