Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | அரசாங்கத்தின் செயல்திறனை எவ்வாறு மதிப்பிடுவது?
   Posted On :  03.10.2023 08:34 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள்

அரசாங்கத்தின் செயல்திறனை எவ்வாறு மதிப்பிடுவது?

ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஏதோ ஒரு காரணியைக் கொண்டு பகுப்பாய்தல் என்பது இயலாத காரியமாகும். ஆகவே உண்மையான மதிப்பீட்டினை மேற்கொள்ள ஆளுகையின் பல்வேறு அம்சங்களான சமூக பண்பாட்டு காரணிகள், அரசியல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவற்றினை பரிசீலிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் செயல்திறனை எவ்வாறு மதிப்பிடுவது?

ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஏதோ ஒரு காரணியைக் கொண்டு பகுப்பாய்தல் என்பது இயலாத காரியமாகும். ஆகவே உண்மையான மதிப்பீட்டினை மேற்கொள்ள ஆளுகையின் பல்வேறு அம்சங்களான சமூக பண்பாட்டு காரணிகள், அரசியல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவற்றினை பரிசீலிக்க வேண்டும். எனவே கீழ்காணும் காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் செயல்பாடுகளை மதிப்பிடலாம்

சமூக பண்பாட்டு காரணிகள்

பாலின சமநிலை குறியீடு 

மதச்சுதந்திரம் 

சாதி அடிப்படையிலான சமநிலை 

மதம் மற்றும் மொழி அடிப்படையிலான சிறுபான்மையினர் உரிமைகளின் பாதுகாப்பு 

பாலினம் சார்ந்த வரவுசெலவு திட்டம் 

அரசியல் காரணிகள் 

மக்களாட்சி நடைமுறையின் சிறப்பான செயல்பாடு 

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் 

ஊழலற்ற அரசியல் மற்றும் நிர்வாகம் 

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை 

சுதந்திரமான பத்திரிக்கைகள் 

சுதந்திரமான நீதித்துறை

மனித உரிமைகள் 

பொருளாதாரக் காரணிகள் 

மனித வளமேம்பாட்டுக் குறியீடு (HDI) 

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 

வாங்கும் திறன் சமநிலை (PPP) 

வளர்ச்சி Vs மேம்பாடு

சமமாக வளங்களைப் பங்கிடுதல் 

சுற்றுச்சூழல் காரணிகள்

நிலையான மேம்பாட்டு இலக்குகள் 

பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம் (NAPC) 

பசுமை வரவு செலவு திட்டம்

பேரிடர் மேலாண்மை 

தேசிய ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீடு (GNH);

தேசிய ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்குறியீடு என்பது தற்பொழுது மேம்பட்டு வரும் ஒரு தத்துவம் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட எந்தவொரு தேசத்தின் கூட்டு மகிழ்ச்சியினை அளவீடு செய்யும் "குறியீடு" ஆகும். இக்கருத்து முதன்முதலில் 18 ஜீலை 2008-ல் இயற்றப்பட்ட பூடான் நாட்டினுடைய அரசமைப்பில் குறிப்பிடப்பட்டது.

1970 களில் பூடானின் நான்காவது மன்னரான ஜிக்மே சிங்யே வாங்சுக் அவர்களால் "ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சி" (Gross National Happiness) என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. "ஒட்டு மொத்த தேசிய மகிழ்ச்சி"- என்பதன் மைய சால்புகள் "நிலையான மற்றும் சமநீதிப்பங்கிலான சமூக - பொருளாதார மேம்பாடு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; பண்பாட்டினை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தல்; நல் ஆளுகை" ஆகியவையாகும்.

"ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சி" யை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு உதாரணமாக கூட்டு மகிழ்ச்சியை ஆளுகையின் இலக்காகக் கொள்வதுடன் இயற்கை மற்றும் மரபார்ந்த விழுமியங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதைக் கூறலாம்.

செயல்பாடு

கீழ்க்கண்டவற்றின் சமீபகால வெளியீடுகளைப் பற்றி விவாதிக்கவும்

மனித வள மேம்பாட்டுக் குறியீடு (Human Development Index)

சர்வதேச வெளிப்படைத்தன்மைக்கான அமைப்பு (Transparency International) 

இந்தியப் பொருளாதாரக் கணக்கெடுப்பு (Economic survey of India) 

வரவு செலவுத்திட்டம் - பசுமை வரவுசெலவுத்திட்டம்

பாலின வரவு செலவுத்திட்டம் 

பாலின சமநிலை குறியீடு 

கீழ்க்கண்ட அமைப்புகளின் வருடாந்திர அறிக்கைகள் 

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission- NHRC) 

தேசிய பட்டியல் வகுப்பினருக்கான ஆணையம் (National Commission for Schedule of Castes- NCSC) 

தேசிய பழங்குடியினர் ஆணையம் (National Commission for Scheduled Tribes- NCST) 

தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women- NCW) 

தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights - NCPCR) 

11th Political Science : Chapter 6 : Forms of Government : How to evaluate the performance of a government? in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள் : அரசாங்கத்தின் செயல்திறனை எவ்வாறு மதிப்பிடுவது? - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள்