Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சரியான விடையினைத் தேர்வு செய்க

பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் - சரியான விடையினைத் தேர்வு செய்க | 11th Chemistry : UNIT 10 : Chemical bonding

   Posted On :  01.01.2024 06:55 am

11 வது வேதியியல் : அலகு 10 : வேதிப் பிணைப்புகள்

சரியான விடையினைத் தேர்வு செய்க

11 வது வேதியியல் : அலகு 10 : வேதிப் பிணைப்புகள் : சரியான விடையினைத் தேர்வு செய்க

மதிப்பீடு:


சரியான விடையினைத் தேர்வு செய்க

1. பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?

) XeF4

) AlCl3

) SF6

) SCl2

[விடை : ) SCl2]


2. மூலக்கூறில், OA, C மற்றும் OB ஆகியவற்றினுடைய முறைசார் மின்சுமைகள் முறையே

) -1, 0, + 1

) +1, 0, -1

) -2, 0, +2

) 0, 0, 0

[விடை : ) 0, 0, 0]


3. பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் பற்றாக்குறைச் சேர்மம்?

) PH3

) (CH3) 2

) BH3

) NH3

[விடை : ) BH3]


4. பின்வருவனவற்றுள் π பிணைப்பு காணப்படாத மூலக்கூறு எது?

) SO2

) NO2

) CO2

 ) H2O

[விடை : ) H2O]


5. 2- பியுட்டைனலில் (2-butynal) உள்ள சிக்மா (σ) மற்றும் பை (π) பிணைப்புகளின் எண்ணிக்கைக்கு இடையேயுள்ளவிகிதம்

) 8/3

) 5/3

) 8/2

) 9/2

[விடை : ) 8/3]


6. பின்வருவனவற்றுள், சல்பர் டெட்ரா புளூரைடு மூலக்கூறின் பிணைப்புக்கோணங்களாக இருக்க வாய்ப்புள்ளவை எவை?

) 120°,80° 

) 109°.28

) 90°

) 89°,117°

[விடை : ) 89°,117°]


7. கூற்று: ஆக்சிஜன் மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது.

காரணம்: அதன் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் இரண்டு தனித்த எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன

) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R), ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்கம்.

) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) ஆனது, கூற்று (A) க்கான சரியான விளக்கமல்ல.

) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு.

) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு

[விடை : ) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு.]


8. இணைதிற பிணைப்புக் கொள்கையின்படி, இரண்டு அணுக்களுக்கிடையே எந்நிலையில் பிணைப்பு உருவாகும்

) முழுவதும் நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருத்தும்போது 

) சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது

) பிணைப்பில் ஈடுபடாதஅணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது 

) காலியான அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது

[விடை : ) சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது]


9. ClF3, NF3 மற்றும் BF3 மூலக்கூறுகளில் உள்ள குளோரின், நைட்ரஜன் மற்றும் போரான் அணுக்கள் ஆகியன

) sp3 இனக்கலப்படைந்துள்ளன

) முறையே sp3 , sp3 மற்றும் sp2 இனக்கலப்படைந்துள்ளன.

) sp2 இனக்கலப்படைந்துள்ளன

) முறையே sp3d, sp3 மற்றும் sp2 இனக்கலப்படைந்துள்ளன.

[விடை : ) முறையே sp3d, sp3 மற்றும் sp2 இனக்கலப்படைந்துள்ளன.]


10. ஒரு S மற்றும் மூன்று P ஆர்பிட்டால்கள் இனக்கலப்பிற்கு உட்படும்போது,

) ஒன்றுக்கொன்று 90° ல் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாகும்.

) ஒன்றுக்கொன்று 109°  28'-ல் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாகும்.

) ஒரே தளத்தில் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாகும்.

) இவற்றில் எதுவுமில்லை

[விடை : ) ஒன்றுக்கொன்று 109°  28'-ல் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாகும்.]


11. பின்வருவனவற்றுள் எது, அவற்றின் பிணைப்புத்தரங்களின் ஏறுவரிசையில் அமைந்த சரியான வரிசையை குறிப்பிடுகிறது.

