Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu

   Posted On :  24.07.2022 07:36 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக விடையளிக்கவும்.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.

• தமிழ் மக்களுக்கு தங்களது பாரம்பரியம் குறித்து வியப்பைத் தந்தது.

• நவீன தமிழர்கள் தங்களது சமூகப் பண்பாட்டு அடையாளங்களை பண்டைய தமிழ் செவ்விலக்கியங்கள் வாயிலாக அறிய முடிந்தது.

• ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழியாகும்.

• பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறு, மரபு, மொழி, இலக்கியம் குறித்து அறிய முடிந்தது.

 

2. தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பினை நன்குப் புலப்படுத்துக.

• இராபர்ட் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இந்தோ - ஆரியன் மொழி குடும்ப கோட்பாட்டை விரிவுபடுத்தினார்.

• திராவிட மொழிகளிடம் ஒப்புமை இருந்ததையும் அது மாதிரி சமஸ்கிருதத்தில் இல்லை எனக் கூறினார்.

• தமிழின் தொன்மையை நிலை நாட்டினார்.

 

3. தங்களுடைய எழுத்துகளின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்.

சி.வை. தாமோதரனார்

• மறைமலையடிகள்

• பி. சுந்தரனார்

• பாரதிதாசன்

• உ.வே. சாமிநாதர்

• சீகன் பால்கு

• பரிதிமாற் கலைஞர்

• இராபர்ட் கால்டுவெல்

• திரு.வி. கலியாண சுந்தரனார்

 

4. நீதிக்கட்சியால் நிறைவேறப்பட்ட இந்து சமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.

• நீதிக்கட்சி 1926ல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது.

• எந்தவொரு தனி நபரும், சாதி வேறுபாடின்றி கோயில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகலாம்.

• கோவிலின் சொத்துகளை நிர்வகிக்க வழி வகை செய்யப்பட்டது.

 

5. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

• தமிழில் - திராவிடன்

• ஆங்கிலத்தில் - ஜஸ்டிஸ்

• தெலுங்கில் - ஆந்திர பிரகாசிகா

 

6. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.

• பெரியார் ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்தார்.

• குழந்தை திருமணத்தையும், தேவதாசி முறையையும் எதிர்த்தார்.

• பெண்களின் மோசமான நிலைக்கு குரல் கொடுத்து வந்தார்.

• திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தையை மறுத்த அவர் அதற்கு மாற்றாக திருக்குறளில் இருந்து வாழ்க்கைத்துணை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டினார்.

• பெண்கள் விவாகரத்து பெறவும், சொத்தில் பங்கு பெறவும் உரிமை உண்டு என்றார்.

• பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய நூல் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்பதாகும்.

 

Tags : Social Transformation in Tamil Nadu | History | Social Science தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu : Answer briefly Social Transformation in Tamil Nadu | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : சுருக்கமாக விடையளிக்கவும். - தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்