Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | அரசாங்கத்திலிருந்து ஆளுகை வரை பற்றிய கருத்தாக்கம்
   Posted On :  03.10.2023 08:30 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள்

அரசாங்கத்திலிருந்து ஆளுகை வரை பற்றிய கருத்தாக்கம்

ஆளுகை என்பது "முடிவுகள் எந்த செயல்முறையில் எடுக்கப்பட்டு அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதே ஆகும்.”

அரசாங்கத்திலிருந்து ஆளுகை வரை பற்றிய கருத்தாக்கம்

நல்ஆளுகை என்ற சொல்லானது பொது நிறுவனங்கள் எவ்வாறு மக்களின் பிரச்சனைகளை நிர்வகித்து நாட்டின் வளங்களையும் சரியான முறையில் மேலாண்மை செய்கின்றன என்பதைப் பற்றியதாகும். ஆளுகை என்பது "முடிவுகள் எந்த செயல்முறையில் எடுக்கப்பட்டு அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதே ஆகும்.”

அரசாங்கத்திலிருந்து ஆளுகை வரை


கூட்டு ஆளுகை அடிப்படையிலானது 

நெகிழ்வானது 

வெளிப்படையானது 

புதுமையானது 

துணிந்து முடிவெடுப்பது 

மக்களுக்கானது 

உள்நோக்கமுடையது

'அரசாங்கம்' மற்றும் 'ஆளுகை' ஆகிய இரண்டுமே ஒரே பொருளைக் கொண்டதாகும். இது ஓர் அமைப்பு, நிறுவனம் அல்லது அரசில் அதிகாரத்தைச் செயல்படுத்துவதைக் குறிப்பதாகும். கீழ்க்கண்ட பரிமாணங்களில் அரசாங்கம் மற்றும் ஆளுகையை வேறுபடுத்தலாம்

) ஆளுகைசெயல்பாட்டிலுள்ள நடவடிக்கைள் யாவை

) ஆளுகையில் உள்ளடங்கிய செயலமைப்புகள் யாவை

) இம் மறுவரையறையைத் தேவையாக்கிய நடைமுறைகள் யாவை

) நல் ஆளுகையை மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்பட்ட வரைகூறுகள் யாவை

) இதனை அடைவதற்காக மேம்படுத்தப்பட வேண்டிய திறன்கள் யாவை?

ஆளுகை என்பது ஒரு தேசத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாக அதிகாரத்தினை செயல்படுத்துவதாகும். ஆளுகை என்பது அனைத்து முறைகளையும் உள்ளடக்கியதாகும். நன்மையோ, தீமையோ ஆனாலும் சமுதாயங்கள், அதிகாரத்தினைப் பங்கிட்டு பொது ஆதாரங்கள் மற்றம் பிரச்சனைகளை கையாளுகின்றன. (UNDP, 1997)

ஒரு நாட்டின் மேம்பாட்டிற்காக அதன் சமூக மற்றும் பொருளாதார வளங்களை மேலாண்மை செய்வதற்காக அதிகாரத்தினை செயல்படுத்தும் பாங்கே ஆளுகையாகும். (ADB, 2000)

அரசாங்கத்திலிருந்து ஆளுகைக்கு செல்வது என்பது புதிய அமைப்புக்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் பழைய அமைப்புக்களையும் புதுப்பிப்பதாகும். தனது புதிய பங்கினை ஆற்றுவதற்கு அரசு வலுப்படுத்தப்பட வேண்டும். மக்களாட்சி என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்களைச் சந்திப்பது மட்டுமல்ல, அமைப்பின் செயல்திறனை விழிப்புடன் கண்காணித்து அவ்வாண்டுகளில் அதனை பொறுப்பானதாக்குவது குடிமைச் சமுதாயத்தின் பணியாகும்.


குடிமைச் சமுதாயத்துடனான கூட்டுப்பங்காண்மை 

ஆட்சியை ஆளுகையாக மாற்றும் முனைப்பில் குடிமைச் சமுதாயத்தின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். அதன் பங்கினை இருவகையான இழைகளாகப் பார்க்கலாம்.

