மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - தசம எண்களைச் சதவீதமாக மாற்றுதல் | 7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest
தசம எண்களைச் சதவீதமாக மாற்றுதல்
நாம் பின்னங்களைச் சதவீதமாக மாற்றுவது எப்படியென்று பார்த்தோம். இப்போது தசம எண்களை எவ்வாறு சதவீதமாக மாற்றுவது என்பதைக் கற்றுக்கொள்வோம்.
எடுத்துக்காட்டு 2.10
கொடுக்கப்பட்ட தசம எண்களைச் சதவீதமாக மாற்றவும்.
(i) 0.85 (ii) 0.05 (iii) 0.3 (iv) 0.025 (v) 2.25
தீர்வு :
(i) 0.85=0.85×100% =85/100×100% = 85%
(ii) 0.05=5/100×100% = 5%
(iii) 0.3 = 3/10×100% = 30%
(iv) 0.025=25/1000×100%=25/10%=5/2% அல்லது 2.5%
(v) 2.25 = 225/100×100% = 225%
இவற்றை முயல்க
பின்வரும் தசம எண்களைச் சதவீதமாக மாற்றவும்.
(i) 0.25 (ii) 0.07 (iii) 0.8 (iv) 0.375 (v) 3.75
விடை
(i) 0.25 = 25/100 = 25%
(ii) 0.7 = 7/100 = 7%
(iii) 0.8 = 80/100 = 80%
(iv) 0.375 = 375/1000 = 375/10 × 1/100 = 37.5/100 = 3.75%
(v) 3.75 = 375/100 = 375%