Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | ஒற்றையாட்சிமுறை அரசாங்கம் (Unitary Form of Government)

வரையறை, நிறைகள், இயல்புகள் - ஒற்றையாட்சிமுறை அரசாங்கம் (Unitary Form of Government) | 11th Political Science : Chapter 6 : Forms of Government

   Posted On :  03.10.2023 06:52 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள்

ஒற்றையாட்சிமுறை அரசாங்கம் (Unitary Form of Government)

ஒற்றையாட்சி அரசாங்கம் என்பது ஒரு இறையாண்மையுடைய அரசு ஆகும். மத்திய அரசாங்கமே அனைத்து அதிகாரத்தையும் உள்ளடக்கியதாகும்.

ஒற்றையாட்சிமுறை அரசாங்கம் (Unitary Form of Government):

ஒற்றையாட்சி அரசாங்கம் என்பது ஒரு இறையாண்மையுடைய அரசு ஆகும். மத்திய அரசாங்கமே அனைத்து அதிகாரத்தையும் உள்ளடக்கியதாகும். மத்திய அரசாங்கம் தற்காலிகமாகப் பகிர்ந்தளித்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே பிற அமைப்புகள் செயல்பட இயலும்.ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அனைத்து அதிகாரங்களும் மையமாக ஓரிடத்தில் குவிந்து இருக்கும்

ஒற்றையாட்சி முறை அரசாங்கங்கள் - உதாரணம்; இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான் மற்றும் இலங்கை.


ஒற்றையாட்சியின் வரையறை

.வி.டைசி:

ஓர் மைய சக்தியே மேலான சட்டமியற்றும் அதிகாரத்தினை வழக்கமாகச் செயல்படுத்துகிறது.

கார்னர்:

ஒர் மத்திய அமைப்பிடம் அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களும் அரசமைப்பு மூலம் வழங்கப்பட்டிருக்கும்.

சி.எஃப். ஸ்ட்ராங்:

ஒற்றையாட்சி அரசாங்கத்திற்கு இரண்டு முக்கியத் தகுதிகள் உள்ளன அவையாவன:-

 மத்திய அரசாங்கத்தின் மேலான தன்மை 

 இறையாண்மையுடைய துணை அமைப்புகள் இல்லாதிருத்தல் 


ஒற்றையாட்சி முறை அரசாங்கத்தின் நிறைகள் (Merits of Unitary form of Government) 

சிறிய நாடுகளுக்கு உகந்தது 

அதிகாரம் மற்றும் பொறுப்பு சார்ந்த மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.. 

ஒற்றையாட்சி முறையில் சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படுவதுடன் செயல்பாடுகள் விரைவாக இருக்கும்

ஒற்றையாட்சி முறை அரசாங்கம் குறைந்த செலவீனம் கொண்டதாகும்

அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டு வருவது எளிதாகும்

நாடு முழுவதற்குமான ஒரே சீரான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிர்வாகம் ஆகியவை இருக்கும்


ஒற்றையாட்சி முறை அரசாங்கத்தின் குறைகள் (De-merits of Unitary form of Government) 

 பெரிய நாடுகளுக்கு ஒற்றையாட்சி முறை பொருந்தாது

மத்திய அரசாங்கம் பல சிக்கலான பிரச்சினைகளை சமாளிக்க நேர்வதால் நிர்வாக ரீதியான தாமதம் எற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்

 மத்திய அரசானது வட்டாரத் தேவைகள் சார்ந்த துவக்கமுறை மற்றும் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை

  மத்திய அரசாங்கத்தில் அதிக அதிகாரங்கள் குவிந்து உள்ளதால், மத்திய அரசாங்கம் ஏதேச்சதிகாரமான போக்கை கடைபிடிக்க வாய்ப்புள்ளது


இந்திய அரசமைப்பின் ஒற்றையாட்சி இயல்புகள் 

) உறுதியான மத்திய அரசாங்கம்

அதிகாரப்பகிர்வானது மத்திய அரசுக்குச் சாதகமாக இருப்பதுடன், அதிகாரம் சமநிலையற்று பகிரப்பட்டிருக்கும். முதலில் இந்தியாவில் மத்தியப்பட்டியலானது மாநிலப் பட்டியலைவிட அதிக அதிகாரங்கள் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக முக்கியமான அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே இருக்கிறது. மூன்றாவதாக பொதுப்பட்டியலிலும் மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கி இருக்கிறது

) மாநில நிலப்பரப்புகளின் மீதான மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடு

இந்திய நாடாளுமன்றம் தன்னிச்சையாக மாநிலங்களின் பெயர், நிலப்பரப்பு மற்றும் எல்லைகளை வரையறை செய்ய இயலும்

) ஒற்றை அரசமைப்பு

இந்திய அரசமைப்பானது மத்திய அரசமைப்பை உள்ளடக்கியது ஆகும். இதன்படி மட்டுமே மத்திய, மாநில அரசாங்கங்கள் செயல்பட முடியும்.

) அரசமைப்பின் நெகிழும் தன்மை 

இந்திய அரசமைப்பின் பெரும்பான்மையான பகுதியை நாடாளுமன்றம் தன்னிச்சையாக அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக மாற்றலாம். இம்மாற்றங்களைச் செய்ய சாதாரண பெரும்பான்மை அல்லது சிறப்பு பெரும்பான்மை பெற்றிருந்தால் போதுமானதாகும்

) மாநிலங்களின் சமநிலையற்ற பிரதிநிதித்துவம் 

கூட்டாட்சி தத்துவத்தின்படி நாடாளுமன்றத்தின் மேலவையில் மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் அளித்தல் வேண்டும். மாறாக இந்திய மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் மாநிலங்களவையில் அளிக்கப்படவில்லை

) நெருக்கடி நிலை அதிகாரங்கள்

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது மத்திய அரசாங்கம் மிகவும் வலிமையாக இருப்பதுடன் மாநில அரசுகள் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும். நெருக்கடி நிலை காலத்தில் கூட்டாட்சி நடைமுறையானது அரசமைப்புச் சட்டதிருத்தம் செய்யப்படாமலேயே ஒற்றையாட்சி நிலைக்கு சென்றுவிடும். இவ்வகையான மாற்றம் எந்தவொருகூட்டாட்சி அமைப்பிலும் கிடையாது.

) ஒற்றைக் குடியுரிமை

இந்தியா ஒற்றைக்குடியுரிமை என்னும் முறையினை ஏற்றுக்கொண்டுள்ளது. நம் நாட்டில் இந்தியக் குடியுரிமை மட்டுமே உள்ளது, மாநிலங்களுக்கு தனி குடியுரிமை கிடையாது.

நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் பிறந்த அல்லது வசிக்கின்ற அனைத்து குடிமக்களும், மாநில வேறுபாடின்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கூட்டாட்சி அரசுகளில் குடிமக்கள் 'இரட்டைக் குடியுரிமை' பெற்றுள்ளனர். அதாவது தேசியக் குடியுரிமை மற்றும் மாநிலக் குடியுரிமை ஆகியவையாகும்

) ஒருங்கிணைந்த ஒரே நீதித்துறை

இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள் வரை படிநிலை அமைப்பின் அடிப்படையில் உள்ளது. இந்திய நீதிமன்றங்களுக்கு நேரடி மற்றும் மேல்முறையீட்டு அதிகாரங்கள் உள்ளன

) அகில இந்தியப் பணிகள்

இது அகில இந்திய பணிகள் அல்லது மத்தியப் பணிகள் மற்றும் மாநில குடிமைப் பணிகள் ஆகியவற்றின் இயல்புகளைக் கொண்டுள்ளது. மத்திய மற்றும் அகில இந்தியப் பணிகள் ஆகியவை ஒரே சீரான நிர்வாக முறைமை மற்றும் செயல்முறையினை இந்தியா முழுமைக்கும் ஊக்குவிக்கின்றன

) ஆளுநர் நியமனம்

மாநில ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார், இவர் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே பணியைத் தொடர்கிறார். ஆளுநர் என்பவர் மாநிலத்தின் செயலாட்சித்துறைத் தலைவர் ஆவார். அவருக்கு சட்டமன்றம், செயலாட்சி, நீதித்துறை மற்றும் நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள் உண்டு


Tags : Definition, Merits, Demerits, Features வரையறை, நிறைகள், இயல்புகள்.
11th Political Science : Chapter 6 : Forms of Government : Unitary Form of Government Definition, Merits, Demerits, Features in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள் : ஒற்றையாட்சிமுறை அரசாங்கம் (Unitary Form of Government) - வரையறை, நிறைகள், இயல்புகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள்