அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - அலகு | 8th Science : Chapter 1 : Measurement

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல்

அலகு

ஓர் அளவீட்டைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு நமக்கு மூன்று காரணிகள் தேவைப்படுகின்றன. அவை: கருவி, திட்ட அளவு மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலகு.

அலகு

ஓர் அளவீட்டைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு நமக்கு மூன்று காரணிகள் தேவைப்படுகின்றன. அவை: கருவி, திட்ட அளவு மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலகு.

மேற்காண் செயல்பாட்டில், புத்தகத்தின் நீளத்தை 30 செ.மீ எனக் கொள்வோம். இங்கு 'நீளம்' என்பது இயற்பியல் அளவு, 'அளவு கோல்' என்பது பயன்படுத்தப்படும் கருவி, '30' என்பது எண்மதிப்பு மற்றும் 'செ.மீ' என்பது அலகு ஆகும். இச் செயல்முறை அளவீடு எனப்படுகிறது. இச்செயல்பாட்டில் ஒரே மாதிரியான மதிப்புகள் கிடைத்திருக்காது.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுவிதமான அலகு முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றுள் பொதுவான முறைகள் பின்வருமாறு.

1. FPS முறை: (நீளம் - அடி, நிறை - பவுண்ட் மற்றும் காலம் - வினாடி).

2. CGS முறை (நீளம் - சென்டி மீட்டர், நிறை - கிராம் மற்றும் காலம் – வினாடி).

3. MKS முறை: நீளம் மீட்டர், நிறை கிலோகிராம் மற்றும் காலம் - வினாடி).

CGS, MKS மற்றும் SI அலகு முறைகள் மெட்ரிக் அலகுமுறை வகையைச் சார்ந்தவை. ஆனால் FPS அலகுமுறை மெட்ரிக் அலகுமுறை அல்ல. இது ஆங்கில இயற்பியலாளர்கள் பயன்படுத்திய அலகு முறை ஆகும்.

Tags : Measurement | Chapter 1 | 8th Science அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 1 : Measurement : Unit Systems Measurement | Chapter 1 | 8th Science in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல் : அலகு - அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல்