இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. சீனாவில் 1911 ஆம் ஆண்டில் நடந்த
புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.
• மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908 ஆம் ஆண்டு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேரரசியார் தாவேகரின் மரணத்தோடுத் துவங்கியது.
• புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள்
சுதந்திரமாகச் செயல்படலாயினர்.
• உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911 ஆம் ஆண்டு ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது.
2. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
• 1933 ஆம் ஆண்டு வாக்கில்
சீன பொதுவுடைமை கட்சியின் மீது முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
• ஒரு நீண்டப் பயணத்தை முன்னெடுத்து 100,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934 இல் கிளம்பினர்.
• இவ்வாறு கிளம்பிய 100,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935 இன் பிற்பகுதியில் 6000 மைல்களைக் கடந்து ஷேனிப் பகுதியை
சென்றடைந்தனர்.
3. பாக்தாத் உடன்படிக்கை அறிந்ததை எழுதுக.
• துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான் ஆகிய
நாடுகள் 1955 இல் ஏற்படுத்திய ஒப்பந்தமே பாக்தாத் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது.
• அமெரிக்க ஐக்கிய நாடு இவ்வுடன்படிக்கையில் 1958 இல் இணைந்ததோடு,
இவ்வொப்பந்தம் மத்திய உடன்படிக்கை அமைப்பு என்று மாற்றியழைக்கப்பட்டது.
4. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
• மேற்கு ஐரோப்பிய நாடுகளை தன் செல்வாக்கினுள் வைத்துக்கொள்ள ஐக்கிய
அமெரிக்க நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.
• இத்திட்டம் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக
அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்தது.
5. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
• ஐக்கிய அமெரிக்க நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகளை உலக
அரசியலில் முதலாம் உலக நாடுகள் என்றும் சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை
நாடுகளை இரண்டாம் உலக நாடுகள் என்றும் வழங்கப்பட்டன.
• இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகளை மூன்றாம் உலக நாடுகள்
என்று அழைக்கப்பட்டன.
6. கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச்
செய்யப்பட்டது?
• காஸ்ட் ரோவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர கியூபாவின் விமான தளங்களை
அமெரிக்கா குண்டு வீசித் தாக்கியது.
• அமெரிக்காவின் போர் கப்பல்கள் கியூபாவை சுற்றி வளைத்தன.
• சோவியத் நாடு கியூபாவில் ஏவுகணைகளை ரகசியமாக நிறுவப் போவதாய் கென்னடி
தலைமையிலான அமெரிக்க அரசிற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது.
• இறுதியாக சோவியத் குடியரசுத்தலைவர் குருசேவ் ஏவுகணைகளைத் திரும்பப்
பெற்றதால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.