மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பின்னங்களைச் சதவீதங்களாக மாற்றுதல் | 7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest
பின்னங்களைச் சதவீதங்களாக மாற்றுதல்
தொகுதிகளாகவும், பகுதிகளாகவும் குறிப்பிடப்படும் அனைத்து எண்களும் பின்னங்கள் ஆகும். அவை எந்தவொரு எண்ணையும் பகுதியாக வைத்திருக்க முடியும். பின்னத்தின் பகுதியானது நூறு என்றால், அதனை மிக எளிதாகச் சதவீதமாகக் குறிக்கலாம். வெவ்வேறு பின்னங்களைச் சதவீதமாக மாற்ற முயற்சிப்போம்.
எடுத்துக்காட்டு 2.1
1/5 ஐச் சதவீதமாக எழுதுக.
தீர்வு
இங்கு, 1/5 = 1/5 × 100/100 = 1/5 × 100% = 100/5% = 20% ஆகும்.
எடுத்துக்காட்டு 2.2
7/4 ஐச் சதவீதமாக மாற்றுக.
தீர்வு
இங்கு 7/4= 7/4 × 100/100 = 7/4 × 100% = 700/4% =175%.
எடுத்துக்காட்டு 2.3
மொத்தமுள்ள 20 மணிகளில், 5 மணிகள் சிவப்பு எனில், சிவப்பு மணியின் சதவீதம் என்ன?
தீர்வு
5/20=5/20×100/100=5/20×100% = 500/20% = 25% சிவப்பு மணிகள் நம்மிடம் உள்ளன.
எடுத்துக்காட்டு 2.4
பின்னம் 23/30 ஐச் சதவீதமாக மாற்றுக.
தீர்வு
23/30 நம்மிடம் உள்ளது. எனவே, 23/30=23/30×100/100=23/30×100% =76 2/3% ஆகும்.
இவற்றை முயல்க
பின்னங்களைச் சதவீதங்களாக மாற்றுக.
(i) 1/20 (ii) 13/25 (iii) 45/50 (iv) 18/5 (v) 27/10 (vi) 72/90
தீர்வு :
(i) 1/20 = 1/20 × 100/100 = 1/20 × 100% = 5 %
(i) 1/20 = 1/20 × 100/100 = 1 / 20 × 100% = 5 %
(ii) 13/25 = 13/25 × 100/100 = 13 / 25 × 100% = 52 %
(iii) 45/20 = 45/50 × 100/100 = 45 / 50 × 100% = 90 %
(iv) 18/5 = 18/5 × 100/100 = 18 / 5 × 100% = 360 %
(v) 27/10 = 27/10 × 100/100 = 27 / 10 × 100% = 270 %
(vi) 72/90 = 72/90 × 100/100 = 72 / 90 × 100% = 80 %