Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 13 : Water

   Posted On :  09.09.2023 11:22 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

• காற்றுக்கு அடுத்தபடியாக, நாம் வாழ்வதற்கு நீர் மிக முக்கியமான வளமாகும்.

• நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் போன்ற கூறுகள் உள்ளன. அதன் மூலக்கூறு வாய்ப்பாடு H2O ஆகும்.

• மின்னாற்பகுப்பின் மூலம் நீர் இரு வேறு வாயுக்களாகப் பிரிக்கப்படுகிறது. மின்னாற்பகுப்பின்போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 2:1 என்ற விகிதந்தில் பெறப்படுகின்றன.

• நீரானது 4°C வெப்பநிலையில் அதிகபட்ச அடர்த்தியைக் (1 கி/செமீ ) கொண்டுள்ளது. 4°C க்கும் குறைவான அல்லது அதிகமான வெப்பநிலையில், நீரின் அடர்த்தி 1 கி/செ.மீ3 க்கும் குறைவாக உள்ளது. நீரின் இந்த தனித்துவமான பண்பு குளிர்காலம் மற்றும் கோடைகாலங்களில் நீர்வாழ் உயிரினங்கள் உயிர்வாழ உதவுகிறது.

• கடல் நீரில் பல கனிமங்கள் மற்றும் உப்புகள் உள்ளன எனவே, இது உப்புநீர் என்று அழைக்கப்படுகிறது.

• நீரானது O°C வெப்பநிலையில் உறைகிறது. 100°C வெப்பநிலையில் கொதிக்கிறது.

• நீர் பல பொருள்களைக் கரைக்கிறது. எனவே, நீர் ஒரு சர்வ கரைப்பான்.

• குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீரை பருக உகந்த நீர் என்று அழைக்கிறோம்.

• நீரில் கரையக் கூடிய வாயுக்கள் உள்ளன. அவை நீர்வாழ் உயிரினங்களின் சுவாசித்தலுக்கும், ஒளிச்சேர்க்கைக்கும் பயன்படுகின்றன.

• கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற உப்புக்கள் இருப்பதால் நீர் கடினத்தன்மை உடையதாகிறது.

• சுத்திகரிக்கப்படாத வீட்டு திடக்கழிவுகள், கழிவுநீர், விவசாயக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவை ஏரிகள், ஆறுகள் போன்றவற்றில் கலப்பதன் விளைவாக நீர் மாசுபாடு அடைகிறது.


சொல்லடைவு

மின்னாற்பகுப்பு மின்சாரத்தைக் செலுத்துவதன் மூலம் திரவ மூலக்கூறுகளைப் பிரித்தல்.

பருக உகந்த நீர்  குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீர்.

உப்பு நீர் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) உள்ள நீர்.

கிருமி நீக்கம் நீரில் இருக்கும் நுண்ணுயிரிகளைக் கொல்வதற்காக வேதிப்பொருள்களைச் சேர்த்தல்.

தன் வெப்ப ஏற்புத் திறன்  ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C ஆக உயர்த்தத் தேவையான வெப்பத்தின் அளவு.

உள்ளுறை வெப்பம் பனிக்கட்டியை நீராக மாற்றத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு.

நீர் மாசுபாடு தேவையற்ற பொருள்கள் நீரில் கலப்பது..

வீட்டுக் கழிவுநீர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்.

நீர்ப் பாதுகாப்பு எதிர்காலப் பயன்பாட்டிற்காக நீர் சேமிக்கப்படுதல்.




பிற நூல்கள்

1. Water science fair projects Madeline Goodstein.

2. Basic chemistry - Karen C. Timberlake & William Timberlake.

3. Chemistry of water treatment – Samuel D. Faust Osman M.Aly.

4. Textbook of Environmental Chemistry Balarampani.


இணைய வளங்கள்

1. http://www.youtube.com/watch?v= bZHymnnrSzc

2. http://www.un.org/cyberschoolbus/ waterquiz/waterquiz4/index.asp

3. http://www.explainthatstuff.com/ waterpollution.html

Tags : Water | Chapter 13 | 8th Science நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 13 : Water : Points to Remember, Glossary, Concept Map Water | Chapter 13 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர்