Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

ஒளிச்சேர்க்கை - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 13 : Photosynthesis

   Posted On :  06.07.2022 11:18 pm

11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

தாவரவியல் : ஒளிச்சேர்க்கை - முன்பதிவு மற்றும் முக்கியமான கேள்விகளுக்கான பதில்கள் - சுருக்கமான கேள்விகள் பதில்கள், குறுகிய கேள்விகளுக்கான பதில்கள்

11 வது தாவரவியல் : அலகு 13

ஒளிச்சேர்க்கை


 

6. ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ) மற்றும் (ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. (அ) பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலைநீளமுள்ள ஒளியும் (ஆ) பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலைநீள ஒளியும் வழங்கப்படுகிறது. இரு பிரிவு தாவரங்களின் ஒளிச்சேர்க்கை வீதத்தை ஒப்பிடுக.

விடை :

A பிரிவு தாவரங்கள் 400 - 450nm அலைநீள ஒளி வழங்கப்படுகிறது. பச்சையமோ 450 nm (நீலப்பகுதி) அதிக பட்ச உறிஞ்சுதல் திறன் கொண்டுள்ளதால் அதன் ஒளிச்சேர்க்கை வீதம் அதிகமாக உள்ளது.

B பிரிவு தாவரங்கள் 500 - 550 nm அலைநீள ஒளிக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த அலைநீளம் ஈர்ப்பு நிறமாலையின் பச்சை நிறத்திற்கான பகுதி. எனவே பச்சையம் இந்த ஒளியை பிரதிபலித்து விடுவதால் தாவரம் பசுமையாகக் காணப்படுகிறது.

இந்த பகுதியில் ஒளிச்சேர்க்கை மிக மிகக் குறைவாகவே அல்லது இல்லாமலும் காணப்படுகிறது.


 

7. ஒரு மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது இந்த கூற்றினை நீ உண்மை என நம்பிகிறாயா? உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்துக.

விடை :

* அலோ வீரா, அரசமரம், சில வகை பனை வகை தாவரங்கள் என சில வீட்டு உள் அலங்காரத்திற்கு வளர்க்கப்படும். தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இது ஏனெனில் ஆக்ஸிஜன் ஒளிச்சேர்க்கையின் ஒளிவினையின் போது வெளியிடப்படுகிறது. எனவே அதற்கு ஒளி அவசியம் எனவே இரவில் ஆக்ஸிஜன் தாவரங்கள் வெளியிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பது தான் உண்மை.


 

8. ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட புற்கள் தகவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன. இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.

விடை :

இந்தத் தகவமைப்பு யாதெனில் கார்பன்டை ஆக்ஸைடு - நிலைநிறுத்தம் புற்களில் இரு நிலைகளில் காணப்படுகிறது முதல் நிலை இலை இடைத்திசு செல்களின் ஸ்ட்ரோமாவிலும் இரண்டாம் நிலை கற்றை உறை செல்களிலும் நடைபெறுகிறது (டை கார்பாக்சிலேஷின் வழித்தடம் அல்லது C4 சுழற்சி)

இலை இடைத்திசுக்களின் ஸ்ட்ரோமாவில் நடைபெறுவது - (முதல் நிலை CO2 நிலை நிறுத்தம்)

அ. பாஸ்போ ஈனால் பைருவேட் + CO2 PEP கார்பாக்சிலேஸ் ஆக்சலோ அசிட்டிக் அமிலம் 3C (PEP) - நொதி

4C(OAA)

ஆ. ஆக்ஸலோ அசிட்டிக் அமிலம் (OAA) மாலிக் அமிலம் / ஆஸ்பார்டிக் அமிலம்

இ. மாலிக் அமிலம் பிளாஸ்மாடெஸ்மேட்டா வழியாக கற்றை உறை செல்களுக்குக் கடத்தப்படுகிறது.

கற்றை உறை செல்களில் நடைபெறுவது - (இரண்டாம் நிலை CO2 நிலை நிறுத்தம்)

அ. மாலிக் அமிலம் (கார்பன் நீக்கமடைகிறது) பைருவிக் அமிலம் + CO2

ஆ. வெளியேற்றப்பட்ட CO2 + RUBP கால்வின் சுழற்சியைத் தொடர்கிறது

RUBP + CO2 RUBIS CO 2PGA (3C)

இ. இதன் முடிவில் உருவாக்கப்படும் கார்போஹைட்ரேட்டானது ஃபுளோயத்திற்கு கடத்தப்படுகிறது.


 

9. ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் C4 தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP களை பயன்படுத்துவதாகவும், C3 தாவரங்கள் 18 ATP க்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் விளக்குகிறார். பின்னர் அதே ஆசிரியர் C4 தாவரங்கள் தான் C3- யை விட சிறந்த தகவமைப்பு பெற்றுள்ளதாகக் கூறுகிறார். இந்த முரண்பாட்டிற்கான காரணங்களை உன்னால் கூற முடியுமா?


C3 தாவரங்கள்

1. CO2 நிலைநிறுத்தம் இலையிடத் திசுக்களில் மட்டும் நடைபெறுகிறது.

2. CO2 வை நிலைநிறுத்தும் பொருள் RUBP மட்டும்

3. தோன்றும் முதல் விளைபொருள் 3C – PGA

4. கிரான்ஸ் உள்ளமைப்பு காணப்படுவதில்லை

5. இலையிடைத் திசு செல்களின் பசுங்கணிகங்கள் கிரானம் பெற்றவை

6. திசு ஒரே வகை வடிவுடைய பசுங்கணிகங்கள்

7. உகந்த வெப்பநிலை 20° முதல் 25°C

8. CO2 - வை நிலைநிறுத்தும் 50 ppm செறிவில் நடைபெறுகிறது.

9. அதிக ஒளிச்சுவாசத்தினால் குறைவான செயல்திறன் பெற்றது.

10. RUBP கார்பாக்சிலேஸ் நொதி CO2 நிலைநிறுத்ததிற்கு உதவுகிறது.

11. ஒரு குளுக்கோஸ் உருவாக்கத்திற்கு 18 ATP கள் பயன்படுத்தப்படுகிறது.

12. குறைவான CO2 செறிவில் செயல்திறன் மிக்கது.

13. எடுத்துக்காட்டு: நெல், கோதுமை, உருளை 

C4 தாவரங்கள்

1. CO2 நிலைநிறுத்தம் கற்றை உறை மற்றும் இலையிடைத்திசு ஆகியவைகளில் நடைபெறுகிறது.

2. PEP இலையிடைத் திசுவிலும் கற்றை உறையில் RUBP -யும் நிலைநிறுத்தம் பொருள்களாக உள்ளன.

3. தோன்றும் முதல் விளைபொருள் 4C - OAA

4. கிரான்ஸ் உள்ளமைப்பு காணப்படுவதில்லை.

5. கிரானம் இடையிடைத் திசு செல்களின் பசுங்கணிகங்கள் காணப்படுகிறது. கற்றை உறை செல்களின் பசுங்கணிகங்கள் கிரானம் அற்றவை.

6. இரு வகை வடிவுடைய பசுங்கணிகங்கள்

7. உகந்த வெப்பநிலை 30° முதல் 45°C

8. CO2 - வை நிலைநிறுத்தும் 10 ppm செறிவிற்குக் குறைவான செறிவில் நடைபெறுகிறது.

9. குறைவான ஒளிச் சுவாசத்தினால் அதிகச் செயல் திறன் பெற்றது

10. PEP கார்பாக்சிலேஸ் மற்றும் RUBP கார்பாக்சிலேஸ் நொதிகள் CO2 நிலைநிறுத்தத்திற்கு உதவுகின்றன.

11. ஒரு குளுக்கோஸ் ஆக்கத்திற்கு 30 ATP -கள் பயன்படுத்தப்படுகிறது.

12. மிகையான CO2 செறிவில் செயல்திறன் மிக்கது.

13. எடுத்துக்காட்டு : கரும்பு, சோளம், மக்காசோளம், அமராந்தஸ்


 

10. அதிகமான ஒளியும் அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும்? காரணங்களை ஆராய்க.

* ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல்களில் CO2 இல்லாத போது மற்றும் O2 அதிகரிக்கும் போது நடைபெறும் அதிகப்படியான சுவாசம் ஒளிச்சுவாசம் எனப்படும்.

* C2 சுழற்சியின் போது RUBISCO – வின் கார்காக்சிலேஸ் செயல் ஆக்ஸிஜனேஸ் செயலாக மாறுகிறது.

* C2 சுழற்சியானது, பசுங்கணிகம், பெராக்ஸிசோம் மற்றும் மைட்டோகாண்டிரியம் எனும் மூன்று செல் நுண்ணுறுப்புகளில் நடைபெறுகிறது.

* இது ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் செல்களை ஆக்ஸிஜனேற்ற சிதைவிலிருந்து பாதுகாக்கிறது.


Tags : Photosynthesis | Plant Physiology (Functional Organisation) | Botany ஒளிச்சேர்க்கை - தாவரவியல்.
11th Botany : Chapter 13 : Photosynthesis : Answer the following questions Photosynthesis | Plant Physiology (Functional Organisation) | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - ஒளிச்சேர்க்கை - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை