ஒளிச்சேர்க்கையின்
நவீன கோட்பாடு
ஒளிச்சேர்க்கை என்பது ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்க
வினைகளாகும். நீரானது ஆக்ஸிஜனேற்றமடைந்து ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது மற்றும் கார்பன்டை
ஆக்ஸைடானது ஒடுக்கமடைந்து கார்போ ஹைட்ரேட்களாகிறது.
ஒளிச்சேர்க்கையின் முதல் கட்ட நிகழ்வில் ஒளியானது தேவைப்படுவதால்
அதற்கு ஒளிவினை அல்லது ஹில் வினை என அழைக்கப்படுகிறது. இரண்டாம்
கட்ட நிகழ்வில் ஒளி தேவைப்படுவதில்லை. ஆனால் ஒளி வினையில் உருவான ஆற்றலை பயன்படுத்தி
கார்பன்டை ஆக்ஸைடு கார்போஹைட்ரேட்களாக ஒடுக்கம் அடைகிறது. இவ்வினை இருள்வினை என அழைக்கப்படுகிறது.
(படம் 13.9).
1. ஒளிவினை:
இது ஒரு ஒளிவேதி வினையாகும் அதேசமயம் இருள்வினை ஒரு வெப்பவேதி வினையாகும். சூரிய ஆற்றலானது குளோரோஃபில்கள் மூலம் பிடிக்கப்பட்டு வேதி ஆற்றலான (தன்மயமாதல் ஆற்றல்கள்) ATP மற்றும் NADPH + H+ ஆக சேமித்து வைக்கப்படுகிறது. இவற்றுள் NADPH + H+ மட்டும் ஒடுக்கும் ஆற்றலாக செயல்படுகிறது. ஒளிவினையானது பசுங்கணிகங்களின் தைலகாய்டு சவ்வுகளில் நடைபெறுகிறது. இந்நிகழ்வின் போது நீர் மூலக்கூறானது ஒளியினால் பிளக்கப்பட்டு ஆக்ஸிஜன் வெளியேற்றப்படுகிறது.
ஒளி வினையாது இரண்டு நிலைகளில் விவரிக்கப்படுகிறது.
• ஒளியாற்றலானது ஈர்க்கப்படுதல்.
• துணை நிறமிகளிடம் இருந்து ஆற்றலானது வினை மையத்திற்கு கடத்தப்படுதல்.
• குளோரோஃபில் a நிறமி தூண்டப்படுதல்.
• ஒளியின் நீர்பிளப்பு மற்றும் ஆக்ஸிஜன் விடுவிப்பு.
• எலக்ட்ரான் கடத்தல் மற்றும் தன்மயமாதல் ஆற்றல்கள்
(ATP, NADPH + H+ ) உருவாக்கம்.
இவ்வினையில் கார்பன்டை ஆக்ஸைடு நிலைநிறுத்தப்பட்டு மற்றும் ஒடுக்கம் அடைந்து கார்போ ஹைட்ரேட்டுகளாக மாற்றப்படுகிறது. இதற்கு ஒளி வினையின் போது உருவான தன்மயமாதல் ஆற்றல்களான ATP மற்றும் NADPH + H+ பயன்படுத்தப்படுகிறது. இவ்வினைக்கு ஒளி அவசியமில்லை எனவே இதற்கு இருள்வினை என்றும், கண்டறிந்தவர்களின் பெயர்களால் கால்வின்-பென்சன் சுழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.