இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - ஐரோப்பிய ஐக்கியத்தை நோக்கி | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II
ஐரோப்பிய ஐக்கியத்தை நோக்கி
இரண்டாம்
உலகப்போருக்குப் பின்வந்த காலத்தில் எடுக்க முயன்ற முடிவுகளில் முக்கியமானது
மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைக்க நினைத்ததேயாகும். அதன்மூலம் (1) ஐரோப்பியர்களுக்கிடையே
மூண்ட போர்களைத் தவிர்க்கவும் அதிலும் குறிப்பாக பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும்
ஏற்பட்டுக்கொண்டிருந்த பகைமையை ஒடுக்கவும், (2) ஒருங்கிணைந்த
ஐரோப்பாவைக் கொண்டு சோவியத் நாட்டின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், (3) அமெரிக்க ஐக்கிய
நாட்டின் படைகளுக்கும் சோவியத் நாட்டின் படைகளுக்கும் சமமாக ஒரு படைபலத்தை
நிறுவவும், (4) கண்டங்களிடையே அல்லது கண்டங்களில் பொருளாதார மற்றும் இராணுவ
வளங்களையும் திறன்களையும் முழுதாகப் பயன்படுத்தவும் முடியும் என்று கருதப்பட்டது.
பத்து நாடுகள் லண்டனில் மே 1949 இல் கூடி ஐரோப்பிய சமூகத்தை உருவாக்க கையொப்பமிட்டன. ஸ்ட்ராஸ்பர்க்
நகரை தலைமையகமாகக் கொண்ட ஐரோப்பிய சமூகத்தில் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை
அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழுவும் வெளிநாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
சிலரைக்கொண்ட கலந்தாய்வு சபையும் அமையப்பெற்றன.
ஐரோப்பியப்
பாதுகாப்பு சமூகமும் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகமும் துவங்கப்பட்டன.
ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் (பிரான்ஸ்,
மேற்கு
ஜெர்மனி, இத்தாலி,
பெல்ஜியம்,
ஹாலந்து,
லக்ஸம்பர்க்)
கூடி ரோம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதோடு அதன் மூலம் ஐரோப்பியப் பொருளாதார சமூகம்
அல்லது ஐரோப்பியப் பொதுச் சந்தையை பிரெஸெல்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு
ஏற்படுத்தின.
இச்சமூகம்
பண்டங்கள், சேவைகள்,
முதலீடு,
தொழிலாளர்கள்
போன்றவற்றின் நகர்வை எல்லைகள் கொண்டு நிறுத்துவதை மாற்றியது. சந்தைப்போட்டியைக்
கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது கொள்கைகளையும் தனியார் ஒப்பந்தங்களையும்
புறக்கணித்தது. பொதுவான விவசாயக் கொள்கையையும் பொதுவான வெளிநாட்டு வணிகத்தையும்
இவ்வமைப்பு உருவாக்கியது. ஐரோப்பிய பொதுச்சந்தை என்பது ஒரு வெற்றிகரமான
முயற்சியாகும்.
ஒற்றை
ஐரோப்பியச் சட்டம் 1 ஜூலை 1987
இல்
நடைமுறைக்கு வந்தது. அது ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி
அதற்கு சட்ட வடிவம் கொடுத்தது. மேலும் அது உறுப்பு நாடுகளை வெளியுறவுக் கொள்கையில் அதிகமான
ஒத்துழைப்பை நாடியது. இச்சட்டம் உறுப்பு நாடுகளின் மக்கள் தொகையின் அடிப்படையில்
அவற்றிற்கான ஓட்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்தது. ஒரு சட்ட நிறைவேற்றத்திற்கு
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என நிலை நிறுத்தப்பட்டது.
1992 பிப்ரவரி 7
இல்
கையெழுத்திடப்பட்ட மாஸ்டிரிக்ட் (நெதர்லாந்து) ஒப்பந்தம்,
ஐரோப்பிய
ஒன்றியத்தை ஏற்படுத்தியது. பொதுவான நிதிக் கொள்கையும் நாடுகள் வழங்கிய பணத்தை மீறிய
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமும் (யூரோ) முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர்
அவற்றை நிர்வகிக்கும் பொது நிறுவனங்களும் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன.
பிரெஸெல்ஸ் (பெல்ஜியம்) நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.