அரசாங்கத்தின் பொருள் வரையறை மற்றும் தன்மை:
அரசாங்கம் என்பது அரசின் செயலாட்சிப் பணிகளைக் குறிப்பதாகும். இது குடிமை, பெருநிறுவனம், மதம், கல்வி மற்றும் பிற குழுக்களுக்கு சட்டம் இயற்றி செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பினைக் குறிப்பதாகும்.
அரசாங்கம் எனும் சொல்லானது பழைய பிரெஞ்சு, வார்த்தையான 'ஆளுநர்' (Governor) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். அது 'குபர்நேட்' (Gubernate) என்ற லத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் இயக்குதல், ஆட்சி, வழிகாட்டு, ஆளுகை என்பதாகும்.
மிகப்பழமையான அரசாங்க முறை எது?:
இங்கிலாந்தின் முடியாட்சியே மிகப் பழமை வாய்ந்த அரசாங்க வடிவமாகும். முடியாட்சியில் மன்னர் அல்லது ராணி அரசின் தலைவராக இருப்பார். இங்கிலாந்து முடியாட்சியானது அரசமைப்பிலான முடியாட்சி என அழைக்கப்படுகிறது. மன்னர் அரசினுடைய தலைவராக இருந்தாலும், சட்டமியற்றக்கூடிய தகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது என்பது இதன் பொருளாகும்.
அரசாங்கத்தின் வகைப்பாடு பற்றி அரிஸ்டாட்டில்
அரிஸ்டாட்டில் இரண்டு அடிப்படைகளின் இணைவில் அவர் பகுப்பாய்ந்த அரசமைப்புக்களை வகைப்படுத்தியுள்ளார்.
முதலாவது அடிப்படை
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்று, சில மற்றும் பல என்பதன் அடிப்படையில் முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சி, தூய அரசியல் அமைப்புமுறை (Polity) என வகைப்படுத்தியுள்ளார்.
இரண்டாவது அடிப்படை
அரசாங்கம் யாருடைய நலனுக்காக செயல்படுகின்றது என்ற அடிப்படையில் பொதுநலம் மற்றும் சுயநலம் என்று வகைப்படுத்தியுள்ளார். கீழ்வரும் அட்டவணை மூலம் நெறி தவறிய மூன்று வடிவங்களான கொடுங்கோலாட்சி, சிறுகுழு ஆட்சி மற்றும் மக்களாட்சியினை காணலாம்.
செயல்பாடு
ஒவ்வொரு தனிமனிதனின் "கருவறை முதல் கல்லறை "வரையிலான செயல்பாடு அரசு முகமைகளின் மூலமே ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
கருவறை முதல் கல்லறை வரையிலான தனிமனித வாழ்வில் அரசாங்கத்தின் பங்களிப்பை வரிசைப்படுத்துக.
1.
2.
3.
4.
விவாதம்
வகுப்பறையில் கீழ்கண்ட தலைப்பினை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.
❖ அரிஸ்டாட்டிலின் அரசாங்க வகைப்பாட்டினை தற்போதைய நமது இந்திய அரசியல் முறைமையுடன் ஒப்பிடுக.
❖ நமது அரசாங்கம் மக்களின் பொது நலனுக்காக செயல்படுகிறதா? அல்லது ஒரு சிலரின் சுயநலனுக்காக செயல்படுகிறதா?
❖ உண்மையில் இந்திய மக்களாட்சி மக்களின் பொது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா? அல்லது ஒரு சிலரின் சுயநலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா?