இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - கொரியப்போர் | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II
கொரியப்போர்
கொரியப்போர்
பனிப்போரை மேலும் சூடுபிடிக்க
வைத்தது. கொரிய நாடு வடக்கு தெற்கு என இருபிரிவுகளாக 1945இல்
பிரிக்கப்பட்டபின் உருவான இருநாடுகளும் மறு ஒருங்கிணைப்பை வலியுறுத்தினாலும்
அவ்வாறு ஒருங்கிணைத்த பின் உருவாகக்கூடிய நாட்டிற்குத் தாமே சட்டப்பூர்வமாக ஆளும்
உரிமை பெற்றவர் என்று வாதிட்டன. வடகொரிய அதிபரான இரண்டாம் கிம் (கொரிய மக்கள்
குடியரசு) தென்பகுதி எதிரியாகக் கருதிய சிங்மென் ரீ-க்கு (கொரியக் குடியரசு) ஒரு
வாய்ப்புக்கிடைக்கும் முன்பே செயல்பட முடிவெடுத்தார். ஸ்டாலினின் பின்புலத்தில்,
ஜூன்
1950இல் அவர் படையெடுப்பைத் துவக்கினார். கிம்மும்
ஸ்டாலினும் இப்பிரச்சனையில் அமெரிக்க நாடு தலையிடும் என்று எதிர்பார்க்கவில்லை.
இப்போர் மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது இப்போரால் ஏற்பட்ட மனித உயிரிழப்பு
எண்ணிக்கையில் அளவிட முடியாததாய் இருந்தது. இதனால் கொரிய மக்களுக்கு எந்த லாபமும்
ஏற்படவில்லை.
அமெரிக்க
ஐக்கிய நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகள் உலக அரசியலில் உலக நாடுகள்
என்றும் சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலக
நாடுகள் என்றும் அழைக்கப்பட்டன. இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகள்
மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்டன.