தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 17 : Plant Kingdom
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. தூதுவளையின்
இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் சொலானம் என்ற சொல் எதைக் குறிக்கிறது?
அ) சிற்றினம்
ஆ) பேரினம்
இ) வகுப்பு
ஈ) துறைகள்
விடை: ஆ) பேரினம்
2. புளோரிடியன்
ஸ்டார்ச் சேமிப்புப் பொருளாகக் காணப்படும் பிரிவு.
அ) குளோரோஃபைசி
இ) ரோடோஃபைசி
ஆ) பியோஃபைசி
ஈ) சயனோஃபைசி
விடை: இ) ரோடோஃபைசி
3. கூட்டமைப்பாகக்
காணப்படும் பாசி
அ) ஆசில்லடோரியா
ஆ) நாஸ்டாக்
இ) வால்வாக்ஸ்
ஈ) குளோரெல்லா
விடை: இ) வால்வாக்ஸ்
4. உண்ணத்
தகுந்த காளான்
அ) பாலிபோரஸ்
இ) பெனிசிலியம்
ஆ) அகாரிகஸ்
ஈ) அஸ்பர்ஜில்லஸ்
விடை: ஆ) அகாரிகஸ்
5. மண்
அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்.
அ) பாசிகள்
ஆ) பூஞ்சைகள்
இ) பிரையோஃபைட்டுகள்
ஈ) டெரிடோஃபைட்டுகள்
விடை: இ) பிரையோஃபைட்டுகள்
6. முதலாவது
நிலத் தாவரங்கள்
அ) பிரையோஃபைட்டுகள்
ஆ) டெரிடோஃபைட்டுகள்
இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடை: ஆ) டெரிடோஃபைட்டுகள்
7. நன்கு
வளர்ச்சியடைந்த வாஸ்குலார் திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது.
அ) பிரையோஃபைட்டுகள்
ஆ) டெரிடோஃபைட்டுகள்
இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடை: ஆ) டெரிடோஃபைட்டுகள்
8. இருசொற்பெயரிடு
முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1970
ஆ) 1975
FF) 1623
இ 1978
விடை : ஈ) 1623
9. பெனிசிலின்
ஒரு உயிர் எதிர்பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
அ) பாசிகள்
ஆ) பூஞ்சைகள்
இ) பிரையோஃபைட்டுகள்
ஈ) டெரிடோஃபைட்டுகள்
விடை: ஆ) பூஞ்சைகள்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. 'வகைப்பாட்டியல்' என்ற சொல் கிரேக்கச் மொழியிலிருந்து பெறப்பட்டது.
2. இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் காஸ்பர்டு பாகின் என்பவரால்
அறிமுகப்படுத்தப்பட்டது.
3. ஜெனிரா பிளாண்டாரம் என்ற நூலை வெளியிட்டவர்கள் பெந்தம்
மற்றும் ஹீக்கர்
4. ஒருவிதையிலைத் தாவரங்கள் ஒரு விதையிலையினை மட்டுமே கொண்டுள்ளன.
5. பழுப்பு பாசி ஃபேயோபைசியே வகுப்பைச் சார்ந்தது.
6. அகார் அகார் ஜெலீடியம் என்றபாசியிலிருந்து பெறப்படுகிறது.
7. பூஞ்சைகளின் சேமிப்புப் பொருள்கள் கிளைக்கோஜன், மற்றும் எண்ணெய் ஆகும்.
8. டெரிடோஃபைட்டு முதலாவது உண்மையான நிலத்தாவரம்.
9. பிரையோஃபைட்டு தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம்
காணப்படுவதில்லை.
10. இரு விதையிலைத் தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு
காணப்படுகிறது.
III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறான வாக்கியத்தைத்
திருத்தி எழுதுக.
1. பாலிபெட்டலே துணை வகுப்பில் அல்லி இதழ்கள் தனித்தவை. விடை : சரி
2. இருசொல் பெயர் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கும்.
விடை : தவறு
3. செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒருசில புறத்தோற்றப்
பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. விடை : சரி
4. பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது. விடை : சரி
5. பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம். விடை : தவறு
6. பிரையோஃபைட்டா தாவரங்கள் அனைத்தும் நீர் வாழ்த் தாவரங்களாகும்.
விடை : தவறு
7. இரு விதையிலைத் தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களைவிட நன்கு
வளர்ச்சியடைந்த பண்புகளைக் கொண்டுள்ளன. விடை : சரி
8. பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களாகும்.
விடை : சரி
9. பிரையோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் தாவர நிலை ஓங்கியது. விடை : தவறு
10. டெரிடோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் நிலை ஓங்கியது. விடை : சரி
IV. பொருத்துக.
சையனோஃபைசி பச்சைப் பாசி
குளோரோஃபைசி நீலப் பச்சைப் பாசி
பெயோஃபைசி சிவப்புப் பாசி
ரோடோஃபைசி பழுப்புப்
பாசி
விடை :
சையனோஃபைசி - நீலப் பச்சைப் பாசி
குளோரோஃபைசி - பச்சைப் பாசி
பெயோஃபைசி - பழுப்புப் பாசி
ரோடோஃபைசி - சிவப்புப் பாசி
V. மிகச் சுருக்கமாக விடையளி.
1. தாலஸ்-வரையறு.
> பாசிகளின் தாவர உடலானது தாலஸ் (தாள் போன்றது)
என அழைக்கப்படுகிறது.
> இந்த தாவர உடலை வேர், தண்டு, இலை என வேறுபடுத்த
இயலாது.
2. இருசொற்
பெயரிடு முறை என்பது என்ன? எடுத்துக்காட்டு தருக.
> ஓர் உயிரினத்தை இரண்டு சொற்களால் பெயரிட்டு
அழைப்பது இரு சொல் பெயரிடுதல் எனப்படும்.
> மாஞ்சிஃபெரா இன்டிகா என்பது மாமரத்தின் தாவரவியல்
பெயராகும்.
3. இருவிதையிலைத்
தாவரங்களின் பண்புகளை எழுதுக.
> விதைகள் இரண்டு விதையிலைகளைக் கொண்டிருக்கும்.
> மலர்கள் 4 அல்லது 5 அங்கங்களைக் கொண்டிருக்கும்.
4. ஜிம்னோஸ்பெர்ம்
தாவரங்களின் விதைகள் திறந்தவை. ஏன்?
ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதைத் தாவரங்கள், ஏனெனில்
அவற்றின் சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை .
5. பூஞ்சைகளின்
ஏதேனும் இரு பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
> ஆஸ்பியா கோஸ்பீ மற்றும் எரிமோதீசியம் ஆஸ்பியீ
போன்ற பூஞ்சைகள் வைட்டமின் B, வை உருவாக்குகின்றன.
> ஈஸ்ட்டில் உள்ள இன்வர்டேஸ், சைமேஸ் போன்ற
நொதிகள் சர்க்கரைக் கழிவிலிருந்து நொதித்தல் மூலம் ஆல்கஹாலை உருவாக்குகிறது.
VI. சுருக்கமாக விடையளி.
1. இயற்கை
வகைப்பாட்டுமுறை பற்றி சுருக்கமாக எழுதுக.
> பெந்தம் மற்றும் ஹீக்கள்
ஆகியோர் இயற்கை வகைப்பாட்டு முறையைத் தங்கள் ஜெனிரா பிளான்டாரம் என்ற 3 தொகுதிகள் கொண்ட
புத்தகத்தில் விளக்கியுள்ளனர்.
> விதைத் தாவரங்கள் 3 வகையாக
வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வகுப்பு 1: இருவிதையிலைத் தாவரம்:
> இரண்டு விதையிலைகள் இருக்கும்.
> இலைகளில் வலைப்பின்னல்
நரம்பமைவு உள்ளது.
> ஆணி வேர் இருக்கும்.
வகுப்பு 2 - ஜிம்னோஸ்பெர்ம்:
> இதில் கனிகள் உருவாவதில்லை
.
> 3 குடும்பங்களை உள்ளடக்கியது
> சைக்கடேசி - கோனிஃபேரே
- நீட்டேசி
வகுப்பு 3 - ஒரு விதையிலைத் தாவரம்:
> ஒரு விதையிலையைக் கொண்டுள்ளன.
> இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு
உள்ளன.
> சல்லி வேர்கள் உள்ளன.
> மலர்கள் 3 அங்கங்களைக்
கொண்டிருக்கும்.
2. பாசிகளின்
ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவங்களை எழுதுக.
> வேளாண்மை: சில நீல பச்சைப்பாசிகள்
வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. இவை மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றன.
எ.கா. நாஸ்டாக், அனபீனா.
> அயோடின்: பழுப்புப் பாசிகளிலிருந்து
அயோடின் பெறப்படுகிறது. எ.கா. லேமினேரியா
> தனிசெல் புரதம்: சில செல் பாசிகள் மற்றும்
நீலப்பச்சை பாசிகள் புரதத்தை உற்பத்தி செய்கின்றன.
எ.கா. குளோரெல்லா
3. பாசிகளுக்கும்,
பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
4. பிரையோஃபைட்டுகளில் எத்தனை வகுப்புகள் உள்ளன? அவை யாவை?
பிரையோஃபைட்டுகளில் மூன்று வகுப்புகள் உள்ளது. அவை
> ஹிப்பாட்டிக்கே (ரிக்ஸியா)
> ஆந்தோசெரட்டே (ஆந்தோசெரஸ்)
> மாசஸ் (பியூனேரியா)
5. டெரிடோஃபைட்டுகளின்
ஏதேனும் நான்கு பண்புகளை எழுதுக.
> இவை முதன் முதலில் தோன்றிய
உண்மையான நிலத் தாவரங்கள்.
> கடத்துத் திசுக்களான சைலம்
மற்றும் ஃபுளோயம் உள்ளன. எனவே டெரிடோஃபைட்டுகளை கடத்துத் திசு பூவாத் தாவரம் என அழைக்கிறோம்.
