தாவரவியல் - ஒளிச்சேர்க்கை : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 13 : Photosynthesis
தாவர செயலியல்
மதிப்பீடு
1.
கூற்று (A) : தைலகாய்டுகளின் உள் இடைவெளியில்
அதிகரிக்கும் புரோட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக
உள்ளது.
காரணம்
(R)
: PSI இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளியேற்றம் கூட்டமைப்பு தைலக்காய்டு
உறையின் மீது ஸ்டீரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H+ அயனிகளை வெளியேற்றுகிறது.
அ) கூற்று மற்றும் காரணங்கள் சரி
ஆ) கூற்று சரி, காரணங்கள் தவறு
இ) கூற்று தவறு, காரணங்கள் சரி
ஈ) கூற்று, காரணங்கள் இரண்டும் தவறு
2. எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால் பகுதி காணப்படுவதில்லை.
(அ) பச்சையம் a
(ஆ) பச்சையம் b
(இ) பச்சையம் c
(ஈ) பச்சையம் d
3. ஒளி வினையில் எலக்ட்ரான் ஓட்டத்தின் சரியான வரிசைமுறை.
அ) PS II, பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், PS I, பெர்ரிடாக்ஸின்
ஆ) PS I, பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், PS II, பெர்ரிடாக்ஸின்
இ) PS II, பெர்ரிடாக்ஸின், பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், PS I
ஈ) PS II பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், பெர்ரிடாக்ஸின், PS I
4. C3 சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு CO2 மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணிக்கை
(அ) 2 ATP + 2 NADPH
(ஆ) 2 ATP + 3 NADPH
(இ) 3 ATP + 2 NADPH
(ஈ) 3 ATP + 3 NADPH
5. ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.
அ) ஒளிசார் நீர் பகுப்பு PS I உடன் தொடர்புடையது.
ஆ) PS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது.
இ) PS I-ன் வினை மையமான பச்சையம்‘a’-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 680 nm ஆகும்.
ஈ) PS II-ன் வினை மையமான பச்சையம் ‘a’-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 700 nm ஆகும்.
6. ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது. இரு பிரிவு தாவரங்களின் ஒளிச்சேக்கை வீதத்தை ஒப்பிடுக.
7. ஒரு மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. இந்த கூற்றினை நீ உண்மை என நம்புகிறாயா? உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்துக.
8. ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட புற்கள் தவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.
9. ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் C4 தாவரங்கள்
ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP-களை பயன்படுத்துவதாகவும், C3 தாவரங்கள்
18 ATP-க்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும விளக்குகிறார். பின்னர் அதே
ஆசிரியர் C4 தாவரங்கள் தான் C3 தாவரங்களை விட சிறந்த தகவமைப்பு பெற்றுள்ளதாக
கூறுகிறார். இந்த முரண்பாட்டிற்கான காரணங்களை உன்னால் கூற
முடியுமா?
10. அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும்? காரணங்களை ஆராய்க.