Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நீர் மாசுபடுதல்

நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நீர் மாசுபடுதல் | 8th Science : Chapter 13 : Water

   Posted On :  29.07.2023 06:08 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர்

நீர் மாசுபடுதல்

மனித செயல்களின் விளைவாக நீர்நிலைகள் மாசுபாடு அடைவதையே நீர் மாசுபடுதல் என்கிறோம். தீங்கு விளைவிக்கக்mகூடிய வேதிப்பொருள்கள், கழிவுநீர் மற்றும் திடக் கழிவுகள் நீர் மூலங்களைச் சென்றடைவதாலேயே நீர் மாசுபாடு அடைகிறது.

நீர் மாசுபடுதல்

மனித செயல்களின் விளைவாக நீர்நிலைகள் மாசுபாடு அடைவதையே நீர் மாசுபடுதல் என்கிறோம். தீங்கு விளைவிக்கக்mகூடிய வேதிப்பொருள்கள், கழிவுநீர் மற்றும் திடக் கழிவுகள் நீர் மூலங்களைச் சென்றடைவதாலேயே நீர் மாசுபாடு அடைகிறது. இதன் காரணமாக நீரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இது நீரின் தரத்தைக் குறைத்து அதனை உயிரினங்களுக்கு நச்சுத்தன்மை உடையதாக மாற்றுகிறது. மாசுபட்ட நீரைப் பருகுவதால் மனிதர்களின் உடல்நலத்திற்கு கடுமையான விளைவுகள் ஏற்படுகின்றன.


 

1. தமிழகத்தின் நீர் ஆதாரங்கள்

நன்நீர் ஆதாரங்கள் ஒரு சமூகத்தின் வீட்டு உபயோகம், விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு பயனுள்ளதாக இருக்கின்றன. இவற்றுள் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரும் அடங்கும். ஆறுகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் மற்றும் குளங்கள் மேற்பரப்பு நீருக்கு உதாரணம் ஆகும். தமிழ்நாட்டில் 61 நீர்த்தேக்கங்கள், 17 பெரிய ஆற்றுப் படுகைகள் மற்றும் தோராயமாக 41,948 குளங்கள் உள்ளன. மழைநீரைச் சேகரிக்க ஏரிகள் மற்றும் குளங்கள் பலகாலமாக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர் ஆதாரங்கள் நீர்ப்படுகைகள் (Aquifers) என்று அழைக்கப்படுகின்றன. பூமிக்கு அடியிலுள்ள கரடுமுரடான மணல் மற்றும் சரளைக்கல் அடுக்குகள் நீர்ப்படுகைகள் எனப்படுகின்றன. அவற்றுள் காணப்படும் சிறு துளைகளில் மழைநீர் புகுந்து சேகரிக்கப்படுகிறது. திறந்த கிணறுகள் மற்றும் துளைக் கிணறுகள் மூலமாக நாம் நிலத்தடி நீரினைப் பயன்படுத்த முடியும்.

பூமியின் மீது காணப்படும் நீரில் 90% நீர் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

 

2. நீர் மாசுபாட்டு மூலங்கள்

உங்கள் சுற்றுப்புறத்தை உற்றுநோக்கினால் மாசுபாடு அடைந்த நீர்நிலைகளை நீங்கள் காணமுடியும். தேவையற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருள்களான கழிவுகள் மற்றும் கழிவுநீரை உங்களால் அவற்றில் காணமுடியும். இந்தப் பொருள்கள் மாசுபடுத்திகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மாசுபடுத்திகள் பல்வேறு மூலங்களிலிருந்து வெளியிடப்படுகின்றன. பொதுவாக நீர் மாசுபாட்டு மூலங்கள் இயற்கையானவையாகவோ அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டவையாகவோ இருக்கலாம். சில நீர் மாசுபாட்டு மூலங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


செயல்பாடு 7

ஒரு ஷாம்பு, ஷவர் ஜெல் அல்லது மைக்ரோ பீட்கள் இருக்கலாம் என்று நீங்கள் கருதும் தயாரிப்புகளை எடுத்துக் கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து ஒரு குவளை நீரில் கலந்து நன்கு கலக்கவும். இதனை ஒரு கருப்புத் துணியில் ஊற்றி இதிலுள்ள மைக்ரோபீட்களை வடிகட்டவும்.



அ. வீட்டு உபயோக டிடர்ஜெண்டுகள்

நீர் மாசுபாட்டிற்கு வீட்டில் உபயோகப்படுத்தப்படும் டிடர்ஜெண்டுகள் ஒரு முக்கியக் காரணம் ஆகும். செயற்கை (மக்க இயலாத) டிடர்ஜெண்டுகள் எளிதில் சிதைவடையாத கொண்டுள்ளன. வேதிப்பொருள்களைக் அவை மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீரை டிடர்ஜெண்ட்டுகளின் மாசுபடுத்துகின்றன. அதிகப்படியான பயன்பாடு மீன் மற்றும் பிற உயிரினங்களை பெருமளவில் பாதிக்கிறது. சில ஷாம்பு, ஃபேஸ் வாஷ், ஷவர் ஜெல் மற்றும் பற்பசை ஆகியவற்றில் நுண்ணிய நுண்ணிய நெகிழித்துண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை மைக்ரோபீட்ஸ் (microbeads) என்று அழைக்கப்படுகின்றன. அழுத்தித்தேய்த்தல், சருமத்தைச் சுத்தம் செய்தல் மற்றும் பற்களை மெருகூட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அவை சேர்க்கப்படுகின்றன. மைக்ரோபீட்ஸ் கொண்ட தயாரிப்புகளை நாம் பயன்படுத்தும்போது, அவை நீர் வடிகாலில் சென்று நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன. மீன் மற்றும் பிற விலங்குகள் அவற்றை தற்செயலாக உண்பதன் மூலம் பாதிப்படைகின்றன.


ஆ. கழிவுநீர்

வீட்டுப்பயன்பாட்டிற்குப் பிறகு வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரை கழிவுநீர் என்று அழைக்கிறோம். நதி, ஏரி போன்ற நீர்நிலைகளில் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும். சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் உணவுக் கழிவுகளிலிருக்கும் கரிமப் பொருள்கள், வீட்டுப் பொருள்களிலிருக்கும் வேதிப் பொருள்கள் போன்றவை உள்ளன. மேலும், இவை நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளையும் கொண்டிருக்கக்கூடும்.

இந்தியாவில் மிகப்பெரிய நீர் மாசுபாட்டு மூலம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகும். துணி துவைத்தல், சமைத்தல், குளித்தல் போன்றவற்றிற்காக ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 135 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்.



இ. வீட்டு உபயோக திட மற்றும் நெகிழிக் கழிவுகள்

நெகிழி உள்ளிட்ட திடக் கழிவுகள் ஏரி, ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் வெளியேற்றப்படுகின்றன அல்லது அவற்றைச் சென்றடைகின்றன. நெகிழிகள் வடிகாலை அடைப்பதன்மூலம் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பரவுகின்றன. நீர்நிலைகளில் உள்ள கழிவுகள் நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றன.



ஈ. விவசாயம்

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்கள், பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மழைநீரில் கரைந்து ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் பாய்கின்றன. இதனால், நைட்ரேட்டுகள் மற்றும் பாஸ்பேட்டுகள் போன்ற ஊட்டச் சத்துக்களோடு சில நச்சுத் தன்மைகொண்ட வேதிப் பொருள்களும் நீர்நிலைகளில் சேர்கின்றன. இதற்கு யூட்ரோபிகேசன் என்று பெயர். இவை நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை.



உ. தொழிற்சாலைக் கழிவு

பல தொழிற்சாலைகள் ஈயம், பாதரசம், சயனைடுகள், காட்மியம் போன்ற நச்சுக் கழிவுகளை வெளியிடுகின்றன. சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் வெளியிடப்படும் இக்கழிவுகள் மனிதர்கள்,தாவரங்கள், விலங்குகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றன.


காய்கறிகளை விளைவிப்பதற்கு நெகிழித் தாள்கள் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைகால முடிவில், இந்த நெகிழித் தாள்கள் மீண்டும் உழவு செய்யப்படுகின்றன. மண்ணிலேயேநெகிழித் தாள்கள் சிறிய துண்டுகளாக உடைந்து மண் புழுக்களால் உண்ணப்படுகின்றன. இது அவற்றின் ஆரோக்கியத்திற்கும்தீங்கு விளைவிக்கின்றது.


ஊ. எண்ணெய்க் கசிவுகள்

கடல் படுக்கைக்குக் கீழே பெரிய அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் உள்ளன. கச்சா எண்ணெயைப் பெறுவதற்காக பெருங்கடல்களில் துளைகள் இடப்படுவதன்மூலமும் அவற்றைக் கொண்டு செல்வதன் மூலமும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. எண்ணெய்க் கசிவு நீர் மாசுபாட்டை ஏற்படுத்தி, நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது. நீரின் மேற்பரப்பில் மிதக்கும் எண்ணெய் சூரிய ஒளியைத் தடுக்கிறது, மேலும், நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவைக் குறைத்து கடல் உயிரினங்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.



எ. வெப்பத்தினால் மாசடைதல்

அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் மற்றும் பல தொழிற்சாலைகளில் குளிரூட்டும் தேவைகளுக்காக அதிக அளவு நீர் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட நீர் மீண்டும் நதி அல்லது பிற நீர் ஆதாரங்களில் அதிகளவு வெப்பநிலையுடனும், வேதிபொருள்களுடனும் சில வெளியேற்றப்படுகிறது. இது நீரின் வெப்பநிலையை அதிகரித்து, நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவைக் குறைக்கிறது, இதனால், நீர்வாழ் உயிரினங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.

 

3. பொதுவான மாசுபடுத்திகள்

மாசுபடுத்திகள் பொதுவாக வீட்டு உபயோக மாசுபடுத்திகள், வேளாண் மாசுபடுத்திகள் மற்றும் தொழிற்சாலை மாசுபடுத்திகள் என வகைப்படுத்தப் படுகின்றன. பல்வேறு நீர் மாசுபடுத்திகளின் மூலங்களும் அவற்றால் ஏற்படும் விளைவுகளும் அட்டவணை 13.2 இல் கொடுக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நன்னீர் மூலத்திலும் நுண்ணிய நெகிழித் துண்டுகள் காணப்படுகிறறன். ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதியின் உறைந்த நீர்ப் பரப்பிலிருந்து 5,000 மீட்டர் ஆழம் கொண்ட ஆழ்கடல் தளத்தின் அடிப்பகுதி வரை அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் மற்றும் குழாய் நெகிழி நீரில் நுண்ணிய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



Tags : Water | Chapter 13 | 8th Science நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 13 : Water : Water Pollution Water | Chapter 13 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர் : நீர் மாசுபடுதல் - நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர்