பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - எண்கள் | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  20.11.2023 06:22 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

எண்கள்

கற்றல் நோக்கங்கள் ● பெரிய எண்களைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றைக் குறிப்பிடும் முறையை அறிதல். ● பெரிய எண்களை ஒப்பிடுதல் மற்றும் வரிசைப்படுத்துதல். ● பெரிய எண்களுக்குத் தோராய மதிப்பீட்டைப் பயன்படுத்துதல். ● நான்கு அடிப்படைச் செயலிகளைக் கொண்டு, கணக்குகளுக்குத் தீர்வு காணுதல். ● முழு எண்களின் பண்புகளைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் பயன்படுத்துதல்.

இயல் 1

எண்கள்



கற்றல் நோக்கங்கள்

பெரிய எண்களைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றைக் குறிப்பிடும் முறையை அறிதல்.

பெரிய எண்களை ஒப்பிடுதல் மற்றும் வரிசைப்படுத்துதல்.

பெரிய எண்களுக்குத் தோராய மதிப்பீட்டைப் பயன்படுத்துதல்.

நான்கு அடிப்படைச் செயலிகளைக் கொண்டு, கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்.

முழு எண்களின் பண்புகளைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் பயன்படுத்துதல்.


அறிமுகம்

நண்பர்கள் இருவரின் கீழ்க்காணும் உரையாடலை உற்றுநோக்குக.


மணி : (நாளிதழின் தலைப்புச் செய்திகளைப் படிக்கிறான்) "நேற்று, தொழில் பொருட்காட்சியைப் பத்தாயிரம் பேர் பார்வையிட்டனர்".

மல்லிகை : அடேயப்பா! எவ்வளவு கூட்டம்.

மணி : நல்ல வேளை, நான் சரியாக நேற்றே பொருட்காட்சிக்குச் சென்று வந்து விட்டேன்

மல்லிகை : ஏன்... அதனை அவ்வளவு முக்கியமாகக் கூறுகிறாய்?

மணி : உனக்குத் தெரியவில்லையா? நான் செல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் "ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது பேர் தொழில் பொருட்காட்சியைப் பார்த்தனர்" என்றல்லவா எழுதியிருப்பார்கள். அது படிக்கவும், புரிந்து கொள்ளவும் கடினமாக இருந்திருக்குமே!

இந்த உரையாடலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மணி கூறுவது சரியா?

இல்லை! மணி பொருட்காட்சிக்குச் செல்லாமல் இருந்திருந்தாலும் "பத்தாயிரம் பேர் பார்வையிட்டனர்" என்றே கூறுவர். நாளிதழ்கள், மிகச் சரியான எண் மதிப்பைச் சொல்லாமல், அதன் அருகமைந்த முழுமைப்படுத்தப்பட்ட எண் மதிப்பையே அச்சிட்டு வெளியிடும். படிப்போரும் அதையே விரும்புவர். பெரியவர்கள், 'இலட்சம்' மற்றும் 'கோடி' என்ற பெயர்களைப் பயன்படுத்துவதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்.

அன்றாட வாழ்வில் பெரிய எண்களை உள்ளடக்கிய சூழ்நிலைகளைப் பெரும்பாலான நேரங்களில் எதிர்கொள்கிறோம். ஒரு மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை, அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு, விண்மீன்களின் தொலைவு, ஓர் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மிதிவண்டிகளின் எண்ணிக்கை எனப் பல சூழ்நிலைகள்... இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும், பெரிய எண்களின் பெயர்களையே நாம் பயன்படுத்தி வருகின்றோம்.


எங்கும் கணிதம்அன்றாட வாழ்வில் எண்கள்


தமிழ்நாட்டில் ஏறத்தாழ 26,345 . கிமீ வனப்பகுதி உள்ளது.


பால்வெளித் திரளில் ஏறத்தாழ 20,000 கோடி விண்மீன்கள் உள்ளன.

நாம் இதுவரை கற்ற எண்களுடன், பெரிய எண்களை மேலும் விரிவாகப் புரிந்து கொள்வோம்.

Tags : Term 1 Chapter 1 | 6th Maths பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Numbers Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : எண்கள் - பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்