1. சமூக இயக்கங்கள்

2. அரசு சாரா அமைப்புகள் 

சமூக இயக்கங்கள் வறுமை நிலையில் உள்ள மக்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காகப் போராடுவதன் மூலம் அரசாங்கத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வகையான அழுத்தத்தினால் அராசாங்கம் மக்களுக்காக நிறுவனங்கள், சட்டங்கள் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

அரசு சாரா அமைப்புகளும் பல்வேறு வகையில்மக்கள் நலனுக்காக செயல்படுகின்றன. மேலும் அவர்கள் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் உதவிகரமாக உள்ளனர்.

சமூக இயக்கங்களும், அரசு சாரா அமைப்புகளும் தற்போதைய காலகட்டத்தில் அரசியல் செயல்பாடுகள் மற்றும் பொது சேவைகள் ஆகியவைமக்களைச் சென்றடைவதில் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.

செயல்பாடு

உலகளாவிய பார்வையிலான சிந்தனை பற்றிய கேலிச் சித்திரம்




கோபன் ஹேகன் பருவநிலை உச்சிமாநாடு 09.12.2009/ P.8 மற்றும் 18.12.2009/ P.10 

197 நாடுகள் பசுமை வாயுக்களை படிப்படியாக நீக்க ஒப்பு கொண்டன. 

இது கரியமில வாயுவைவிட ஆயிரம் மடங்கு மோசமான வாயுக்களை குறைத்து புவி வெப்பமயமாதலைதடுக்கும் சட்டப்பூர்வமான ஒப்பந்தமாகும் 

மூன்று குழுவிலான நாடுகள் 

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களின் ஹைட்ரோ ப்ளூரோ கார்பன் பயன்பாட்டினை 2019-ஆம் ஆண்டுவாக்கில் பத்து சதவீதம் 2011 - 2013-ஆம் அளவிலிருந்து குறைப்பதுடன் 2036-ஆம் ஆண்டுவாக்கில் என்பத்து ஐந்து சதவீதம் வரை குறைக்க வேண்டும்

இரண்டாவது குழுவானது சீனா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்ட வளரும் நாடுகள் இம்மாற்றத்தினை 2024ஆம் ஆண்டிற்குள் செய்து முடிக்க உறுதிபூண்டுள்ளன. இவை 2020 - 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பத்து சதவீதமாவது 2029-ஆம் ஆண்டுவாக்கில் குறைப்பதுடன் இதனை நீட்டித்து 2045-ஆம் ஆண்டுவாக்கில் எண்பத்து ஐந்து சதவீதம் வரை குறைக்க வேண்டும் என எதிபார்க்கப்படுகிறது

இதில் மூன்றாவது குழுவாக, வளரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகள் உள்ளன. இவை இந்நடைமுறையை 2028-ல் தொடங்குவதுடன் 2024-2026 -ல் அளவிலிருந்து கணக்கிடும் போது பத்து சதவீதம் வரை 2032-ல் குறைக்க வேண்டும். இது 2047-ல் எண்பத்து ஐந்து சதவீதமாக இருக்க வேண்டும்

கிகாலி (ருவாண்டா )- Kigali (Rwanda)

புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான ஒரு முக்கியப் படியாக 200 நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து குளிர்ப்பதனப் பெட்டி மற்றும் காற்றுப் பதனி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தலான பசுமை வாயுக்களை படிப்படியாக நீக்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டனர். 1987-ஆம் ஆண்டு ஓசோன் படலப் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட மாண்ட்ரீயல் நெறிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு பணக்கார நாடுகள், வளரும் நாடுகளைக் காட்டிலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் இரவு முழுவதும் கண்விழித்து ஹைட்ரோ ப்ளூரோ கார்பன் உற்பத்தி மற்றும் நுகர்வினை படிப்படியாக குறைப்பதற்கான ஒப்பந்தத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தில் இருந்த பிரதிநிதிகள் மகிழ்வுடன் கைதட்டி இதனை வரவேற்றனர்.

