வளர்சிதைமாற்றம் - CAM சுழற்சி அல்லது கிராசுலேசியன் அமில வளர்சிதைமாற்றம் | 11th Botany : Chapter 13 : Photosynthesis
CAM
சுழற்சி அல்லது கிராசுலேசியன் அமில வளர்சிதைமாற்றம்
வறண்ட அல்லது பகுதி வறட்சி கொண்ட சூழலில் வளரும் சதைப்பற்றுடைய தாவரங்களில் கண்டறியப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை கார்பன் வழித்தடம் இதுவாகும். இவ்வழித்தடம்கிராசுலேசியன் குடும்பத்தைச் சார்ந்த பிரையோஃபில்லம், செடம், கலான்சோ போன்ற தாவரங்களில் முதலில் கண்டறியப்பட்டது எனவே இப்பெயரைப் பெற்றது. இச்சுழற்சி அகேவ், ஒப்பன்ஷியா, பைன்ஆப்பிள், ஆர்க்கிடுகள் போன்ற பிற குடும்பத் தாவரவங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தாவரங்களின் இலைத்துளையானது பகலில் மூடியும் இரவில்
திறந்தும் காணப்படும். இவ்வகை இலைத்துளைகள் ஸ்கோடோ
ஆக்டிவ் இலைத்துளைகள் எனப்படுகின்றன. இந்த வகை தலைகீழ் இலைத்துளை இயக்க லயம் நீராவிப் போக்கின் மூலம் நடைபெறும் நீர்
இழப்பையும் மற்றும் பகல் நேரத்தில் நடைபெறும் CO2 நிலைநிறுத்தத்தையும் தடுக்க
உதவுகிறது. CAM தாவரங்கள் இரவில் கார்பன்டை ஆக்ஸைடைப் பாஸ்போ ஈனால்பைருவிக் அமிலத்தின்
(PEP) உதவியால் நிலைநிறுத்தம் செய்து ஆக்ஸலோ அசிட்டிக் அமிலம் (OAA) உருவாகிறது. இதனைத்
தொடர்ந்து C4 சூழற்சியை போன்றே OAA வானது மாலிக் அமிலமாக மாறுகிறது. மாலிக் அமிலமானது
வாக்குவோல்களில் சேகரிக்கப்பட்டு அமிலத்தன்மையை அதிகரிக்கச்செய்கிறது.
அமிலத் தனைமையின் உயர்வு காரணமாகப் பகல் நேரத்தில்
இலைத்துளையானது மூடுகிறது. இதற்கு மாறாக இரவுப்பொழுதில் மாலிக் அமிலமானது கார்பன் நீக்கமடைந்து
பைருவிக் அமிலமாக மாறுவதால் அமிலத்தன்மை குறைகிறது. இவ்வினையில் உருவான CO2
கால்வின் சுழற்சியில் நுழைந்து கார்போஹைட்ரேட்டுகளை உருவாக்குகிறது. அத்துடன் இலைத்துளைகள்
திறக்கின்றன. (படம் 13.19).
நீங்கள்
கற்றதை சோதித்தறிக.
C4 தாவரங்களுக்கு ஒரு குளுக்கோஸ் உற்பத்தி
செய்வதற்குத் 30 ATP, 12 NADPH + H+ தேவைப்படுகிறது. ஆனால் C3 தாவரங்களுக்கு
18 ATP மற்றும் 12 NADPH + H+ மட்டுமே தேவைப்படுகின்றது. அவ்வாறெனில்
எவ்வாறு நாம் C4 தாவரங்கள் சிறந்தவை எனக்கூறமுடியும்?
விளக்கம்: C4 தாவரங்கள் C3 தாவரங்களைவிடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் C3 தாவரங்கள் C4 தாவரங்களைவிட அதிக அளவு ஆற்றலை ஒளிசுவாசத்தின்போது இழக்கிறது.
1. சதைப்பற்றுள்ள தாவரங்களில் இலைத்துளை மூடி இருக்கும் போது மாலிக் அமிலத்திலிருந்து CO2 பெறுவது சாதகமானது.
2. பகல் நேரத்தில் இலைத்துளை மூடியுள்ளது. CO2 எடுத்துக்கொள்வதில்லை. ஆனாலும் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையைத் தொடர்கின்றன.
3. பகல் நேரத்தில் இலைத்துளை மூடியிருப்பதால் நீராவி போக்கினால் ஏற்படும் நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது.