தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மருத்துவத் தாவரங்களின் பயன்கள் | 8th Science : Chapter 17 : Plant Kingdom
மருத்துவத் தாவரங்களின் பயன்கள்
தாவரங்கள் நமக்கு பல்வேறு வகைகளில் பயன்படுகின்றன. சில தவரங்கள்
அவற்றின் பாகங்களுடன் நமக்கு மருந்தாகப்பயன்படுகின்றன. சில தாவரங்களின் மருத்துவப்
பயன்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)
• இது யூஃபோர்பியேசி குடுமபத்தைச் சேர்ந்தது.
• இதன் இலையை அரைத்துப் பெறப்படும் பசை, தோலில் உள்ள தீக்காயத்திற்கு
மருந்தாகும்.
• இந்த இலையின் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால்
வயிற்றிலுள்ள உருளைப் புழுக்கள் அழியும்.
ஏகில் மார்மிலோஸ் (வில்வம்).
• இது ரூட்டேசி கடும்பத்தைச் சேர்ந்தது.
• இதன் காயானது செரிமானக் குறைபாடுகளைச் சரி செய்கிறது.
• இது தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)
• இது சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
• .இதன் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப்
பயன்படுகின்றன.
• இது காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)
• கீழா நெல்லி யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
• இதன் தாவர உடலம் முழுவதும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப்
பயன்படுகிறது.
• இது கல்லீரலுக்கு வலிமையைக் கொடுத்து, கல்லீரல் நோய்களுக்கு
மருந்தாகப் பயன்படுகிறது.
அலோ வெரா (சோற்றுக் கற்றாழை)
• சோற்றுக் கற்றாழை லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
• இதன் இலைகள் மூலநோய் மற்றும் தோல் பகுதியில் தோன்றும் அழற்சியைக்
குணப்படுத்துகின்றன.
• இது வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகும்.