நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 13 : Water
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. எந்த
வெப்பநிலையில் நீர் பனிக்கட்டியாக மாற்றமடையும்?
அ) 0°C
ஆ) 100°C
இ) 102°C
ஈ) 98°C
விடை : அ) 0°C
2. நீரில்
கார்பன் டைஆக்சைடின் கரைதிறன் அதிகமாவது
அ) குறைவான அழுத்தத்தில்
ஆ) அதிகமான அழுத்தத்தில்
இ) வெப்பநிலை உயர்வால்
ஈ) ஏதுமில்லை
விடை: ஆ) அதிகமான அழுத்தத்தில்
3.நீரினை
மின்னாற்பகுக்கும்போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு
ஆ) ஹைட்ரஜன்
அ) ஆச்சிஜன்
இ) நைட்ரஜன்
ஈ) கார்பன் டை ஆக்சைடு
விடை: ஆ) ஹைட்ரஜன்
4. கீழே
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது நீரை மாசுபடுத்தும்?
அ) ஈயம்
ஆ) படிகாரம்
இ) ஆக்சிஜன்
ஈ) குளோரின்
விடை : அ) ஈயம்
5. நீரின்
நிரந்திர கடினத்தன்மைக்குக் காரணமாக இருப்பவை
அ) சல்பேட்டுகள்
ஆ) தூசுக்கள்
இ) கார்பனேட் மற்றும் பைகார்பனேட்
ஈ) கரைந்துள்ள பிற பொருள்கள்
விடை: அ) சல்பேட்டுகள்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. நீர் நிறமற்றது. மனமற்றது மற்றும் சுவையற்றது
2. நீரின் கொதிநிலை 100°C
3. நீரின் தற்காலிகக் கடினத்தன்மை கொதிக்க வைத்தல் முறையில்
நீக்கப்படுகிறது.
4. நீர் 4°C வெப்பநிலையில் அதிக அடர்த்தியினைப் பெற்றிருக்கும்.
5. ஏற்றம் வீழ்படிதல் செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்.
III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத்
திருத்துக.
1. கழிவுநீரினை நன்கு சுத்திகரித்த பிறகே நன்னீர் நிலைகளில்
கலக்க அனுமதிக்கப்பட வேண்டும். விடை: சரி
2. கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் அதனை விவசாயத்திற்குப்
பயன்படுத்தலாம். விடை:
தவறு
சரியான விடை: கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்தஇயலாது.
3. வேதி உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்ணின் தரம்
குறைந்து நீர் மாசுபடுகிது. விடை: சரி
4. நீரின் அடர்த்தியானது அனைத்து வெப்பநிலையிலும்
மாறாமல் இருக்கும். விடை: தவறு
சரியான விடை : நீரின் அடர்த்தியானது வெவ்வேறு வெப்பநிலையில் மாறுபடும்
5. கடின நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்.
விடை: தவறு சரியான விடை : மென் நீரில் சோப்பு நன்கு நுரையினை தரும்
(அல்லது) கடின நீரில் சோப்பு நன்கு நுரையினை தராது.
IV. பொருத்துக.
சர்வ கரைப்பான் - நீர் மாசுபடுத்தி
கடினநீர் - கிருமிகளைக் கொல்லுதல்
கொதித்தல் - ஓசோனேற்றம்
நுண்ணுயிர் நீக்கம் - நீர்
கழிவுநீர் - வயிற்று உபாதைகள்
விடைகள்
சர்வ கரைப்பான் - நீர்
கடினநீர் - வயிற்று உபாதைகள்
கொதித்தல் - கிருமிகளைக் கொல்லுதல்
நுண்ணுயிர் நீக்கம் - ஓசோனேற்றம்
கழிவுநீர் - நீர் மாசுபடுத்தி
V . கீழ்க்காணும் கூற்றுகளுக்கு காரணம் கூறுக.
1. வீழ்படிவுத்
தொட்டியில் நீருடன் படிகாரம் சேர்த்தல்.
பொட்டாஷ் படிகாரமானது நீரில் உள்ள மாசுடன் சேர்ந்து
வீழ்படிதலை துரிதப்படுத்துகிறது
2. நீர்
ஒரு சர்வ கரைப்பான்.
கிட்டத்தட்ட எல்லா பொருள்களையுமே கரைக்கும் தன்மையினை
பெற்றுள்ளதால் நீர் ஒரு சர்வ கரைப்பான் ஆகும்.
3. பனிக்கட்டி
நீரில் மிதத்தல்.
பனிக்கட்டியின் அடர்த்தி நீரை விடக் குறைவு எனவே
நீரில் மிதக்கிறது
4. நீர்வாழ்
விலங்கினங்கள் நீரினுள் சுவாசித்தல்.
நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் நீர்வாழ் விலங்கினங்கள்
நீரினுள் சுவாசிக்க உதவுகின்றது
5. கடல்
நீர் குடிப்பதற்கு உகந்த நீரல்ல.ஒவ்வொரு லிட்டர்
கடல் நீரிலும் 35கி சோடியம் குளோரைடு உப்பு கலந்துள்ளது. இது உப்பு நீர் எனப்படும்.
இது குடிப்பதற்கு உகந்த நீரல்ல.
6. பாத்திரங்களைத்
தூய்மையாக்க கடின நீர் உகந்தது அல்ல.
கடின நீரில் உப்பு மற்றும் தாதுக்கள்
அதிகளவில் கரைந்துள்ளன. இவைதூய்மையாக்கிகளுடன் வீழ்படிவை ஏற்படுத்துவதால், அழுக்கு
நீக்குதலை கடின நீர் கடினமான செயலாக மாற்றுகிறது.
VI. கீழ்க்காண்பவற்றை வரையறு.
1. உருகுநிலை
ஒரு திரவம் அதன் திண்ம வடிவாக உறையும் வெப்பநிலை
அதன் உருகுநிலை எனப்படும்.
2. கொதிநிலை
ஒரு திரவம் அதன் ஆவி வடிவாக மாறும் வெப்பநிலை
அதன் கொதிநிலை எனப்படும்.
3. தன்
வெப்ப ஏற்புத்திறன்
ஒரு அலகு நிறை கொண்ட ஒரு பொருளின் வெப்பநிலையை
1°C ஆக உயர்த்த தேவையானவெப்பத்தின் அளவு அப்பொருளின் தன் வெப்ப ஏற்புத் திறன் எனப்படும்.
4. ஆவியாதலின்
உள்ளுறை வெப்பம்
ஒரு திரவத்தினை அதன் கொதிநிலையில் ஆவியாக மாற்ற
கொடுக்கப்படும் வெப்பஆற்றல் அதன் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்
5. பருக
உகந்த நீர்
1 முதல் 2 கி உப்பு கலந்துள்ள குடிக்க உகந்த நீரே
குடிக்க தகுந்த நீர் எனப்படும்.
VII. சுருக்கமாக விடையளி.
1. நீரினை
மின்னாற்பகுக்கும்போது நேர்மின் மற்றும் எதிர்மின்வாயில் வெளியேறும் வாயுக்களின் பெயர்
மற்றும் விகிதம் என்ன?
எதிர்மின்வாயில் வெளிப்படும் வாயு : ஹைட்ரஜன்
நேர்மின்வாயில் வெளிப்படும் வாயு : ஆக்சிஜன்
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் விகிதம் 2:1
2. நீரில்
கரைந்துள்ள ஆக்சிஜன் மற்றும் கார்பன் டைஆக்சைட்டின் முக்கியத்துவத்தைக் கூறுக.
> நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் உயிரினங்கள்
உயிர்வாழ இன்றியமையாததாகிறது.
> மீன் நீரிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து,
செவுள்கள் வழியாக நீரை வெளியேற்றுகிறது. நீரில் கரைந்த ஆக்சிஜன் இருப்பதாலேயே மீன்களால்
நீரில் வாழ முடிகிறது.
> ஒளிச்சேர்க்கைக்கு நீர் வாழ் தாவரங்கள் நீரில்
கரைந்த கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்துகின்றன.
> நீரில் கரைந்த கார்பன் டை ஆக்சைடு சுண்ணாம்புடன்
வினைபுரிந்து கால்சியம் பை கார்பனேட்டை உருவாக்குகிறது. நத்தைகள், சிப்பிகள் போன்ற
உயிரினங்கள் கால்சியம் பை கார்பனேட்டிலிருந்து
கால்சியம் கார்பனேட்டை பிரித்தெடுத்து அவற்றின் கூடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.
3. நீரின்
தற்காலிக மற்றும் நிரந்திர கடினத்தன்மைக்கான காரணிகள் யாவை?
நீரின் தற்காலிக கடினத்தன்மை
இது கால்சியம், மெக்னீசியத்தின்
கார்பனேட் மற்றும் பை கார்பனேட் உப்புகளால் ஏற்படுகிறது
நீரின் நிரந்தர கடினத் தன்மை
இது கால்சியம், மெக்னீசியத்தின்
குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகளால் ஏற்படுகிறது.
4. நீர்
ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் - விவரி.
> நீரானது 100°C வெப்பநிலையை அடையும்போது அதன்
திரவநிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைகிறது.
> எனினும் நீரின் வெப்பநிலை 100°C க்கு மேல்
உயராது.
> ஏனெனில் கொடுக்கப்படும் வெப்ப ஆற்றல் கொதிக்கும்
நீரின் நிலையை மட்டுமே மாற்றுகிறது.
> இந்த வெப்ப ஆற்றல் நீராவியினுள் சேமிக்கப்படுகிறது.
> இது நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.
5. நீரின்
கடினத்தன்மையை நீக்கும் முறைகள் யாவை?
நீரின் கடினத்தன்மையை நீக்கும் முறைகள்
1. கொதிக்க வைத்தல்
2. சலவைச் சோடாவை சேர்த்தல்
3. அயனி பரிமாற்ற முறை
4. வாலை வடித்தல்
VIII. விரிவாக விடையளி.
1. சுத்திகரிப்பு
ஆலைகளில் நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது?
நீர் சுத்திகரிப்பு முறையில் பல்வேறு படிநிலைகள் உள்ளன. அவையாவன :
வீழ்படிவாக்குதல் :
> ஆறு மற்றும் ஏரிகளிலிருந்து
பெறப்படும் நீரானது பெரிய கலன்களில் சேகரிக்கப்பட்டு, கழிவுகளை வீழ்படிவாக்க எவ்வித
அசைவுமின்றி அப்படியே நிலை நிறுத்தப்படுகிறது. இதனால் மாசுகள் கொள்கலனின் அடிப்பகுதியில்
படிகிறது.
> சில நேரங்களில் வீழ்படிதலை
துரிதப்படுத்தி பொட்டாஷ் படிகாரம் நீருடன் சேர்க்கப்படுகிறது. இதனை ஏற்றம் என்கிறோம்.
பொட்டாஷ் படிகாரம் மாசுடன் சேர்ந்து வீழ்படிதலை துரிதப்படுத்துகிறது.
2. வடிகட்டுதல் :
> வீழ்படிவு கொள்கலனிலிருந்து
நீரானது வடிகட்டுதல் கலனுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. வடிகட்டுதல் கலனின் அமைப்பானது
மணல், கூழாங்கல், கல்கரி மற்றும் கான்கிரிட் அடுக்குகளால் ஆனது.
> நீரானது இந்த அடுக்குகளின்
வழியாக உள்ளிறங்கும் போது, முற்றிலும் மாசுகள் நீக்கப்பட்ட நிலையில் பெறப்படுகிறது.
3. நுண்ணுயிர் நீக்கம் :
> வடிகட்டி பெறப்பட்ட நீரிலிருந்து
கிருமிகள் மற்றும் பாக்டீரியா நீக்கம் செய்யப்படுவதற்காக வேதிமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.
> இதற்காக குளோரின் மற்றும்
ஓசோன் பயன்படுத்தப்படுகிறது.
> போதுமான அளவு குளோரின்
சேர்க்கப்படும் நிகழ்வு குளோரினேற்றம் எனப்படுகிறது.
> வடிகட்டுதல் கலனிலிருந்து
பெறப்பட்ட நீரானது குளோரின் கலனில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட அனுப்பப்படுகிறது.
