கலைச்சொற்கள்: Glossary
பிரபுக்களாட்சி (Aristocracy): உயர்குடி மக்களின் ஆட்சியாகும்
கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள் (Checks and Balances): இந்த கோட்பாடு அமொரிக்காவில் தோன்றியதுடன் அமெரிக்க அரசாங்கத்தால் பின்பற்றப்படுகிறது. இதனடிப்படையில் அரசாங்கத்தின் ஒரு அங்கம் மற்றொரு அங்கத்தின் செயல்பாடுகள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.
பொது அதிகாரங்கள் (Concurrent Powers): தேசிய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் ஒருங்கே பெற்ற அதிகாரங்களாகும்.
கூட்டமைப்பு முறை (Confederal system): இது இறையாண்மைமிக்க சுதந்திரமான அரசுகளின் சங்கமாகும். இவ்வகை சங்கத்தால் உருவாக்கப்படும் மத்திய அரசாங்கம் பிற அரசுகளின் மீது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையே கொண்டுள்ளது.
மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic):
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டம் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதாகும்.
அதிகாரப் பகிர்வு (Devolution): தேசிய அல்லது மத்திய அரசிலிருந்து மாநில அரசுக்கோ அல்லது உள்ளாட்சி அரசுக்கோ அதிகாரங்களை மாற்றித் தருவதாகும். இருபதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இந்நடைமுறை பின்பற்றப்பட்டது.
நேரடி மக்களாட்சி (Direct Democracy): மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் காட்டிலும் அரசியல் முடிவுகளை மக்கள் தாங்களே எடுப்பதாகும்.
கூட்டாட்சி தத்துவம் (Federalism): மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அல்லது உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு இடையேயான அதிகாரப்பகிர்விலான அரசியல் முறைமையாகும்.
சுதந்திரத்துவ மக்களாட்சி (Liberal Democracy):
தனிநபரின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மக்களாட்சியிலான அரசாங்கம், சிறுபான்மையினரை பெரும்பான்மையினரின் ஆதிக்கத்திலிருந்து தடுத்து பாதுகாக்கிறது.
சுதந்திரத்துவம் (Liberalism): மக்கள் நலன், குடிமை உரிமைகளுக்கு ஆதரவு மற்றும் சமூக, அரசியல் மாற்றங்களின் சகிப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகசெயல்படும் நேர்மறை அரசாங்கத்தை புரிந்து பேசுதல்.
வரையறுக்கப்பட்ட அரசாங்கம் (Limited Government): அரசாங்கத்தின் அதிகாரங்கள் குறிப்பாக அமைப்புரீதியிலான கட்டுப்பாடுகளால் வரையறுக்கப்பட்டிருக்கும்.
குடியரசுத்தலைவர் முறை அரசாங்கம் (Presidential System): பிரதிநிதித்துவ மக்களாட்சியின் அடிப்படையில் அரசியல் அதிகாரம் என்பது தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் அமைப்புகளிடம் இருக்கும் இம்முறைக்கு உதாரணமாக அமெரிக்காவை குறிப்பிடலாம்.
பிரதிநிதித்துவ மக்களாட்சி (Representative Democracy): இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சட்டம் மற்றும் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தக்கூடிய அரசாங்கத்தின் வடிவமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அரசியல் முடிவுகளை மேற்கொள்வர் (சில மக்களாட்சிகளில் சம்பிரதாய அளவிலான பங்குடைய முடியாட்சியை தக்கவைத்துள்ளனர்).
குடியரசு (Republic): குடியரசு அரசாங்கத்தில் மக்களோ அல்லது ஒரு பகுதியோ இறையாண்மை அதிகாரம் பெற்றிருப்பர். மாறாக முடியாட்சியில் மன்னரே இறையாண்மை அதிகாரம் பெற்றிருப்பார். இம்முறையிலான பிரதிநிதித்துவ அரசாங்கம் அமெரிக்க அரசமைப்பினை உருவாக்கியவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
அதிகாரப்பிரிவினை (Separation of Power): அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே அதன் பணிகளைப் பங்கிட்டுக் கொள்வதுடன் ஒவ்வொரு குழுவின் சுயநலன்களை பிற குழுக்கள் ஒழுங்குமுறை செய்யும் முறையிலானதாகும்.
இறைவழி ஆட்சி (Theocracy): இது கிரேக்க வார்த்தைகளான கடவுள் என பொருள்படும் 'தியோஸ்' மற்றும் ஆட்சி என்ற பொருளிலான 'கிரேட்டீன்' என்ற வார்த்தைகளிலிருந்து உருவானதாகும். ஆகவே இதனைக் 'கடவுளின் ஆட்சி' எனக் கூறலாம்.
முற்றதிகாரம் (Totalitarian): அரசாங்கத்தின் நடப்பாட்சி அதிகாரத்துடனான குடிமக்களின் கீழ்ப்படிதலாகும். இவ்வாட்சி அரசியல் மற்றும் சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்துகிறது. (ஜார்ஜ் ஆஸ்வெல் 1984) அதிகாரத்துவ அரசுக்கு மாறாக இதில் அனைத்து சமுக மற்றும் பொருளாதார அமைப்புகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஓரவை சட்டமன்றம் (Unicameral legislature): ஒரு சட்டமன்றமானது ஒரேயொரு அவையை மட்டும் கொண்டிருத்தல் ஆகும். உதாரணமாக அமெரிக்காவில் நெப்ரஸ்கா என்ற ஒரு மாகாணம் மட்டுமே ஒரவையைக் கொண்டுள்ளது.