கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.3 ( அன்றாட வாழ்க்கையில் சதவீதம்) | 7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest
பயிற்சி 2.3
1. ஒரு புத்தகக் கடையிலுள்ள 70 பத்திரிகைகளில் 14 பத்திரிகைகள் நகைச்சுவை பத்திரிகைகள் எனில், நகைச்சுவை பத்திரிகைகளின் சதவீதம் காண்க.
விடை :
நகைச்சுவை பத்திரிக்கைகள் = 14 / 70
= 1 / 5
நகைச்சுவை பத்திரிக்கைகளின் சதவீதம்
= (1 / 5) × (20 / 20)
= 20 / 100
= 20%
2. ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை?
விடை :
கொள்ளளவு = 50 லிட்டர்கள்
தற்போது, = 30% தண்ணீர் நிரம்பியது 50 லி.
= (30 / 100) × 50
= 15 லிட்டர்கள்
இன்னும் 50% தண்ணீர் நிரம்ப = 50% ல் 50
= (50 / 100) × 50
= 25 லிட்டர்கள்
தேவையான அளவு = 25 - 15 லிட்டர்கள்
= 10 லிட்டர்கள்
3. கருண் என்பவர் ஒருசோடிக் காலனிகளை 25% விலையில் வாங்கினார். அவர் செலுத்திய தொகை ₹ 1000 எனில், குறிக்கப்பட்ட விலையைக் காண்க.
விடை :
x என்பது குறிக்கப்பட்ட விலை என்க
தள்ளுபடி விலை = x – x × (25 / 100)
தள்ளுபடி = ₹ 1000
⇒ x – x × (25 / 100) = 1000
x (x/4) = 1000
(4x -x) / 4 = 1000
3x / 4 = 1000
x = (1000 × 4) / 3
= 1333.33
x = ₹ 1334
4. ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முகவர் அவர் சேகரிக்கும் அடிப்படை பிரிமியத்தில் 5% தரகாகப் பெறுகிறார். அவர் ₹ 4800 ஐப் பிரிமியமாக வசூலித்தார் எனில், அவர் பெறுகின்ற தரகுத் தொகை
விடை :
தரகு சதவீதம் 5%
வசூலித்த தொகை = ₹ 4800
பெற்ற தரகு தொகை = 4800 ல் 5%
= (5 / 100) × 4800
= ₹ 240
5. ஓர் உயிரியல் வகுப்பு மாணவர்கள் குழு உள்ளுரிலுள்ள ஒரு புல்வெளியில் ஆய்வு செய்தனர். அவற்றுள் 40 இல் 30 பூக்கள் வற்றாதவை எனில், வற்றாத பூக்களின் சதவீதம் காண்க.
விடை :
பூக்களின் எண்ணிக்கை = 40
வற்றாத பூக்கள் = 30
வற்றாத பூக்களின் சதவீதம் = 30 / 40
= (3 / 4) × (25 / 25)
= 75 / 100
= 75 %
6. இஸ்மாயில் என்பவர் சில வகையான மணிகளை வாங்குவதற்காகச் சரக்கு அனுப்பாணையை அனுப்பினார். மொத்தம் 50 மணிகளில் 15 மணிகள் மட்டுமே பழுப்பு நிறம் எனில், பழுப்பு நிற மணிகளின் சதவீதத்தைக் காண்க.
விடை :
மணிகளின் எண்ணிக்கை = 50
பழுப்பு நிற மணி = 15
பழுப்பு நிற மணிகளின் சதவீதம் = 15 / 50
= (15 / 50) × (2 × 2)
= 30 / 100
= 30%
7. ராமு என்பவர் ஆங்கிலப் பாடத்தில் 25 இக்கு 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40 இக்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80 இக்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்?
விடை :
i) ஆங்கிலத்தில் பெற்ற சதவீதம் = 20 / 25
= (25 × 4) / (25 × 4)
= 80 / 100
= 80%
ii) அறிவியலில் பெற்ற சதவீதம் = 30 / 40
= (3 / 4) × (25 / 25)
= 75 / 100
= 75%
iii) கணிதத்தில் பெற்ற சதவீதம் = 68 / 80
= (17 / 20) × (5 / 5)
= 85 / 100
= 85%
கணித பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்.
8. பீட்டர் என்பவர் ஒரு தேர்வில் 280 மதிப்பெண்களைப் பெற்றுத் தோல்வி அடைந்தார். அவர் இன்னும் 20 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், மொத்த மதிப்பெண்களில் 50% பெற்று வெற்றி பெற்றிருப்பார் எனில், மொத்த மதிப்பெண்களைக் காண்க.
விடை :
50% மதிப்பெண் = 280 + 20 = 300
100% மதிப்பெண் = 50% மதிப்பெண் × 2
= 300 × 2
= 600
9. கயல் என்பவர் முதல் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 225 மதிப்பெண்களும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 260 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவரது மதிப்பெண்கள் அதிகரிப்பின் சதவீதத்தைக் காண்க.
விடை :
முதல் திருப்புதல் = 225 / 500
முதல் திருப்புதலில் பெற்ற சதவீதம் = 225 / (5 × 100)
= 45 / 100
= 45%
இரண்டாம் திருப்புதல் = 225 / 500
இரண்டாம் திருப்புதலில் பெற்ற சதவீதம்
= 265 / 5
= 53 / 100
= 53%
அதிகரிப்பின் சதவீதம் = 53 - 45
= 8%
10. ரோஜா மாதச் சம்பளமாக ₹ 18,000 ஐப் பெறுகிறார். அவர் தனது சம்பளத்தில் முறையே கல்வி, சேமிப்பு, மற்றும் பிற செலவினங்களுக்கு 2 : 1 : 3 என்ற விகிதத்தில் செலவு செய்கிறார் எனில், அவரது செலவைச் சதவீதமாகக் கூறுக.
விடை :
ராஜாவின் சம்பளம் = ₹ 18000
மொத்த விகிதம் = 6
கவ்வியின் விகிதம் = 2 / 6
சேமிப்பின் விகிதம் = 1 / 6
மற்ற செலவின் விகிதம் = 3 / 6
* கல்வியின் சதவீதம் = 18000 × (2 / 6)
= ₹ 6000
கல்வியின் சதவீதம் = 2 / 6
= (1 / 3) × (100 / 100)
= 100 / 3 %
= 33.33%
* சேமிப்பு = 18000 × (1 / 6)
= ₹ 3000
சேமிப்பின் சதவீதம் = (1 / 6) × (100 / 100)
= 100 / 6 %
= 16.67%
* பிற செலவு
= 18000 × (3 / 6)
= ₹ 9000
* பிற செலவின சதவீதம் = 3 / 6
= (1 / 2) × (50 / 50)
= 50 / 100
= 50%
விடை :
பயிற்சி 2.3
1. 20%
2. 10 லிட்டர்கள்
3. ₹ 1334
4. ₹ 240
5. 75%
6. 30%
7. கணிதபாடத்தில் 85 %
8. 600
9. 8%
10. கல்வி − ₹ 6,000 மற்றும் 33.33%; சேமிப்பு – ₹ 3,000 மற்றும் 16.66%; பிற செலவினங்கள் – ₹ 9,000 and 50%