மேலும் கிருமிகளை அழிப்பதற்காக ஓசோனேற்ற முறைக்கு உட்படுத்தப்படுகிறது.
2. நீரின்
நிரந்திர கடினத்தன்மை என்றால் என்ன? இத்தன்மை எவ்வாறு நீக்கப்படுகிறது?
> கால்சியம், மெக்னீசியத்தின்
குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள் நீரில் கரைந்திருந்தால் அந்த நீர் நிரந்தர கடின
நீர் எனப்படும்.
> நீரின் நிரந்தர கடினத்தன்மையை
நீக்குதல்.
1. சலவைச் சோடாவை சேர்த்தல் :
> சலவைச் சோடாவானது குளோரைடு
மற்றும் சல்பேட்டுகளை கரையாத கார்பனேட் உப்புகளாக மாற்றுகிறது.
> வடிகட்டிகள் மூலம் இவற்றை
எளிதில் நீக்கி விடலாம்.
2. வாலை வடித்தல் :
> தற்காலிக மற்றும் நிரந்தர
கடினத்தன்மை இரண்டையும் வாலை வடித்தல் முறையால் அகற்றலாம்.
> இம்முறைக்கு உட்படுத்தப்பட்ட
பின் பெறப்படும் காய்ச்சிய நீர் வாலைவடிநீர் எனப்படும்.
> இது மிகவும் தூய்மையான நீராகும்
3. மின்னாற்பகுத்தல்
என்றால் என்ன? நீரை மின்னாற்பகுக்கும் முறையை விளக்குக.
> மின்னாற்றலை செலுத்தி ஒரு
பொருளினை அதன் கூறுகளாக பிரிக்கும் செயல்முறை மின்னாற் பகுத்தல் எனப்படும்.
> ஒரு கண்ணாடி குடுவையினுள்
இரண்டு கார்பன் தண்டுகள் பொருத்தப்பட்டு மூன்றில் ஒரு பங்கு நீர் நிரப்பப்படுகிறது.
> நேர்மறை கார்பன் தண்டு
ஆனோடு ஆகும்.
> • எதிர்மறை கார்பன் தண்டு
கேத்தோடு ஆகும்.
> இரண்டு சோதனை குழாய்கள்
படத்தில் காட்டியவாறு கார்பன் தண்டுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
> சோதனைக் குழாய்கள் ஒரு
குறிப்பிட்ட வாயுவால் நிரப்பப்படும் வரை மின் தண்டுகளை மின்கலனுடன் இணைத்து மின்னாற்றல்
செலுத்தப்படுகிறது.
> நிரப்பப்பட்ட வாயுக்களை
எரியும் தீக்குச்சி கொண்டு சோதிக்கும்போது கேத்தோடில் உள்ள வாயு “பாப்” என்ற ஒலியுடன் அணைகிறது. எனவே இவ்வாயு
ஹைட்ரஜன் ஆகும்.
> ஆனோடில் உள்ள வாயு தீக்குச்சியை
மேலும் பிரகாசமாக எரியச் செய்கிறது. எனவே இவ்வாயு ஆக்சிஜன் ஆகும்.
> -ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
வாயுவின் விகிதம் 2 : 1 ஆகும்.
> எனவே கேத்தோடில் சேகரிக்கப்படும்
ஒவ்வொரு இரண்டு பங்கு ஹைட்ரஜன் வாயுவிற்கும் ஆனோடில் ஒரு பங்கு ஆக்சிஜன் வாயு சேகரிக்கப்படுகிறது.
4. பல்வேறு
நிலைகளில் நீர் மாசுபடுதலை விளக்குக.
1. வீட்டு உபயோக டிடர்ஜெண்டுகள் :
> வீட்டு உபயோக டிடர்ஜெண்டு,
சில ஷாம்பு, ஃபேஸ்வாஷ், ஷவர் ஜெல் மற்றும் பற்பசையில் நுண் நெகிழித் துண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
> இவை மைக்ரோபீட்ஸ் எனப்படுகின்றன.
> அவை அழுத்தித் தேய்த்தல்
மற்றும் சருமத்தை சுத்தம் செய்தல், பற்களை மெருகூட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக
சேர்க்கப்படுகின்றன.
