Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | தொழிற்சாலைகளின் வகைகள்

பொருளியல் - தொழிற்சாலைகளின் வகைகள் | 10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

தொழிற்சாலைகளின் வகைகள்

தொழிற்சாலைகளை கீழ்க்கண்ட வகைகளில் வகைப்படுத்தலாம்.

தொழிற்சாலைகளின் வகைகள்

தொழிற்சாலைகளை கீழ்க்கண்ட வகைகளில் வகைப்படுத்தலாம்.

அ. பயனர்கள்

வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது "நுகர்வோர் பண்டங்கள் துறை" என்றும் வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது "மூலதன பண்டங்கள் துறை" என்றும் அழைக்கப்படுகிறது. சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற பிற தொழில்களுக்கு மூலப்பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இத்தகைய தொழில்கள் அடிப்படை பண்டங்கள் தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆ. பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை

வேளாண் பதப்படுத்துதல், நெசவுத்துறை, ரப்பர் உற்பத்தி, தோல் பொருள்கள் போன்ற மூலப் பொருள்களை பயன்படுத்தும் அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துகின்றனர்.

இ. நிறுவன உரிமையாளர்கள்

தொழிற்சாலைகளானது தனியாருக்கு சொந்தமானதாகவும், பொது உரிமையாளர் (மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால்) தனியார் மற்றும் பொதுத்துறை (கூட்டுறவாக) இரண்டிற்கும் சொந்தமானதாகவும் அல்லது கூட்டுறவுக்கு சொந்தமானதாகவும் உள்ளன.

ஈ) அளவு

நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி, விற்பனை, முதலீடு அல்லது வேலைவாய்ப்பு அவற்றின் அளவின் அடிப்படையில் பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது நடுத்தரமாகவோ இருக்கலாம். சிறிய நிறுவனங்களை விட அளவில் சிறியதாக இருக்கும் மிகச்சிறிய நிறுவனங்களும் உள்ளன.

சிறிய நிறுவனங்கள் இரண்டு காரணங்களால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முதலாவதாக, இது பெரிய அளவிலான துறையை விட அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது. பெரிய நிறுவனங்களானது மிகவும் மேம்படுத்தப்பட்ட மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் அது போதுமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை . இரண்டாவதாக, சிறிய அளவிலான துறை குறைந்த எண்ணிக்கையிலான சலுகைப் பெற்றப் பின்னணியில் இருந்து ஏராளமான தொழில் முனைவோரை வெளிப்படுத்துகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் தொழில்மயமாதல் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சிறிய நிறுவனங்கள் புவியியல் ரீதியாக குறிப்பிட்ட இடங்களில் குவிந்து உற்பத்தி மற்றும் கற்றலின் மூலம் பெரிய நிறுவனங்களின் திறன் இல்லாவிட்டாலும் அதற்கு ஈடு கொடுக்கும் அளவில் உள்ளதென நம்பப்படுகிறது. இத்தகைய சிறிய நிறுவனங்களின் தொகுப்புகளே "தொழில் துறை தொகுப்புகள்" என்று அழைக்கப்படுகின்றன.


Tags : Economics பொருளியல்.
10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu : Types of Industries Economics in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் : தொழிற்சாலைகளின் வகைகள் - பொருளியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்