தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதைத் தாவரங்கள்) | 8th Science : Chapter 17 : Plant Kingdom
ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதைத் தாவரங்கள்)
ஆஞ்சியோஸ்பெர்ம் (Angiosperms) என்னும் சொல்லானது ஆஞ்சியோ மற்றும்
ஸ்பெர்மா எனும் இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். ஆஞ்சியோ என்பதன்
பொருள். பெட்டி அல்லது மூடிய பெட்டி எனப்படும். ஸ்பெர்மா என்பதன் பொருள் விதை எனப்படும்.
இவை வளரியல்பின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை: சிறு செடிகள்
(சொலானம் மெலாஞ்சினா கத்தரிச் செடி), புதர்ச்செடிகள் (ஹைபிஸ்கஸ் ரோசா சைனன்சிஸ் - செம்பருத்தி
மற்றும் மரங்கள் (மாஞ்சிஃபெரா இன்டிகா மாமரம்). இவற்றில் சைலம் மற்றும் ஃபுளோயம் எனப்படும்
நன்கு வளர்ச்சியடைந்த கடத்தும் திசுக்கள் காணப்படுகின்றன. சைலமானது சைலக் குழாய்கள்,
டிரக்கீடு, சைலம் பாரன்கைமா மற்றும் சைலம் நார்கள் என நான்கு வகை செல்களைக் கொண்டுள்ளது.
ஃபுளோயமானது சல்லடைக்குழாய், ஃபுளோயம் பாரன்கைமா, துணைசெல்கள் மற்றும் ஃபுளோயம் நார்கள்
என நான்கு வகை செல்களைக் கொண்டுள்ளது.
1. ஆஞ்சியோஸ்பெர்ம்களின்
வகைப்பாடு
ஆஞ்சியோஸ்பெர்ம்கள் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
• இருவிதையிலைத் தாவரங்கள்
• ஒருவிதையிலைத் தாவரங்கள்
இருவிதையிலைத் தாவரங்களின் பண்புகள்
• விதைகள், இரண்டு விதையிலைகளைக் கொண்டிருக்கின்றன.
• இவை ஆணிவேர்த் தொகுப்புடனும், வலைப்பின்னல் நரம்பமைவு கொண்ட
இலைகளுடனும் காணப்படுகின்றன.
• மலர்கள் நான்கு அல்லது ஐந்து அங்கங்களைக் கொண்டிருக்கும்.
அவை, இதழ்கள் மற்றும் புல்லி என இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
• மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் பூச்சிகள் மூலம் நடைபெறுகிறது.
• எ.கா. அவரை, மாமரம், வேப்பமரம்
ஒருவிதையிலைத்
தாவரங்களின் பண்புகள்
• விதை, ஒரு விதையிலையைக் கொண்டுள்ளது.
• இத்தாவரங்கள், சல்லி வேர்த் தொகுப்புடனும், இணைப் போக்கு நரம்பமைவு
கொண்ட இலைகளுடனும் காணப்படுகின்றன.
• மலர்கள் மூன்று அங்கங்களைக் கொண்டுள்ளன.
• அல்லி மற்றும் புல்லி இதழ்கள் பிரிக்கப்படாமல் ஒரே வட்டத்தில்
அமைந்திருக்கும்.
• மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் காற்றின் மூலம் நடைபெறுகிறது.
• எ.கா. புல், நெல், வாழை
செயல்பாடு 3
உனது
வீட்டிற்கு அருகில் உள்ள பூக்கும் தாவரங்களைக் விதையிலைத் விதையிலைத் கண்டறிந்து அவை
ஒரு தாவரமா அல்லது இரு தாவரமா என்பதை அதன் வேரின் அடிப்படையிலும், இலை நரம்பமைவின்
அடிப்படையிலும் வகைப்படுத்துக.