Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | சதவீதத்தைப் பின்னமாக மாற்றுதல்

மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - சதவீதத்தைப் பின்னமாக மாற்றுதல் | 7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest

   Posted On :  08.07.2022 05:21 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும்

சதவீதத்தைப் பின்னமாக மாற்றுதல்

சதவீதம் என்பது ஓர் எண் அல்லது பகுதியில் 100 ஐக் கொண்ட ஒரு விகிதம் எனக் கூறலாம். இங்கு பல்வேறு சதவீதங்களைப் பின்னமாக மாற்றுவது குறித்துக் காண்போம்.

சதவீதத்தைப் பின்னமாக மாற்றுதல்

சதவீதம் என்பது ஓர் எண் அல்லது பகுதியில் 100 ஐக் கொண்ட ஒரு விகிதம் எனக் கூறலாம். இங்கு பல்வேறு சதவீதங்களைப் பின்னமாக மாற்றுவது குறித்துக் காண்போம்.


எடுத்துக்காட்டு 2.5   

பின்வரும் சதவீதத்தைப் பின்னங்களாக எழுதவும்

(i) 60%

(ii) 125%

(iii) 3/5%

(iv) 15/10%

(v) 28 1/3% 

தீர்வு



இவற்றை முயல்க

சதவீதத்தைப் பின்னங்களாக மாற்றவும்.

(i) 50%

(ii) 75%

(iii) 250%

(iv) 30 (1/5) %

(v) 7/20 %

(vi) 90%

விடை :

(i) 50% = 50 / 100 = 5 / 10 = 1/2

(ii) 75% = 75 / 100 = 3 / 4

(iii) 250% = 250 / 100 = 25 / 10 = 5 / 2

(iv) 30 (1/5) % = 30( 1/5 )/100 = (151/5) / 100 = 151 / 500

(v) 7/20 % = (7/20) / 100 = 7 / (20×100) = 7/2000

 (vi) 90% = 90 / 100 = 9 / 10 

 

எடுத்துக்காட்டு 2.6  

ஒரு கணக்கெடுப்பில் ஐந்து பேரில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சோப்பை விரும்புவதாகக் கூறினார். அதனைச் சதவீதமாக மாற்று

தீர்வு

பின்னம் = 1/5

சதவீதம் = 1/5 × 100% = 20%


எடுத்துக்காட்டு 2.7  

 ஓர் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 75 மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வில் பங்குபெற்றனர். அவர்களில் 72 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதத்தைக் காணவும்.

தீர்வு 

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 75 

தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 

மாணவர்களின் எண்ணிக்கை = 72

சதவீதம் = 72/75 × 100%

        = 24/25 × 100%

        = 24 × 4%

        = 96%

குறிப்பு 

எல்லாச் சதவீதங்களும் சேர்க்கப்படும்போது நமக்கு 100 கிடைக்கிறது என்பதைக் காண்கிறோம். மொத்தத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒன்றாகச் சேர்க்கும்போது முழுமையாகிறது அல்லது 100% ஐத் தருகிறது. எனவே, இரண்டு பகுதிகளிலும் 1 ஐக் கொடுத்தால் மற்றொன்றை நாம் காணலாம். இது மேற்கண்ட எடுத்துக்காட்டில் உள்ளது. 96% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால், 100 பேரில் 96பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது பொருள். மீதமுள்ள (100-96) 4% மாணவர்கள் தோல்வியுற்றனர் என்பதாகக் கொள்ளலாம்.


எடுத்துக்காட்டு 2.8    

50 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 28 மாணவிகளும் 22 மாணவர்களும் இருக்கிறார்கள் எனில், அவர்களின் சதவீதங்களைக் காண்க

தீர்வு

மாணவர்கள் மற்றும் மாணவிகளின் சதவீதத்தை நாம் பின்வரும் அட்டவணையில் காண்போம்.


சிறுவர், சிறுமியருக்கான சதவீதத்தைக் கண்டுபிடிக்க நாம் அலகு முறையைப் பயன்படுத்தலாம். பகுதியையும் தொகுதியையும் ஒரே எண்ணால் பெருக்கி அதனை 100% ஆக மாற்றலாம்


எடுத்துக்காட்டு 2.9   

ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியிலுள்ள சிறுமிகளின் சதவீதத்தைக் கண்டறியவும்.

தீர்வு

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 560

சிறுவர்களின் எண்ணிக்கை = 320

சிறுமிகளின் எண்ணிக்கை = 560 - 320 = 240

சதவீதம் = 240/560 × 100% = 24/56 × 100%

= 3/7 ×100% = 300/7%

 = 42.86%


சிந்திக்க

1. 0.01 இக்கும் 1% இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன

தீர்வு :  0.01 = 1 / 100 = 1%          0.01 மற்றும்  1% சமமானவை .

2. ஆயத்தக் கடையில் 50% தள்ளுபடி காட்டும் பலகை இருக்கிறது. எல்லாமே அதன் அசல் விலையில் பாதி என்பதைப் பெரும்பாலான மக்கள் உணருவார்கள் எனில், அது உண்மையா?

தீர்வு இல்லை . அவற்றில் சில மட்டுமே அதன் அசல் விலையில் பாதியாக உள்ளது .




Tags : Term 3 Chapter 2 | 7th Maths மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest : Converting percentage as fraction Term 3 Chapter 2 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும் : சதவீதத்தைப் பின்னமாக மாற்றுதல் - மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும்