Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | சதவீதங்களைத் தசம எண்ணாக மாற்றுதல்

மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - சதவீதங்களைத் தசம எண்ணாக மாற்றுதல் | 7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும்

சதவீதங்களைத் தசம எண்ணாக மாற்றுதல்

தசம எண்களைச் சதவீதங்களாக மாற்றுவதை நாம் பார்த்தோம். அதன் தலைகீழ்ச் செயல்முறையை இப்பொழுது காண்போம். கொடுக்கப்பட்ட சதவீதத்தை நாம் தசம எண்களாக மாற்றலாம்.

சதவீதங்களைத் தசம எண்ணாக மாற்றுதல்

தசம எண்களைச் சதவீதங்களாக மாற்றுவதை நாம் பார்த்தோம். அதன் தலைகீழ்ச் செயல்முறையை இப்பொழுது காண்போம். கொடுக்கப்பட்ட சதவீதத்தை நாம் தசம எண்களாக மாற்றலாம்.


எடுத்துக்காட்டு 2.11    

கொடுக்கப்பட்ட சதவீதத்தைத் தசம எண்களாக மாற்றவும்.

(i) 58%  (ii) 8%  (iii) 30%  (iv) 120%    (v) 1.25%

தீர்வு:

 (i) 58% =58/100 = 0.58

(ii) 8% = 8/100 = 0.08

(iii) 30% = 30/100 = 0.3

(iv) 120% = 120/100 = 1.2

(v) 1.25% = 1.25/100 = 0.0125

மேலேயுள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்து, சதவீதத்தைத் தசமங்களாக மாற்ற நாம் முதலில் அதைப் பின்னமாக மாற்றித் தீர்வு பெறுகிறோம்.


இவற்றை முயல்க

பின்வரும் சதவீதங்களைத் தசமங்களாக எழுதுக.

(i) 3%   (ii) 25% (iii) 80% (iv) 67% (v) 17.5% (vi) 135% (vii) 0.5%

விடை :

(i) 3% = 3/100 = 0.03

(ii) 25% = 25/100 = 0.25

(iii) 80% = 80/100 = 0.8

(iv) 67% = 67/100 = 0.67

(v) 17.5% = 17.5 / 100 = 0.175

 (vi) 135% = 135/100 = 1.35

(vii) 0.5% =  0.5/100 = 0.005

 

எடுத்துக்காட்டு 2.12    

மலர் 25 மீட்டர் துணிச் சுற்றலிருந்து 1.75 மீட்டர் துணியை வாங்கினார் எனில், மலர் வாங்கிய துணியின் அளவைச் சதவீதத்தில் கூறுக

தீர்வு  

துணியின் மொத்த நீளம் = 25 மீ 

வாங்கிய துணியின் நீளம் = 1.75 மீ

வாங்கிய துணியின் சதவீதம் = 1.75/25×100/100 = 175/25×100 = 7/100 = 7%

பரப்பளவைச் சதவீதமாகக் கூறுதல்

பரப்பளவை மதிப்பீடு செய்வதற்குச் சதவீதங்கள் நமக்கு உதவுகின்றன


எடுத்துக்காட்டு 2.13    

படம் 2.3 இல் நீல வண்ண நிழலிடப்பட்டப் பகுதியின் சதவீதம் காண்க?


தீர்வு

படம் 2.3 இல் நிழலிடப்பட்டப் பகுதியின் பின்னமானது = 2/4 =1/2

படத்தில் பாதி பகுதியானது நீல நிறமாக நிழலிடப்பட்டுள்ளது.

ஆகவே, நிழலிடப்பட்டப் பகுதியின் சதவீதம் = 1/2 × 100% = 50% 

எனவே, படம் 2.3 இல் 50% பகுதி நிழலிடப்பட்டுள்ளது.



Tags : Term 3 Chapter 2 | 7th Maths மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest : Converting Percentages to Decimals Term 3 Chapter 2 | 7th Maths in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும் : சதவீதங்களைத் தசம எண்ணாக மாற்றுதல் - மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும்