கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.2 | 6th Maths : Term 2 Unit 1 : Numbers

   Posted On :  21.11.2023 11:21 pm

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : எண்கள்

பயிற்சி 1.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.2 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.2


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) 45 மற்றும் 75 இன் மீ.பெ.கா____________ஆகும். [ விடை : 15]

குறிப்பு


(ii) இரு அடுத்தடுத்த இரட்டை எண்களின் மீ.பெ.கா ________ ஆகும்[ விடை : 2]

(iii) 3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி. 9 எனில், அவற்றில் மீ.பெ.கா _________ ஆகும். [ விடை : 3]

(iv) 26, 39 மற்றும் 52 ஆகிய எண்களின் மீ.சி._______ ஆகும். [ விடை : 156]

(v) 57 உடன் _________ என்ற சிறிய எண்ணைக் கூட்டினால், அது 2, 3, 4 மற்றும் 5 ஆல் சரியாக வகுபடும்[ விடை : 3]


2. சரியா, தவறா எனக் கூறுக.

(i) 57 மற்றும் 69 ஆகியவை சார்பகா எண்கள்[ விடை : தவறு]

(ii) 17 மற்றும் 18 ஆகிய எண்களின் மீ.பெ.கா 1 ஆகும். [ விடை : சரி]

(iii) இரு அடுத்தடுத்த எண்களின் மீ.சி., அவ்விரு எண்களின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும். [ விடை : சரி]

(iv) இரு சார்பகா எண்களின் மீ.சி., அவ்வெண்களின் கூடுதலுக்குச் சமம். [ விடை : தவறு]

(v) இரு எண்களின் மீ.பெ.கா எப்போதும் அவற்றின் மீ.சி.வின் காரணியாக இருக்கும். [ விடை : சரி]


3. கீழ்க்காணும் எண்களுக்குப் பகாக் காரணிப்படுத்துதல் முறையில் மீ.பெ.கா காண்க.

(i) 18, 24 

(ii) 51, 85 

(iii) 61, 76 

(iv) 84, 120 

(v) 27, 45, 81 

(vi) 45, 55, 95

தீர்வு:

(i) 18, 24


18 இன் பகாக்காரணிகள் = 2 × 3 × 3 

24 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 2 × 3 

மீ.பெ.கா. = 2 × 3 = 6 

ii) 51, 85


51 இன் பகாக்காரணிகள் = 3 × 17 

85 இன் பகாக்காரணிகள் = 5 × 17 

மீ.பெ.கா. = 17

 iii) 61, 76 


61 = 1 × 61

61, 76–க்கு பொதுக்காரணி = 1

மீ.பெ.கா.  = 1

iv) 84, 120 


84 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 3 × 7 

120 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 2 × 3 × 5 

மீ.பெ.கா = 2 × 2 × 3 = 12

v) 27, 45, 81


27 இன் பகாக்காரணிகள் = 3 × 3 × 3 

45 இன் பகாக் காரணிகள் = 3 × 3 × 5 

81 இன் பகாக்காரணிகள் = 3 × 3 × 3 × 3 

மீ.பெ.கா = 3 × 3 = 9 

vi) 45, 55, 95


45 இன் பகாக்காரணிகள் = 3 × 3 × 5 

55 இன் பகாக்காரணிகள் = 5 × 11 

95 இன் பகாக்காரணிகள் = 5 × 19

மீ.பெ.கா.  = 5 


4. கீழ்க்காணும் எண்களுக்குப் பகாக் காரணிப்படுத்துதல் முறையில் மீ.சி.வைக் காண்க

(i) 6, 9 

(ii) 8, 12 

(iii) 10, 15 

(iv) 14, 42 

(v) 30, 40, 60 

(vi) 15, 25, 75

விடை :

i) 6, 9


6 இன் பகாக்காரணிகள் = 2  × 3 

9 இன் பகாக்காரணிகள் = 3 × 3 

6, 9ன் மீ.சி.. = 3 × 2 × 3 =18

ii) 8, 12


8 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 2 

12 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 3 

8, 12ன் மீ.சி.. = 2 × 2 × 2 × 3 = 24

iii) 10, 15


10 இன் பகாக்காரணிகள் = 2 × 5 

15 இன் பகாக்காரணிகள் = 3 × 5

10, 15ன் மீ.சி.. = 5 × 2 × 3 = 30

 iv) 14, 42 


14 இன் பகாக்காரணிகள் = 2 × 7 

42 இன் பகாக்காரணிகள் = 2 × 3 × 7

14, 42ன் மீ.சி.. = 7 × 2 × 3 = 42 

v) 30, 40, 60


30 இன் பகாக்காரணிகள் = 2 × 3 × 5 

40 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 2 × 5 

60 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 3 × 5 

30, 40, 60ன் மீ.சி.. = 2 × 5 × 3 × 2 × 2

= 120 

vi) 15, 25, 75


15 இன் பகாக்காரணிகள் = 3 × 5 

25 இன் பகாக்காரணிகள் = 5 × 5 

75 இன் பகாக்காரணிகள் = 3 × 5 × 5 

15, 25, 75ன் மீ.சி.. = 5 × 3 × 5 =75


5. 154, 198 மற்றும் 286 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா மற்றும் மீ.சி. காண்க.

விடை : மீ.பெ.கா


154 இன் பகாக்காரணிகள் = 2 × 7 × 11 

198 இன் பகாக்காரணிகள் = 2 × 3 × 3 × 11 

286 இன் பகாக்காரணிகள் = 2 × 13 × 11

154, 198, 286ன் மீ.பெ.கா. = 11 × 2 = 22 

மீ.சி..

மீ.சி.. = 2 × 11 × 7 × 9 × 13

= 22 × 63 × 13

= 18018


6. முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினைச் சரியாக அளக்கக் கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு என்ன?

விடை

இது மீ.பெ.கா. தொடர்பான கணக்கு ஆகும். ஆகவே, நாம் 80, 100, 120 ஆகியவற்றின் மீ.பெ.கா. – வைக் காண்க.


80 = 2 × 2 × 2 × 2 × 5 

100 = 2 × 2 × 5 × 5 

120 = 2 × 2 × 2 × 3 × 5 

80, 100, 120ன் மீ.பெ.கா.= 2 × 2 × 5 = 20 

பாத்திரத்தின் கொள்ளளவு = 20 லிட்டர்


7. மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 விநாடிகளில், 60 விநாடிகளில் மற்றும் 72 விநாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்குச் சந்திப்புகளில் ஒன்றாக ஒளிர்ந்தன எனில், மீண்டும் அவை எப்போது ஒன்றாக ஒளிரும்?

விடை :

இது மீ.சி.. தொடர்பான கணக்கு ஆகும். ஆகவே, நாம் 40, 60, 72 ஆகிய எண்களின் மீ.சி.. – வைக் காண வேண்டும்.


40, 60, 72ன் மீ.சி..

= 2 × 2 × 3 × 5 × 2 × 1 × 1 × 3 

= 360 வினாடிகள்

= 6 நிமிடங்கள் 

எனவே, மூன்று விளக்குகளும் மீண்டும் காலை 8.06 மணிக்கு ஒன்றாக ஒளிரும்


8. இரு எண்களின் மீ.சி. 210 மற்றும் மீ.பெ.கா 14 என்றுள்ளவாறு எத்தனை எண்சோடிகள் சாத்தியமாகும் ?

விடை :

இரு எண்களின் பெருக்கற்பலன் = மீ.சி. × மீ.பெ.கா.

x × y = 210 × 14 

x × y = 2940

(12, 245), (20, 147) 

எனவே, இரண்டு சோடிகள் சாத்தியமாகும்.



9. இரு எண்களின் மீ.சி. ஆனது மீ.பெ.காவின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.

விடை

மீ.பெ.கா = 12

இரு எண்களின் பெருக்கற்பலன் = மீ.சி. × மீ.பெ.கா 

36 × மற்றொரு எண் = 72 × 12 

மற்றொரு எண் = [72 × 12] / 36

மற்றொரு எண் = 24



கொள்குறி வகை வினாக்கள்


10. பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும்?

) 51, 63 

) 52, 91 

) 71, 81 

) 81, 99

[விடை : ) 71, 81]

குறிப்பு



11. 8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன?

) 9999 

) 9996 

) 9696 

) 9936

[விடை : ) 9936]


12. இரு எண்களின் மீ.பெ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி. 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல் ________

) 26

) 36

) 46

) 56

[விடை : ) 36]


13. 120– மீ.சி.ஆகக் கொண்ட எண்களுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.காஆக இருக்க இயலாது?

)  60

) 40

) 80

) 30

[விடை : ) 80]

Tags : Questions with Answers, Solution | HCF and LCM | Term 2 Chapter 1 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 1 : Numbers : Exercise 1.2 Questions with Answers, Solution | HCF and LCM | Term 2 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : எண்கள்