கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.2 (தசம எண்களைச் சதவீதமாக மாற்றுதல், சதவீதங்களைத் தசம எண்ணாக மாற்றுதல்) | 7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest
பயிற்சி 2.2
1. பின்வரும் ஒவ்வொரு சதவீத்தையும் தசம எண்களாக மாற்றுக.
i) 21%
ii) 93.1%
iii) 151%
iv) 65%
v) 0.64%.
விடை :
i) 21% = 21 / 100 = 0.21
ii) 93.1% = (93.1 / 100) × (10 / 10) = 931 / 100 = 0.931
iii) 151% = 151 / 100 = 1.51
iv) 65% = 65 / 100 = 0.65
v) 0.64% = (0.64 / 100) × (100 / 100) = 64 / 10000 = 0.0064
2. பின்வரும் ஒவ்வொரு தசம எண்ணையும் சதவீதமாக மாற்றுக.
i) 0.282
ii) 1.51
iii) 1.09
iv) 0.71
v) 0.858
விடை :
i) 0.282 = 282 / 1000 = 282 / 10 % = 28.2%
ii) 1.51 = 151 / 100 = 151%
iii) 1.09 = 109 / 100 = 109%
iv) 0.71 = 71 / 100 = 71%
iv) 0.858 = 858 / 1000 = 858 / 10 % = 85.8%
3. ஒரு தேர்வில் ஒரு மாணவர் 75% மதிப்பெண்களைப் பெற்றார் எனில், அதைத் தசமமாக மாற்றி அமைக்க
விடை :
மாணவர் பெற்ற மதிப்பெண் = 75%
= 75 / 100
= 0.75
4. ஒரு கிராமத்தில் 70.5% மக்கள் கல்வியறிவைப் பெற்றிருந்தனர் எனில், அதைத் தசம எண்ணாக மாற்றுக.
விடை :
கல்வியறிவைப் பெற்ற மக்கள் = 70.5%
= (70.5 / 100) × (10 / 10)
= 705 / 1000
= 0.705
5. ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் 86% ஓட்டங்களைச் சேகரித்தால், அதைத் தசமமாக எழுதுக.
விடை :
ஓட்டங்களின் சதவீதம் = 86%
86 / 100
= 0.86
6. ஒரு பள்ளியின் கொடிக் கம்பத்தின் உயரம் 6.75 மீ எனில், அதைச் சதவீதமாக மாற்றுக.
விடை :
கொடி கம்பத்தின் உயரம் = 6.75%
= 675 / 100
= 675 %
7. இரண்டு இரசாயனப் பொருட்களின் எடைகள் 20.34 கிராம் மற்றும் 18.78 கிராம் எனில், அவைகளின் எடையின் வித்தியாசத்தைக் சதவீதத்தில் கூறுக.
விடை :
இரண்டு இரசாயனப் பொருட்களின் எடைகள் 20.34 கிராம் மற்றும் 18.78 கிராம்
வித்தியாசம் = 20.34 - 18.78
= 1.56
வித்தியாசம் = 1.56
20.34
18.78
_______
1.56
_______
1.56 / 100
= 156 %
8. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள படத்தில், நிழலிடப்பட்ட பகுதியின் சதவீதத்தைக் காண்க.
விடை :
மொத்த முக்கோணங்கள் = 4
நிழலிடப்பட்ட முக்கோணம் = 1
நிழலிடப்பட்ட பகுதியின் சதவீதம் = (1 / 4) × (25 / 25)
= 25 / 100
= 25 %
கொள்குறி வகை வினாக்கள்
9. 142.5% ஐச் தசமமாக மாற்றினால்
i) 1.425
ii) 0.1425
iii) 142.5
iv) 14.25
விடை : i) 1.425
10. 0.005 ஐச் சதவீதமாக மாற்றினால்
i) 0.005%
ii) 5%
iii) 0.5%
iv) 0.05%
விடை : iii) 0.5%
11. 4.7 இன் சதவீத வடிவம்
i) 0.47%
ii) 4.7%
iii) 47%
iv) 470%
விடை : iv) 470%
விடை :
பயிற்சி 2.2
1. (i) 0.21 (ii) 0.931 (iii) 1.51 (iv) 0.65 (v) 0.0064
2. (i) 28.2% (ii) 151 % (iii) 109 % (iv) 71 % (v) 85.8 %
3. 0.75
4. 0.705
5. 0.86
6. 675%
7. 156%
8. 25%
கொள்குறி வகை வினாக்கள்
9. 1.425
10. 0.5 %
11. 470 %