இருப்பினும் சில பிரதிநிதிகள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகள் ஆகியவை இம்மாற்றத்தினை பிற நாடுகளைக் காட்டிலும் பின்னே மேற்கொள்வதற்கு வருத்தம் தெரிவித்தனர். மார்ஷல் தீவுகள் என்ற குட்டி பசிபிக் நாட்டின் பிரதிநிதி கூறுகையில் "இது மார்ஷல் தீவுகள் முழுமையாக விரும்பியதாக இல்லாவிடினும், சிறந்த ஒப்பந்தமாகும்" என்றார். ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்கள் அகற்றப்பட்டால் 2100ஆம் ஆண்டுவாக்கில் புவிவெப்பமயமாதல் 0.5 சதவீதம் குறையும் என 2015-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

இருப்பினும் இந்தியா போன்ற அதிக உஷ்ணமான தட்பவெப்ப நிலையை கொண்ட வளரும் நாடுகள் ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்களுக்கு மாற்றாக அம்மோனியா, தண்ணீர் அல்லது ஹைட்ரோ ப்ளூரோலெபீன்ஸ் (Hydro flurolefins) போன்ற வாயுக்களை பயன்படுத்தினால் செலவினம் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தைச் சேர்ந்த அஜய் நாராயண் ஜா கூறுகையில் "இதில் செலவினப் பிரச்சனை, தொழில் நுட்ப பிரச்சனை, நிதிப்பிரச்சனை ஆகியவை உள்ளன" என்கிறார். அவர் மேலும் கூறுகையில் "எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அது ஒரு பக்கத்திலிருந்து நெகிழ்வானதாக இருக்க வேண்டுமே தவிர மறுபக்கத்தில் இருந்தல்ல என்பதை நாம் வலியுறுத்த விரும்புகிறோம்" என்றார்.

ஓசோன் படலத்தை ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்களின் முன்னோடியான குளோரோ ப்ளூரோ கார்பன்கள் அழிப்பதை உணர்ந்த விஞ்ஞானிகள் அவற்றினை மாண்ட்ரியல் நெறிமுறைகளின் அடிப்படையில் கைவிட்டனர். தற்பொழுது சரியாகி வரும் ஓசோன் படலத்திற்கு ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்கள் பாதுகாப்பானவையாக தெரிந்தாலும் முக்கிய பசுமை வாயுவான கரியமில வாயுவை விட வெப்பமாக்குதலில் ஆயிரம் மடங்கு மோசமானதாக இருக்கிறது.

புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் 16.10.2016


உலகளாவிய பார்வையிலான ஓர் சிந்தனை

ஓர் உலகளாவிய பார்வை என்பது உங்களை நான், எனது குடும்பம், எனது பள்ளி, எனது சமூகம், எனது கிராமம், எனது மாவட்டம், எனது மாநிலம் அல்லது நான் வாழும் நாடு என்பதைத் தாண்டி சிந்திக்க வைக்கிறது. செய்திகளில் வரும் பிரச்சனைகள் உலகளாவிய தன்மையுள்ளவையாகும். உதாரணமாக சுற்றுச்சூழல் பிரச்சனையைக் கூறலாம்.

பெரும்பாலும் உலகளாவிய பிரச்சனைக்கு ஓர் உலகளாவிய தீர்வு தேவைப்படுகிறது. பருவநிலை மாற்றம் என்ற உலகளாவிய பிரச்சனையை உள்ளூர் தீர்வுகளால் சரி செய்ய இயலாது. இருப்பினும் உள்ளூரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உலகளாவிய தீர்விற்கு வழிசெய்ய உதவுகிறது. பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைக்கு, உதாரணமாக உள்ளூர் அளவிலான விழிப்புணர்வினை தெரு நாடகங்கள், கண்காட்சி, மனிதச் சங்கிலி மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் போன்றவற்றின் மூலமாக மக்களை உலகளாவிய அளவில் சிந்திக்க வைத்து உள்ளூர் அளவில் செயல்பட வைக்கிறது எனலாம்.