> தாவர உடலமான ஸ்போரோஃபைட்
ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
> ஸ்போர் முளைத்து புரோதாலஸ்
எனப்படும் கேமிட்டோஃபைட்டிக் சந்ததியை உருவாக்குகிறது. இது தன்னிச்சையாகக் குறுகிய
நாள் வாழக் கூடியது.
VII. விரிவாக விடையளி.
1. பெந்தம்
ஹுக்கர் வகைப்பாட்டின் சுருக்க அட்டவணையை வரைக.
-
2. இருவிதையிலை
மற்றும் ஒருவிதையிலைத் தாவரங்களுக்கு இடையே உள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
ஒரு விதையிலைத் தாவரம்
1 விதை, ஒரு விதையிலையைக் கொண்டுள்ளது.
2 இத்தாவரங்கள் சல்லிவேர்த்
தொகுப்புடன் "உள்ளன
3 இலைகள் இணைப்போக்கு நரம்பமைவுடன்
காணப்படுகின்றன.
இரு விதையிலைத் தாவரம்
விதை இரண்டு விதையிலைகளைக் கொண்டுள்ளது..
இவை ஆணி வேர்த் தொகுப்புடன்
உள்ளன
இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவுடன் காணப்படுகின்றன
3. ஜிம்னோஸ்பெர்ம்
மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
ஜிம்னோஸ்பெர்ம்
1 சைலம் டிரக்கீடுகளை மட்டும்
சைலமானது சைலக் குழாய்கள் டிரக்கீடு, கொண்டுள்ளது.
2 துணை செல்கள் புளோயத்தில்
கிடையாது. ஆனால் உணவைக் கடத்த சல்லடை செல்கள் பயன்படுகிறது.
3. ஸ்போர்கள் கூம்பு வடிவ விந்தகத்தினுள்
உருவாகிறது
4 இவை திறந்த விதைத்தாவரங்கள்.
சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை.
5 சூற்பை இல்லாததால் கனிகள்
உருவாவதில்லை .
ஆஞ்சியோஸ்பெர்ம்
பாரன்கைமா மற்றும் சைலம் நார்கள்
என நான்கு வகைச் செல்களைக் கொண்டுள்ளது. வகை சைலம்
துணை செல்கள், சல்லடைக் குழாய்,
புளோயம் பாரன்கைமா, புளோயம் நார்கள் என நான்க செல்கள் புளோயத்தில் உள்ளது.
ஸ்போர்கள் பூக்களில் இருந்து
உருவாகிறது..
ஆஞ்சியோஸ்பெர்ம் விதைகள் மூடப்பட்டிருக்கும்.
கருவுறுதலுக்கும் பின் சூற்பை
கனியாக மாறும். உருவாவதில்லை .
4. ஜிம்னோஸ்பெர்ம்களின்
பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
> ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டையானது
தாள் தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்கும்
பயன்படுகிறது. எ.கா. பைனஸ்.
> ஊசியிலைத் தாவரங்களின் மென்கட்டைகள் கட்டுமானத்
தொழிலுக்கும், பொருள்களைப் பொதிவதற்கும் மற்றும் ஒட்டுப் பலகைத் தயாரிப்பிற்கம் பயன்படுகிறது.
எ.கா. செட்ரஸ், அகாதிஸ்.
> பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்படும்
டர்பன்டைன், வண்ணப்பூச்சு தயாரிப்பிற்குப்
பயன்படுகிறது. மேலும் இது மூட்டுவலி மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
> பைனஸ் ஜெரார்டியானா என்னும் தாவரத்தின் விதைகள்
உண்பதற்குப் பயன்படும்.
> எஃபிடிரின் என்னும் அல்கலாய்டு எஃபிட்ரா
எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது
சுவாசக் கோளாறு மற்றும் ஆஸ்துமாவிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
> அராவ்கேரியா பிட்வில்லீ என்னும் தாவரம் அழகுத்
தாவரமாகப் பயன்படுகிறது
5. மருத்துவத்
தாவரங்களின் பெயர்களை எழுதி அவற்றின் பயன்களை விவரிக்கவும்.
அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி):
> இலையை அரைத்துப் பெறப்படும்
பசை தோலில் உள்ள கொப்புளங்களை ஆற்றுகிறது.
> இலைச் சாற்றை எலுமிச்சைச்
சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப்புழுக்கள் அழியும்.
ஏகில் மார்மிலோஸ் (வில்வம்):
> இதன் காயானது செரிமானத்தைச்
சரிசெய்கிறது.
> இது தீராத வயிற்றுப்போக்கு,
சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
ஃபில்லாந்தல் அமாரஸ் (கீழாநெல்லி)
> முழுத் தாவரமும் மஞ்சள்
காமாலை நோய்க்க மருந்தாகப் பயன்படுகிறது.
> இது கல்லீரலுக்கு வலிமையை
கொடுத்து கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை):
> இதன் இலை, கனி, இருமல்,
சளி, காசநோய், ஆஸ்துமாவுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
அலோவெரா (சோற்றுக் கற்றாழை):