19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின்
நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.
• தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம்
வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
• அவர் ஒருவர் மட்டுமே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின் சக்தியின் கடவுளாவார். அவரே
நிலையானவர். எங்கும் நிறைந்திருப்பார்.
• நம்முடைய வீடு பேறு, இப்பிறவியிலும்
அடுத்த பிறவியலும் அவரை நம்புவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
• அவரை நம்புவதானது அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பதைச்
செயல்படுத்துவதிலும் அடங்கி உள்ளது.
2. சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக்
குறிப்பிடுக.
• சாதி மறுப்பு, சமபந்தி,
சாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம்,
பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத்
தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
• விதவை மறுமணச் சங்கம், புனே
சர்வஜனிக் சபா, தக்காணக் கல்வி கழகம் ஆகிய அமைப்புகளை ரானடே நிறுவினார்.
3. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு
வரைக.
• இராமலிங்க சுவாமிகள் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள்
உட்பட அனைத்து உயிரினங்களின் மேலும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
• 1865 இல் சமரச வேத சன்மார்க்க
சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரச சுத்த சன்மார்க்க
சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
• 1866 இல் தென்னிந்தியாவில்
ஏற்பட்ட கொடியப் பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத்
தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை நிறுவினார்.
4. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?
• சாதி ஒழிக்கப்பட்டது.
• பலதாரமணம், குழந்தை திருமணம்
தடை செய்யப்பட்டது.
• விதவை மறுமணம் ஊக்குவிக்கப்பட்டது.
• பெண்ணடிமை தனத்தை எதிர்த்தார்.
5. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.
• 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான
முதல் பள்ளியைப் புனேயில் திறந்தார்.
• சத்திய சோதக் சமாஜ் (உண்மையை
நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை நிறுவினார்.
• பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
• விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
• ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை
அர்ப்பணித்தார்.