Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | இறையாண்மையின் பண்பியல்புகள்

அரசியல் அறிவியல் - இறையாண்மையின் பண்பியல்புகள் | 11th Political Science : Chapter 3 : Basic Concepts of Political Science

   Posted On :  25.09.2023 05:56 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்

இறையாண்மையின் பண்பியல்புகள்

அரசியல் அறிவியல் : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்

இறையாண்மையின் பண்பியல்புகள்:


(அ) நிரந்தரமானது (Permanence)

இறையாண்மையின் முக்கிய பண்பாக அதன் நிரந்தரத்தன்மை திகழ்கிறது. அரசு இயங்கும் வரை இறையாண்மை நீடிக்கிறது. மன்னர் இறப்பதாலும், அரசாங்கம் செயல் இழந்து போவதாலும் இறையாண்மை பாதிக்கப்படுவதில்லை . இதன் எதிரொலியாகவே, "மன்னர் இறந்துவிட்டார், ஆனாலும் அரசபீடம் நீண்டு வாழ்க" என்று இங்கிலாந்து குடிமக்கள் கூறுகின்றார்கள். 

(ஆ) பிரத்தியோகமானது (Exclusiveness)

ஒர் சுதந்திர அரசில், இரண்டு இறையாண்மைகள் இயங்காது, அப்படி இருக்குமேயானால் அரசின் ஒற்றுமையானது சீர்குலைந்துவிடும். 

(இ) அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியது (All comprehensiveness)

ஒவ்வொரு தனிமனிதனும் மற்றும் தனிமனிதர்கள் அங்கம் வகிக்கக்கூடிய குழுமமும் அரசின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும். குழுமங்கள் அல்லது சங்கங்கள் அதிக வலிமை வாய்ந்ததாக இருந்தாலும், பணம் படைத்ததாக இயங்கினாலும் இறையாண்மையின் அதிகாரத்தைத் தடுக்கவோ அல்லது அதற்குக் கீழ்படியாமலோ இருக்க முடியாது. 

(ஈ) மாற்றித்தர இயலாதது (Inalienability)

இறையாண்மை என்பது அரசின் உயிர் மற்றும் ஆன்மாவாக விளங்குகிறது. இது அரசை அழிக்காமல் இறையாண்மையை மாற்றித்தர முடியாததாக விளங்குகிறது. 

(உ) ஒற்றுமை மற்றும் எக்காலத்திலும் நீடித்திருக்கும் தன்மை (Unity and Everlasting)

இறையாண்மையின் தனித்தன்மை அதன் ஒற்றுமையில் உள்ளது. இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செயல்படுவதில்லை . மாறாக அது அரசு இயங்கும் வரை நீடித்திருக்கும் அழியாததன்மை கொண்டதாகும். 

(ஊ) பிரிக்கமுடியாதது (Indivisibility)

இறையாண்மை என்பது பிரிக்க முடியாத தன்மையைக் கொண்டதாகும். இத்தன்மையே இறையாண்மையின் உயிரோட்டமாக விளங்குகிறது. 

(எ) முழுமைத்தன்மை (Absoluteness) 

இறையாண்மை என்பது நிபந்தனையற்றதாகவும், அளவிட முடியாததுமாக விளங்குகிறது. மேலும் இது கீழ்பணிதலுக்கு அப்பாற்பட்டது. தான் விரும்பிய எதையும் சாதிக்கக் கூடியதாக விளங்குகிறது. 

(ஏ) சுயமானத்தன்மை (Originality)

இறையாண்மை தனது அதிகாரத்தினை சுய உரிமையினை மையமாகக் கொண்டு பெற்றிருக்கிறதே தவிர, யாருடைய தயவிலும் அல்ல.

Tags : அரசியல் அறிவியல்.
11th Political Science : Chapter 3 : Basic Concepts of Political Science : We shall now study the characteristics of Sovereignty. What are they? in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் : இறையாண்மையின் பண்பியல்புகள் - அரசியல் அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்