ஒளிஈர்ப்பு
நிறமாலை மற்றும் ஒளிசெயல்திறன் நிறமாலை
1.
ஒளிஈர்ப்பு நிறமாலை
ஒளியை பிரதிபலிக்காமல், கடத்தாமல் ஒளியை முழுமையாக
தேக்கிவைத்துக்கொள்வது ஒளி ஈர்ப்பு எனப்படும். நிறமிகள் ஒளியின் பல்வேறு அலைநீளங்களை
ஈர்த்துக் கொள்கிறது. ஒளிஈர்ப்பு நிறமாலை என்பது ஒளியின் பல்வேறு அலை நீளங்களையும்,
நிறமிகளின் ஒளி ஈர்ப்பையும் வரைபடத்தில் பொருத்தி பெறப்படும் வளைவு வரைப்படமாகும்.
• குளோரோஃபில் 'a' மற்றும் குளோரோஃபில் 'b' நிறமியானது நீலம் மற்றும் சிவப்பு
பகுதியிலிருந்து குவாண்டாவை ஈர்க்கிறது.
• குளோரோஃபில் a யின் உயர்ந்த ஈர்ப்பு முகடுகள்
670 முதல் 673, 680 முதல் 683 மற்றும் 695 முதல் 705 Im வரை உள்ள அலைநீளங்களில் தோன்றுகிறது.
• குளோரோஃபில் a 680 (P680) குளோரோஃபில் a 700
(P700) முறையே PS II மற்றும் PS I க்கு ஈர்ப்பு மையமாக செயல்படுகின்றன.
2.
ஒளி செயல்திறன் நிறமாலை
ஒளிச்சேர்க்கையின் போது பல்வேறு ஒளி அலைகளின் செயல்திறனை
அளவிட அவற்றின் குவாண்டம் விளைச்சலுடன் ஒப்பிட்டு வரைபடம் வரையும் போது உருவாகும் வளைவுகள்
கொண்ட வரைபடம் செயல்திறன் நிறமாலை எனப்படுகிறது.
செயல்திறன் நிறமாலையைக் காட்டும் வரைகோட்டுறுவிலிருந்து அதிகப்படியான ஒளிச்சேர்கையானது
நீலம் மற்றும் சிவப்பு நிறமாலைகளில் நடைபெறுகிறது என நிரூபணமாகிறது. இந்த அலைநீளத்தின்
நிறமாலையில் குளோரோஃபில் 'a' மற்றும் குளோரோஃபில் 'b' யில் ஒளி ஈர்ப்பு அதிகமாக உள்ளது.
ஆக்ஸிஜன் வெளியேற்றும் ஒளிச்சேர்க்கை நிகழ்வில் இரண்டு வேறுபட்ட நிறமி அமைப்புகள் உள்ளன
என்பதனை கண்டறிய ஒளிசெயல்திறன் நிறமாலை ஒரு ஆரம்ப கருவியாக செயல்பட்டது (படம்
13.7).