> இந்த மைக்ரோபீட்கள் நம்
வடிகாலில் சென்று நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன.
> மீன் மற்றும் பிற விலங்குகள்
அவற்றை தற்செயலாக உண்ணுகின்றன.
2. கழிவு நீர் :
> சுத்திகரிக்கப்படாத கழிவு
நீரில் உணவுக்கழிவுகளிலிருக்கும், கரிமப் பொருட்கள், வீட்டுப் பொருட்களிலிருக்கும்
வேதிப்பொருட்கள் போன்ற அசுத்தங்கள் உள்ளன.
> மேலும் இது நோயை உருவாக்கும்
நுண்ணுயிரிகளையும் கொண்டிருக்கக் கூடும்.
3. வீட்டு உபயோக திட மற்றும் நெகிழி கழிவுகள் :
> நெகிழி உள்ளிட்ட திடக்கழிவுகள்
ஏரி, ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் சேருகிறது.
> நெகிழிகள் வடிகாலை அடைத்து
மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை பரப்புகிறது.
> நீர் நிலைகளில் உள்ள கழிவுகள்
நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கின்றன.
4. விவசாயம் :
> உரங்கள், பூஞ்சைக் கொல்லிகள்
மற்றும் பூச்சிக் கொல்லிகள் மழைநீரில் கரைந்து ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகளில்
பாயும்.
> இது நைட்ரேட்டுகள் மற்றும்
பாஸ்பேட் போன்ற ஊட்டச் சத்துக்களோடு சில நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களையும் நீர்
நிலைகளில் சேர்க்கின்றன.
> அவை நீர் வாழ் உயிரினங்களுக்கு
தீங்கு விளைவிக்கும்.
5. தொழிற்சாலை கழிவு :
> பல தொழிற்சாலைகள் ஈயம்,
பாதரசம், சயனைடுகள், காட்மியம் போன்ற நச்சுக் கழிவுகளை வெளியிடுகின்றன.
> இவை சுத்திகரிக்கப்படாமல்
நீர் நிலைகளில் வெளியிடப்படும் போது மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் நீர்வாழ்
உயிரினங்கள் பாதிக்கிறது.
6. எண்ணெய் கசிவுகள் : -
> பெருங்கடல்களில் கச்சா
எண்ணெயை பெற துளையிடுவதிலும், கொண்டு செல்வதிலும் விபத்துகள் அதிகரித்துள்ளன.
> எண்ணெய் கசிவுகள் நீர்
மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
> இது நீர்வாழ் உயிரினங்களுக்கு
தீங்கு விளைவிக்கும்.
> நீர் மேற்பரப்பில் மிதக்கும்
எண்ணெய் சூரிய ஒளியை தடுக்கிறது.
> நீரில் கரைந்திருக்கும்
ஆக்சிஜனைக் குறைத்து கடல் உயிரினங்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.
7. வெப்ப மாசுபாடு :
> அனல் மற்றும் அணு மின்
நிலையங்கள் மற்றும் பல தொழிற்சாலைகளில் குளிரூட்டும் நோக்கங்களுக்காக அதிக அளவு நீர்
பயன்படுத்தப்படுகிறது.
> பயன்படுத்தப்பட்ட நீர்
அதிக வெப்பநிலை மற்றும் வேதிப்பொருட்களுடன் மீண்டும் நீர் ஆதாரங்களில் வெளியேற்றப்படுகிறது.
> இந்த உயர்வெப்பநிலை நீரில்
கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவைக் குறைத்து நீர்வாழ் உயிரினங்களை மோசமாக பாதிக்கிறது.
செயல்பாடுகள்
செயல்பாடு
1
சிறிதளவு நீரற்ற தாமிர (II) சல்பேட் தூளை காட்சிக் கண்ணாடியில்
எடுத்துக் கொண்டு அதனுடன் நீரினை சிறிதுசிறிதாகச் சேர்க்கவும். தூளின் நிறத்தில் மாற்றம்
உள்ளதா? நிறமற்ற தூள் நீல நிறமாக மாறுகிறது. இது நீரினை கண்டறிவதற்கான சோதனை ஆகும்.