நல்ஆளுகையின் பண்பியல்புகள் 

) பங்கேற்பு 

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆண்களும், பெண்களும் அரசாங்கத்தின் முடிவெடுத்தலில் குரல் கொடுக்க வேண்டும். அதனை அவர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்க கூடிய சட்டப்பூர்வமான இடைநிலை அமைப்புகளின் வாயிலாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இத்தகைய பரந்த பங்கேற்பானது மக்களின் பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை மற்றும் ஆக்கப்பூர்வமான பங்கேற்புத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது

) சட்டத்தின் ஆட்சி 

சட்டக்கட்டமைப்பு என்பது நியாயமாகவும், நடுநிலையுடனும் செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களைக் கூறலாம்

) வெளிப்படைத் தன்மை

கட்டுப்பாடற்ற சுதந்திரமான தகவல் பரிமாற்றமே வெளிப்படைத்தன்மையை கட்டமைக்கிறது. நடைமுறைகள், நிறுவனங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவை அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக அணுகத்தக்க வகையில் இருப்பதுடன் புரிந்து கொள்ளக்கூடிய அளவிலான தகவல்கள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்

) மறுமொழி பகிர்தல் 

நிறுவனங்களும் அவைசார்ந்த செயல்பாடுகளும் மக்களின் தேவைக்கேற்ப செயலாற்ற முயல வேண்டும்

) ஒருமித்த கருத்திலான திசைப்போக்கு

நல் ஆளுகை என்பது மாறுபட்ட விருப்பங்களுக்கு இடையே ஓர் பரந்த ஒப்புதலை ஏற்படுத்த நடுவுநிலைப் பங்காற்றுகிறது. இது குழுவினுடைய சிறந்த நலன்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின்படி அவை எவ்வாறு சாத்தியமாகும் என்பது பற்றியதாகும்

) சமசீராக்கம்

ஆண்களும் பெண்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான, சமமான வாய்ப்புகள் அல்லது தங்களின் நலனை நிர்வகிப்பதாகும்.

நல்ல அரசாங்கம்

  ஒரு மித்த கருத்திலான திசைப்போக்கு 

  சிறப்பானது மற்றும் செயல்திறன் வாய்ந்தது 

  சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுகிறது 

  சமநீதிப்பங்கிலானது மற்றும் உள்ளடக்கியது 

  பொறுப்பானது   பங்கேற்பிலானது 

  மறுமொழி பகிர்தல்   வெளிப்படையானது

) சிறப்பான தன்மை மற்றும் செயல்திறன்

நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் சிறப்பாக வளங்களைப் பயன்படுத்தி முடிவுகளைத் தரவேண்டும்

) பொறுப்புடைமை

அரசாங்கத்தில் முடிவு எடுக்கும் நிலையில் உள்ளவர்கள், தனியார் துறையினர் மற்றும் குடிமைச்சமூக அமைப்புகள் ஆகியவை பொதுமக்களுக்கும், அமைப்பின் பங்கேற்பாளர்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இப்பொறுப்புடைமை என்பது அமைப்புக்களைப் பொறுத்து மாறுபடுவதுடன் அமைப்பில் எடுக்கப்படும் முடிவானது உட்புறமானதா அல்லது வெளிப்புறமானதா என்பதையும் பொறுத்தாகும்

) திறன்சார்ந்த தொலைநோக்கு பார்வை

தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நல்ஆளுகை மற்றும் மனித மேம்பாட்டினை நீண்டகால தொலைநோக்கு பார்வையுடன் அணுகுதல் வேண்டும். மேலும் வரலாறு, பண்பாடு மற்றும் சமூக சிக்கல்களையும் தொலைநோக்குப் பார்வைக்காகக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்

ஆதாரம்: (ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம் - 1997), (நிலையான மனித மேம்பாட்டிற்கான ஆளுகை பற்றிய . நா.வின் மேம்பாட்டுத் திட்டம்

11th Political Science : Chapter 6 : Forms of Government : The Concept of Governance from Government to Governance in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள் : அரசாங்கத்திலிருந்து ஆளுகை வரை பற்றிய கருத்தாக்கம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள்