தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பூஞ்சைகள் | 8th Science : Chapter 17 : Plant Kingdom
பூஞ்சைகள்
பூஞ்சைகள் தாலோஃபைட்டா பிரிவைச் சார்ந்தவை. இதன் தாவர உடலமானது
வேர், தண்டு, இலை என பிரிக்கப்பட்டிருப்பதில்லை. பூஞ்சைகளின் உடலமானது ஹைபாக்கள் எனும்
பூஞ்சை இழைகளால் ஆனது. ஒன்றிற்கும் மேற்பட்ட பூஞ்சை இழைகள் இணைந்து மைசீலியம் எனப்படும்
இழைப் பின்னலை உருவாக்குகின்றன. பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியாட் செல் அமைப்பைக்
கொண்டவை. ஈஸ்ட் போன்ற சில வகைப் பூஞ்சைகள் ஒரு செல்லால் ஆன யூகேரியாட் செல் அமைப்பைக்
கொண்டவை. பூஞ்சையின் செல் சுவரானது கைட்டின் என்ற வேதிப்பொருளால் ஆனது.
பூஞ்சைகளின் உணவுப் பொருள்கள் கிளைக்கோஜனாகவும், எண்ணெயாகவும்
ஸ்டார்ச் சேமிக்கப்படுகின்றன. இவற்றில் இருப்பதில்லை. ஏனெனில், பூஞ்சைகளில் பச்சையம்
கிடையாது. எனவே, இவை பிற சார்பு உயிரிகளாக உள்ளன. பிற சார்பு உயிரிகள் மூன்று வகையாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. அவை, ஒட்டுண்ணிகள், மட்குண்ணிகள் மற்றும் இணைப்புயிரிகள் ஆகும்.
ஒருசில பூஞ்சைகள் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. அவை ஹாஸ்டோரியா
எனப்படும் உறிஞ்சு உறுப்புகள் மூலம் உயிருள்ள பொருள்களிலிருந்து உணவைப் பெறுகின்றன.
எ.கா. செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா. இது வேர்க்கடலைச் செடியைப் பாதித்து, டிக்கா நோயை
உருவாக்குகிறது.
பூஞ்சைகளைப்
பற்றிய பாடப்பிரிவு மைக்காலஜி எனப்படும்.
ஒருசில பூஞ்சைகள் மட்குண்ணிகளாக வாழ்கின்றன. அவை இறந்த மற்றும்
அழுகிய பொருள்களின் மீது வாழ்ந்து அவற்றிலிருந்து உணவைப் பெறுகின்றன. எ.கா. ரைசோபஸ்
இணைப்புயிரிகள்
சிலவகை பூஞ்சைகள் பாசிகளுடன் சேர்ந்து ஒன்றுக்கொன்று பயன்பெறக்
கூடிய வகையில் இணைப்புயிரிகளாக வளர்கின்றன. எ.கா. லைக்கன்கள். சில பூஞ்சைகள் உயர் தாவரங்களின்
பூஞ்சைவேர்களுடன் (Myomhiz8e) இணைந்து கூட்டுயிரிகளாக வளர்கின்றன.
1. பூஞ்சைகளின்
வகைப்பாடு
பூஞ்சைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
2. பூஞ்சைகளின்
பொருளாதார முக்கியத்துவம்
பூஞ்சைகள் பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. அவை கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
நுண்ணுயிர்க் கொல்லி
பெனிசிலின் (பெனிசிலியம் தொட்டேட்டம்), செபலோஸ்போரின்
போன்ற நுண்ணியிர்க் கொல்லிகள் பூஞ்சைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை பல்வேறு
நோய்களைத்தீர்க்தம் மருந்தாகப்பயன்படுகின்றன.
உணவு
காளான்கள் அதிக அளவு புரசுத்தையும் தாதுப் பொருள்களையும் கொண்டுள்ளன.
உண்ணக்கூடிய பொதுவான காளான் அகாரிகஸ் (பொத்தான் காளான்) வகையைச் சார்ந்தது ஆகும்.
வைட்டமின்கள்
ஆஸ்பியா கோஸ்பீ மற்றும் எரிமோதீசியம் ஆஸ்பியீ போன்ற பூஞ்சைகள்
வைட்டமின் B (Riboflavin) வை உருவாக்கப் பயன்படுகின்றன.
மதுபானம்
ஈஸ்ட் போன்ற சில பூஞ்சைகள் இன்வர்டேஸ், சைமேஸ் போன்ற நொதிகளைக்
கொண்டுள்ளன. அவை சர்க்கரைக் கழிவை நொதிக்கச் செய்து எத்தனாலாக மாற்றுகின்றன
3. பூஞ்சைகளால்
ஏற்படும் தீமைகள்
பூஞ்சைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உண்டுபண்ணுகின்றன.
பல்வேறு நோய்களை அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தகவல் துளிகள்
R.H.விட்டேக்கரின்
ஐந்து உலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் மூன்றாவது உலகமாக இடம் பெற்றுள்ளன. ஏனெனில், இவற்றில்
பச்சையம் மற்றும் ஸ்டார்ச் இல்லை.
செயல்பாடு 1
ஒரு துண்டு ரொட்டியை எடுத்து
அதன்மேல் சிறிது நீர் தெளித்து, ஒரு மூடிய பாத்திரத்தில் நான்கு நாட்கள் வைக்கவும்.
பின்பு ஒரு சிறிய துண்டை நழுவத்தின் மீது வைத்து நுண்ணோக்கியால் உற்றுநோக்கவும். அதில்
என்ன காண்பாய்? நீ காணும் உயிரினத்தின் பெயரைக் குறிப்பிடு.
'பெனிசிலின்'
மருந்துகளின் அரசி என்று கூறப்படுகிறது. இதை சர் அலெக்ஸாண்டர் கண்டுபிடித்தார். ஃபிளெம்மிங்
1928ஆம் ஆண்டு
மேலும் அறிந்து கொள்வோம்
கிளாவிசெப்ஸ்
பர்பூரியா என்ற பூஞ்சையானது மாயத்தோற்றப் பூஞ்சை எனப்படுகிறது. இது கனவுலகில் மிதப்பது
போன்ற ஒரு வித்தியாசமான மனநிலையை இளைஞர்களிடத்தில் ஏற்படுத்தி அவர்களைப் பாதிப்படையச்
செய்கிறது. அஸ்பர்ஜில்லஸ் என்ற பூஞ்சையானது குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
ஆனால், கிளாடோஸ்போரியம் என்ற பூஞ்சையானது ஒவ்வாமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.