) C2 < C22- < O22- < O2

) C22- < C2+ < O2 < O22-

) O22- < O2 < C22- < C2+

) O22- < C2+ < O2 < C22-

[விடை : ) O22- < C2+ < O2 < C22-]


12. PCl5 இல் உள்ள மைய அணுவின் இனக்கலப்பின்போது, கலப்பில் ஈடுபடும் ஆர்பிட்டால்கள்.

) s, px, py, dx2, dx2-y2

) s, px.py, pxy.dx2-y2

) s, px, py, pz, dx2-y2

) s, px, py, dxy , dx2-y2

[விடை : ) s, px, py, pz, dx2-y2]


13. ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றில் O-O பிணைப்பு நீளத்தின் சரியான வரிசை 

) H2O2 > O3  > O2 

) O2 > O3 > H2O2

) O2 > H2 O2 > O3

) O3 > O2 > H2 O2

[விடை : ) O2 > O3 > H2 O2]


14. பின்வருவற்றில் எது டையா காந்தத்தன்மை கொண்டது?

) O2

) O22-

) O2+

) இவற்றில் ஏதுமில்லை.

[விடை : ) O22-]


15. ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், அதன் எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

) மூன்று

) நான்கு

) பூஜ்ஜியம்

) கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறிய முடியாது.

[விடை : ) மூன்று]


16. IF5 மூலக்கூறின் வடிவம் மற்றும் இனக்கலப்பு

) முக்கோண இருபிரமிடு வடிவம், sp3d2 

) முக்கோண இருபிரமிடு வடிவம், sp3d

) சதுரபிரமிடு வடிவம், sp3d2

) எண்முகி வடிவம், sp3d2

[விடை : ) சதுரபிரமிடு வடிவம், sp3d2]


17. பின்வருவனவற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடு

) sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும் அவை ஒன்றுக்கொன்று 109O 28' கோணத்தில் அமைந்துள்ளன.

) dsp2 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும் அவற்றில் எந்த இரண்டுக்கும் இடையே உள்ள கோணம் 90O

) ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமற்றவை. இந்த ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களில், மூன்று 120O, கோணத்திலும், மீதமுள்ள இரண்டு ஆர்பிட்டால்கள் மற்ற மூன்று ஆர்பிட்டால்கள் அமைந்துள்ள தளத்திற்கு செங்குத்தாகவும் அமைந்துள்ளன.

) இவற்றில் எதுவுமில்லை

[விடை : ) ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமற்றவை. இந்த ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களில், மூன்று 120O, கோணத்திலும், மீதமுள்ள இரண்டு ஆர்பிட்டால்கள் மற்ற மூன்று ஆர்பிட்டால்கள் அமைந்துள்ள தளத்திற்கு செங்குத்தாகவும் அமைந்துள்ளன.]


18. ஒத்த இனக்கலப்பு, வடிவம் மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை எண்ணிக்கையை கொண்ட மூலக்கூறுகள்

) SeF4, XeO2 F2

) SF4, Xe F2

) XeOF4, TeF4

) SeCl4, XeF4

[விடை : ) SeF4, XeO2 F2]


19. பின்வரும் மூலக்கூறுகள்/அயனிகளில் BF3, NO2-, H2O எவற்றில் உள்ளமைய அணு sp2 இனக்கலப்பில் உள்ளது

) NH2-மற்றும் H2O

) NO2- மற்றும் H2O

) BF3 மற்றும் NO2-

) BF3 மற்றும் NH2-

[விடை : ) BF3 மற்றும் NO2-]


20. இரண்டு அயனிகள் NO3- மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது?

) வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன.

) ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் ஒத்துள்ளன.

) ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பில் வேறுபடுகின்றன.

) இவற்றில் எதுவுமில்லை.

[விடை : ) வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன.]


21. 2,3 பெண்டாடையீனில் (2,3 pentadiene) வலமிருந்து இடமாக உள்ள ஐந்து கார்பன் அணுக்களின் இனக்கலப்பு வகைகள்.

