சதவீதமும் தனிவட்டியும் | மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest
பாடச்சுருக்கம்
● சதவீதம் என்பது பகுதியில் 100 ஐக் கொண்ட ஒரு பின்னம் ஆகும்.
● ஒரு பின்னத்தைச் சதவீதமாக மாற்றுவதற்கு அந்தப் பின்னத்தின் பகுதியையும் தொகுதியையும் 100 ஆல் பெருக்க வேண்டும்.
● ஒரு சதவீதத்தைப் பின்னமாக மாற்ற, அச்சதவீதத்தைப் பகுதியில் 100 ஐக் கொண்ட பின்னமாக எழுதவேண்டும்.
● பின்னங்களைச் சதவீதமாக மாற்றுவதற்கு, கொடுக்கப்பட்ட பின்னத்தை 100% ஆல் பெருக்கவும்.
● அசல் என்பது கடனாகப் பெற்ற அல்லது வழங்கிய தொகை.
● கடன் பெற்றவர் அந்த அசலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தியதற்காக, ஒரு கூடுதல் தொகையை அசலுடன் சேர்த்துத் தர வேண்டும். அந்தக் கூடுதல் தொகையே வட்டி எனப்படும்.
● வட்டி விகிதம் என்பது அசலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சதவீதத்தில் கணக்கிடப்படும்.
● நேரம் என்பது கடன் பெறப்பட்ட அல்லது வழங்கப்பட்ட காலத்தைக் குறிக்கும்.
● மொத்தத் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடன் பெற்றவர் கடன் அளிப்பவருக்குத் திருப்பியளிக்கும் தொகையாகும். இதை, மொத்தத் தொகை = அசல் + வட்டி என்ற சூத்திரத்தின் மூலம் காணலாம்.
● தனிவட்டியைப் பின்வரும் சூத்திரத்தின் மூலம் காணலாம். தனிவட்டி = P×n×r/100 இங்கு P - அசல், r - வட்டி வீதம், n – காலம்
இணையச் செயல்பாடு
சதவீதமும் தனிவட்டியும்
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி 1
கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியைத் தட்டச்சு செய்து அல்லது விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இணையத்தினுள் நுழைந்த பின் ஜீயோ ஜீப்ரா என்னும் இணையப் பக்கத்தில் "பின்னத்திலிருந்து சதவீதம்" என்னும் பணித்தாள் திறக்கும். அப்பணித்தாளில் தொகுதியையும் பகுதியையும் உள்ளீடுசெய்து, பின்னத்தையும் சதவீதத்தையும் கணக்கிடலாம்.
படி 2
பணித்தாளின் இடது பக்கத்தில் உள்ள "தனிவட்டி கணக்கு" என்பதைச் சொடுக்கவும். பின்னர் P, n மற்றும் r இன் மதிப்புகளை, அதற்குரிய கட்டங்களில் உள்ளீடுசெய்து, தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் பெறலாம்.
செயல்பாட்டிற்கான உரலி
பின்னத்திலிருந்து சதவீதம்: https://www.geogebra.org/m/f4w7csup#material/frbmnsrw
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.