Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 17 : Plant Kingdom

   Posted On :  10.09.2023 02:20 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

• பாசிகள், பச்சையம் கொண்டுள்ள எளிமையான தற்சார்பு தாவரங்களாகும்.

• ஒட்டுண்ணிகளில் பிற உயிரிகளிலிருந்து உணவை உறிஞ்ச உறிஞ்சு வேர்கள் உள்ளன.

• பிரையோஃபைட்டா பிரிவில் கேமிட்டோபைட்டு சந்ததியின் தாலஸ் ஓங்கு தன்மை உடையது.

• முதலாவது உண்மைத் தாவரங்கள் டெரிடோஃபைட்டுகள். இத்தாவரங்கள் கடத்தும் திசுக்களைக் கொண்ட பூவாத் தாவரங்களாகும்.

• ஜிம்னோஸ்பெர்ம்கள் திறந்த விதைத் தாவரங்கள் ஆகும்.

• ஆஞ்சியோஸ்பெர்ம்கள் இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலைத் தாவரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

• ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மூடிய விதைத் தாவரங்கள் ஆகும்.

• இரண்டு வார்த்தைகளைக் கொண்டு அறிவியல் முறையில் தாவரங்களுக்குப் பெயரிடும் முறை இருசொற் பெயரிடும் முறை எனப்படும்.

• குப்பைமேனியின் இலையிலிருந்து பெறப்படும் பசை, தோலில் உள்ள தீக்காயத்திற்கு மருந்தாகும்.

• தூதுவளையின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

 

சொல்லடைவு

உறிஞ்சு உறுப்புகள்  ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பு வேர்கள்

பூஞ்சை வேரிகள் உயர் தாவரங்களின் வேர்களில் கூட்டுயிரிகளாக வாழும் பூஞ்சைகள்

தொற்றுத் தாவரங்கள் பிற தாவரங்களின் மீது வளரும் தாவரங்கள்

தற்சார்பு உயிரிகள் தானே தமது உணவைத் தயாரிக்கும் உயிரிகள்

பிற சார்பு உயிரிகள் உணவிற்காக பிற உயிரியைச் சார்ந்து வாழும் உயிரிகள்

கடத்தும் திசுக்கள் நீர் மற்றும் கனிமங்களைக் கடத்தும் திசுக்கள்

பாலி பெட்டலே பல தனித்த அல்லி இதழ்கள் கொண்டவை.

கேமோபெட்டலே இணைந்த அல்லி இதழ்கள் கொண்டவை.

மோனோகிளாமிடியே புல்லி வட்டம், அல்லி வட்டம் என வேறுபாடற்ற ஓர்உறை பூவிதழ் அடுக்கு.




பிற நூல்கள்

1. Algae by A.V.S.S Sambamurty, published by I.K International publishing house.

2. Bryophyta by Afroz Alam, published by I.K International publishing house.

3. Pteridophyta by O.P.Sharma, published by Mc Graw Hill Educations.

4. Gymnosperms by S.P.Bhatnagar, published by New Age Publishers.

5. Taxonomy of Angiosperms by B.P.Pandey, published by S.Chand

6. Plant Kingdom by Theresa Greenaway, published by Hodder Wayland.


இணையதள வளங்கள்

1. https://www.topper.com-guide: biology

2. https://www.britannica.com>science

3. https://topper.com.>plant-kingdam

4. https://merriam-webster.com>binomial


இணையச் செயல்பாடு


தாவரங்களின் உலகம்

மருத்துவகுணமுள்ளத்தாவரங்களையும்அவற்றின்பயன்களையும்அறிவோமா?

படிநிலைகள்

• கீழ்க்காணும் உரலி/விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.

• "Medicinal plants and their uses"என்றதலைப்பினைச்சொடுக்கவும்.

• மருத்துவகுணமுள்ளத்தாவரத்தினைத்தேர்ந்தெடுத்து அதன்பயன்களை அறியவும்.

• படத்தினைக்கொண்டுமருத்துவகுணமுள்ளத்தாவரங்களின்பயன்களைஅட யாளம்காணவும்.

உரலி : https://www.plantscience4u.com/2018/08/10-medicinal-plants- and-their-uses-with.html#.XHznyogzaM8 (or) scan the QR Code

Tags : Plant Kingdom | Chapter 17 | 8th Science தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 17 : Plant Kingdom : Points to Remember, Glossary, Concept Map Plant Kingdom | Chapter 17 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்