19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century
19ஆம் நூற்றாண்டில் சமூக,
சமய சீர்திருத்த இயக்கங்கள்
பாடச்சுருக்கம்
• இராஜா ராம்மோகன் ராயால்,
பிரம்மசமாஜம்
நிறுவப்பெற்றதும், அவருடைய இறப்பிற்குப் பின்னர் சமாஜத்தின்
செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் மகரிஷி தேவேந்திரநாத் தாகூரும் கேசவ்
சந்திர சென்னும் வகித்த பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
• M.G. ரானடேயின்
பங்களிப்பும், அவர் இணைந்து செயல்பட்ட பிரார்த்தனை சமாஜத்தின்
பங்களிப்பும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
• சுவாமி தயானந்த சரஸ்வதியின்
ஆதரவில், இந்துமதத்தைச் சீர்திருத்த ஆரிய சமாஜம்
மேற்கொண்ட முயற்சிகளும், மதம் மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்குள்
கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
• தீவிர சீர்திருத்தவாதியான
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் குறித்தும், பெண்களின்
மேம்பாட்டிற்கான அவரின் முயற்சிகளும் விளக்கப்பட்டுள்ளன.
• இந்துமதத்தை
மாற்றியமைப்பதில் இராமகிருஷ்ண பரமஹம்சர், அவருடைய
சீடர் விவேகானந்தர் ஆகியோரின் பங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
• மகாராஷ்டிராவில் ஜோதிபா பூலே
ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் பகுதியினர்க்குச்
சமூகநீதியைப் பெற்றுத்தர மேற்கொண்டப் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
கலைச்சொற்கள்
சொல்லப்படும்
: Alleged stated but not proved
பரவசமான
: Ecstatic in a state of extreme happiness
அதிகப்
பரிமாணமுள்ள : Voluminous bulky
வலியுறுத்துதல்
: Reiterated repeat a statement for emphasis
உருவ
வழிபாடு : Idolatry the practice of
worshipping idols
சிறு
நூல் : Tract a small booklet
திருவெளிப்பாடு
: Revelation disclosure