) sp3, sp2, sp, sp2, sp3

) sp3, sp, sp, sp, sp3

) sp2, sp, sp2,sp2, sp3

) sp3, sp3, sp2, sp3, sp3

[விடை : ) sp3, sp2, sp, sp2, sp3]


22. Xe F2 ஆனது --------- உடன் ஒத்த வடிவமுடையது.

) SbCl2

) BaCl2

) TeF2

) ICl-2

[விடை : ) ICl-2]


23. மீத்தேன், ஈத்தேன், ஈத்தீன் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றில் உள்ள இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் s- பண்பு சதவீதங்கள் முறையே

) 25, 25, 33.3, 50

) 50, 50, 33.3, 25

) 50, 25, 33.3, 50

) 50, 25, 25, 50

[விடை : ) 25, 25, 33.3, 50]


24. பின்வரும் மூலக்கூறுகளில் எது கார்பன்டையாக்சைடின் வடிவத்தை ஒத்துள்ளது?

) SnCl2 

) NO2 

) C2 H2

) இவை அனைத்தும்

[விடை : ) C2 H2]


25. VSEPR கொள்கைப்படி, வெவ்வேறு வகை எலக்ட்ரான்களுக்கு இடைப்பட்ட விளக்கம் --------- வரிசையில் அமைகிறது.

) 1.p - 1.p > b.p-b.p > l.p-b.p

) b.p-b.p > b.p-l.p > l.p-b.p

) 1.p-.1.p > b.p-l.p > b.p-b.p 

) b.p-b.p > 1.p-l.p > b.p-l.p

[விடை : ) 1.p-1.p > b.p-l.p > b.p-b.p ]


26. ClF3 இன் வடிவம்

) முக்கோணசமதளம் 

) பிரமிடுவடிவம்

) “T” வடிவம்

) இவற்றில் ஏதுமில்லை

[விடை : ) “T” வடிவம்]


27. பூஜ்ஜிய மற்ற இரு முனை திருப்புத் திறனைக் காட்டுவது

) CO2

) p-டைகுளோரோபென்சீன்

) கார்பன்டெட்ராகுளோரைடு 

) நீர்

[விடை : ) நீர்]


28. பின்வரும் நிபந்தனைகளில் எது உடனிசைவு அமைப்புகளுக்கு சரியானது அல்ல?

) பங்கேற்கும் வடிவமைப்புகள் கண்டிப்பாக ஒரே எண்ணிக்கையிலான தனித்த எலக்ட்ரான்களை கொண்டிருக்க வேண்டும்.

) பங்கேற்கும் வடிவமைப்புகள் ஒத்த ஆற்றல்களை கொண்டிருக்க வேண்டும்.

) உடனிசைவு இனக்கலப்பு  வடிவமைப்பானது, பங்கேற்கும் எந்த அமைப்பை விடவும் அதிக ஆற்றலை கொண்டிருக்க வேண்டும்.

) இவற்றில் எதுவுமில்லை

[விடை : ) உடனிசைவு இனக்கலப்பு  வடிவமைப்பானது, பங்கேற்கும் எந்த அமைப்பை விடவும் அதிக ஆற்றலை கொண்டிருக்க வேண்டும்.]


29. பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம்

) NH4Cl 

) NH3

) NaCl

)இவற்றில் ஏதுமில்லை

[விடை : ) NH4Cl]


30. CaO மற்றும் NaCl ஆகியன ஒரே படிக அமைப்பையும், ஏறத்தாழ ஒரே ஆரத்தையும் கொண்டுள்ளன. NaCl இன் படிகக்கூடு ஆற்றலை U எனக்கொண்டால், CaO இன் தோராயபடிகக்கூடு ஆற்றல் மதிப்பு 

) U 

) 2U

) U/2

) 4U

[விடை : ) 4U]


Tags : Multiple choice questions பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள்.
11th Chemistry : UNIT 10 : Chemical bonding : Choose the best answer: Chemistry: Chemical bonding Multiple choice questions in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 10 : வேதிப் பிணைப்புகள் : சரியான விடையினைத் தேர்வு செய்க - பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 10 : வேதிப் பிணைப்புகள்