இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - கியூபாவின் புரட்சி | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II
கியூபாவின் புரட்சி
அமெரிக்க
ஐக்கிய நாடு மத்திய அமெரிக்காவிலும் (ஹோண்டுரஸ்,
எல்
சல்வதோ, நிகரகுவா,
பனாமா,
க்வாத்தமாலா)
கரீபியப் பகுதியிலும் (கியூபா, டோமினியக் குடியரசு,
ஹைதி)
கிழக்கு ஆசியாவிலும்
(பிலிப்பைன்ஸ், தென் கொரியா,
தெற்கு
வியட்நாம், தாய்லாந்து) தனக்கு துணைக் கோள்களாகச் சுற்றிச்
செயல்படும் நாடுகளைக் கொண்டிருந்தது. இந்நாடுகள் இராணுவ அதிகாரிகளாலும் பெரும்
நிலச்சுவான்தாரர்களாலும் சில சூழ்நிலைகளில் பெருமுதலாளிகளாலும் ஆட்சி செய்யப்பட்டு
வந்தன.
காஸ்ட்ரோ
பதவியேற்ற பின் கியூபாவிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய்ச்
சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களைச்
சுத்திகரிக்க மறுத்தன. ஆகவே காஸ்ட்ரோ எண்ணெய் ஆலைகளை தேசியமயமாக்கினார். அதற்குப்
பதிலடியாக அமெரிக்க ஐக்கிய நாடு அதுவரை கியூபாவிலிருந்து மொத்தமாக சர்க்கரைக்
கொள்முதல் செய்து வந்ததை நிறுத்திக் கொண்டது. காஸ்ட்ரோ நாட்டிலிருந்த அமெரிக்க
ஐக்கிய நாட்டின் சர்க்கரை ஆலைகளை தேசியமயமாக்கியதன் மூலம் மின்சார விநியோகத்திலும்
தொலைபேசி வசதிகள் ஏற்படுத்துவதிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கிருந்த ஏகபோக
உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு
அச்சுறுத்தல் ஏற்பட்டது.
கியூபாவிலிருந்து
வெளியேற்றப்பட்டிருந்த மக்களைக் கொண்ட ஒரு படையை பிக்ஸ் வளைகுடாவில் ஏப்ரல் 1961இல்
இறக்கிய அதே வேளையில் காஸ்ட்ரோவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கோடு
அதன் விமான தளங்களை அமெரிக்க ஐக்கிய நாடுகள் குண்டு வீசித் தாக்கியது.
அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் கியூபாவைச் சுற்றிவளைத்தன. சோவியத்நாடு கியூபாவில்
அணுசக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகளை இரகசியமாக நிறுவப்போவதாய் கென்னடி தலைமையிலான
அமெரிக்க அரசிற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது. இறுதியாக சோவியத் நாட்டின்
குடியரசுத்தலைவர் குருசேவ் ஏவுகணைகளைத் திரும்பப்பெற உறுதியளித்ததால் பிரச்சனைக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மேற்கொண்டு
இருதரப்பினரும் உடன்படிக்கையை ஏற்படுத்த முன்வந்தனர். அதன்படி அமெரிக்க நாடு
கியூபா மீது எப்போதும் போர்தொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டை உறுதி செய்ததால்
சோவியத் நாடு ஏவுகணைகளைக் கியூபாவிலிருந்து அகற்றியது.