விடை : வெண்மை நிற நீரற்ற தாமிர (II) சல்பேட் நீரை உறிஞ்சி நீலநிற படிக
தாமிர (II) சல்பேட்டாக மாறுகிறது
செயல்பாடு
2
ஒரு குடுவையினை நீரால் நிரப்பவும், கத்தியால்
சோடியத்தை சிறு துண்டுகளாக வெட்டி நீரினுள் போடவும். சோடியம் நீருடன் வினைபுரிந்து
நீரின் மேற்பரப்பு முழுவதும் நகருகிறது. மேலும் நீரின் மேற்பரப்பில் சுடர் எரிவதையும்
காணலாம்.
விடை : சோடியம் நீருடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயு மற்றும் சோடியம்
ஹைட்ராக்சைடு ஆகியவற்றை உருவாக்குகிறது. வெப்பம் வெளிப்படும். இவ்வினையில் ஹைட்ரஜன்
வாயு தீப்பற்றி எரிகிறது.
2Na + 2H2O - 2NaOH+ H2
செயல்பாடு
3
சிறிதளவுகுழாய் நீரினை ஒருசுத்தமானகாட்சிகண்ணாடியில்
எடுத்து படத்தில் காட்டியுள்ளவாறு தண்ணீரைக் கொண்ட ஒரு குடுவையின் மீது வைத்து வெப்பப்படுத்தவும்.
காட்சி கண்ணாடியிலிருக்கும் எல்லா நீரும் ஆவியானதும் அதனை எரிப்பானிலிருந்து அகற்றி
குளிர வைக்கவும். காட்சி கண்ணாடியில் நீங்கள் காண்பது என்ன?.
விடை : காட்சி கண்ணாடியின் மீது பல பொது மைய வளையங்கள் காணப்படுகிறது.
நீரில் கரைந்துள்ள உப்புகள், தாதுக்கள் படிவதே இதற்கு காரணம் ஆகும்.
செயல்பாடு
4
ஒரு குடுவையில் பாதியளவு நீரினை நிரப்பி சூடாக்கவும்.
நீர் அதன் கொதிநிலையை அடைவதற்கு முன்பே குடுவையின் ஓரங்களில் சிறிய குமிழ்கள் தோன்றுவதை
நீங்கள் காண்பீர்கள். இந்த குமிழ்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் வாயுக்கள் ஆகும்
செயல்பாடு
5
இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு தொட்டிச்செடிக்கு குழாய் நீரையும், மறுதொட்டிச்செடிக்கு கடல்நீரையும் ஊற்றவும்.
சில நாட்கள் கழித்து தாவரங்களின் வளர்ச்சியை கவனிக்கவும்.
விடை :
> குழாய் நீரை ஊற்றிய தொட்டியிலுள்ள செடி நன்கு வளர்கிறது.
> கடல் நீரை ஊற்றிய தொட்டியிலுள்ள செடி நன்கு வளரவில்லை. காரணம்
உப்புகள் கரைந்துள்ள கடல் நீர். தாவரங்கள் வளர்ச்சிக்கு துணை புரிவதில்லை .
செயல்பாடு
6
> குழாய் நீர் மென்நீராகும். ஏனெனில் அது
திரவ சோப்புடன் அதிக அளவு நுரையை உருவாக்குகிறது. நீர் மாதிரி நுரையின் உயரம் காரணம்
அதில் கால்சியம், மெக்னீசியத்தின் குழாய் நீர் 4 செ.மீ. கார்பனேட் மற்றும் பை கார்பனேட்
உப்புகள் இல்லை. கிணற்று நீர் 1 செ.மீ
> கிணற்று நீர் கடின நீராகும். ஏனெனில்
அது குளத்து நீர் 2 செ.மீ திரவ சோப்புடன் குறைந்த அளவு நுரையை ஆற்று நீர் | 3 செ.மீ
உருவாக்குகிறது. காரணம் அதில் கால்சியம், மெக்னீசியத்தின் கார்பனேட் மற்றும் பை கார்பனேட்
உப்புகள் கரைந்துள்ளன.