இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
பாடச்சுருக்கம்
• சீனாவின் வரலாறு 1911இல் ஏற்பட்ட புரட்சிக்குப்பின் நிகழ்ந்தவற்றில் துவங்கி இரண்டாம் உலகப்போருக்குப்பின் அது ஒரு பொதுவுடைமை அரசாக மாறியதுவரை கூறப்பட்டுள்ளது.
• அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் நாட்டிற்குமிடையே உருவான பகைமை, உலகை இரு இராணுவப்பிரிவுகளாகப் பிரித்ததையும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்புப் பற்றியும் வார்சா ஒப்பந்தம் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
• கொரியப் போர், கியூபாவின் ஏவுகணைச் சிக்கல், அரபு-இஸ்ரேல் போர், வியட்நாம் போர் போன்றவற்றைப் பனிப்போர் பின்புலத்தில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
• மூன்றாம் உலக நாடுகளின் கருத்தியலாக வெளிப்பட்ட அணிசேரா இயக்கம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
• அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து விலகி ஐரோப்பியக் குழுவை ஏற்படுத்தி அதன் நீட்சியாகவே பின்னர் ஐரோப்பியப் பொதுச் சந்தையும் ஐரோப்பிய இணைவும் ஏற்பட்டது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
கலைச்சொற்கள்
பகையுணர்வு கொண்ட : Antagonistic acting against or indicating
நழுவுதல் : Wriggle out to avoid doing something
வளர்ச்சி, உயர்வு : Ascension the act of rising to an important position or a higher level, a movement upward restrain oneself from doing something
அதிருப்தி : Disillusioned disappointed on finding out something is not as good as hoped
விலகியிருத்தல், ஒதுங்கியிருத்தல் : Abstaining
வெறுப்புணர்ச்சி, கசப்புணர்வு : Embitter
திறனற்றதாக்குதல், முடமாக்குதல் : Incapacitated lacking in or deprived of strength or power
நுண்ணுயிரியல் ஆயுதங்கள் : Bacteriological weapons the use of harmful bacteria as a weapon