Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | மின்காந்த கதிர்வீச்சு நிறமாலை
   Posted On :  06.07.2022 11:43 am

11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை

மின்காந்த கதிர்வீச்சு நிறமாலை

மின்காந்த கதிர்வீச்சு நிறமாலையில் புலனாகும் ஒளிக்கதிர்களடங்கிய பகுதி மிகவும் சிறிய பகுதி மட்டுமே.

மின்காந்த கதிர்வீச்சு நிறமாலை:

மின்காந்த கதிர்வீச்சு நிறமாலையில் புலனாகும் ஒளிக்கதிர்களடங்கிய பகுதி மிகவும் சிறிய பகுதி மட்டுமே. இப்புவியின் ஒட்டு மொத்த உயிர் வாழ்க்கை ஒளியை சார்ந்தே உள்ளது. மேலும் இதுவே உந்துசக்தியாகவும் உள்ளது. தாவரங்கள் இயற்கையாகவே சூரிய ஆற்றலை நேரடியாக பயன்படுத்தும் திறன் பெற்றவை. இங்கே கொடுக்கப்பட்ட படத்தில் (13.4) மின்காந்த கதிர்வீச்சு நிறமாலை மற்றும் ஒளியின் புலனாகும் ஒளிக்கதிர்களடங்கிய பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 300 முதல் 2600 nm அலைநீளமுள்ள சூரிய கதிர்வீச்சு பூமியை வந்தடைகிறது. இதில் புலனாகும் நிறமாலையின் அளவு 390 to 763 nm (3900 முதல் 7630) அலைநீளமே ஒளியின் நிறத்தை தீர்மானிக்கிறது. ஒளியின் ஆற்றலானது அதன் அலை நீளத்திற்கு எதிர் விகிதப் பொருத்தத்தில் உள்ளது. குறுகிய அலைநீளமுடையது குறைந்த ஆற்றலை கொண்டிருக்கிறது. மின்காந்த நிறமாலையானது 7 வகையான கதிர்வீச்சை பெற்றுள்ளது. இவை முறையே காஸ்மிக் கதிர்கள், காமா கதிர்கள் , X- கதிர்கள், U-V கதிர்கள், புலனாகும் மின்னியக் கதிர்கள் மற்றும் ரேடியோ கதிர்வீச்சு (படம் - 13.4). 

 


 


உங்களுக்குத் தெரியுமா?

ஒளியானது மிக அதிகப்படியான வேறுபாடுடையது, ஒரு வேளை கதிர்வீச்சானது சமமாக இப்பூமியில் பரவியிருந்தால் அதுவே 350 தடிமன் உடைய பனிக்கட்டியை உருக்க கூடியதாக இருந்திருக்கும்.


ஒளியின் பண்புகள்


1 ஒளியானது கிடைத்தளமாக செல்லும் மின்காந்த அலைகளாகப் பயணிக்கிறது.

2 இதில் ஒளி செல்லும் திசைக்கு செங்குத்தாகவும் மற்றும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகவும் ஊசலாடும் மின் மற்றும் காந்த புலம் காணப்படுகின்றன.

3 ஒளியானது 3 x 108 ms-1 வேகத்தில் செல்கிறது.

4 அலைநீளம் என்பது அடுத்தடுத்த இரு அலை முகடுகளுக்கு இடைப்பட்ட தூரம்.

5 ஒளியின் மிகச்சிறிய துகள் போட்டான் எனப்படுகிறது. ஒவ்வொரு போட்டான் பெற்றிருக்கும் ஆற்றலுக்கு குவாண்டம் (Quantum) என்று பெயர்.

6 போட்டானின் ஆற்றலானது ஒளியின் அதிர்வெண்ணைப் பொறுத்தது. (படம் 13.5)



11th Botany : Chapter 13 : Photosynthesis : Spectrum of ­Electromagnetic Radiation in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை : மின்காந்த கதிர்வீச்சு நிறமாலை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை