தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu
VI. விரிவாக விடையளிக்கவும்.
1. தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.
• காலனியாதிக்கத்தின் போது இந்திய துணைக் கண்டத்தில் தமிழ் மறுமலர்ச்சியின்
போது பண்பாடு, மனிதநேய, கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது.
• நவீன தமிழ்நாடும் அத்தகைய வரலாறு மாற்றத்தை அனுபவித்தது.
• இது தமிழ்மொழி கலாச்சாரம், அதன்
அடையாளத்தை மாற்றி அமைத்தது.
• அச்சு இயந்திரத்தின் வருகையும், தமிழ்மொழி மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.
• ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய முதல்மொழி தமிழ்மொழியே என்ற
சிறப்புக் கிடைத்தது.
• 1578இல் தம்பிரான் வணக்கம்
எனும் நூல் கோவாவில் வெளியிடப்பட்டது. திருக்குறள்
1812இல் புத்தகமாக வெளிவந்தது.
• பண்டைய தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் தமிழ் அறிஞர்களிடையே
புத்தெழுச்சி ஏற்பட்டது.
• எடுத்துக்காட்டாக, சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை அச்சு வடிவில்
கொண்டு வர அரும்பாடு பட்டனர்.
• பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறு, மரபு, மொழி, இலக்கியம், சமயம் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்தியது.
• தமிழர்களின் அடையாளங்களை பண்டைய தமிழ் நூல்கள் அச்சு வடிவில் வெளிக்
கொணர்ந்தது.
• இராபர்ட் கால்டுவெல் தமிழின் தொன்மையை நிலை நாட்டினார்.
• பி.சுந்தரனார்,
திரு.வி.க., பாரதிதாசன், பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள் தமிழ் மறுமலர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பங்கெடுத்த தமிழ்
அறிஞர்கள்.
2. நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி,
சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும்.
நீதிக்கட்சி தோற்றம் :
• தமிழக அரசியல் களங்களில் பிராமணர்களின் ஆதிக்கம் தொடரவே பிராமணரல்லாத
டாக்டர் நடேசனார், சர்.பி.டி.தியாகரார், டி.எம்.நாயர் மற்றும் அலமேலுமங்கை,
தாயரம்மாள் ஆகியோர் பிராமணர் அல்லாத தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை
1916 நவம்பர் 20இல் உருவாக்கினார்கள்.
• தமது கொள்கைகளை பரப்ப தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில்
ஆந்திர பிராகாசிகா என்ற பத்திரிகைகளை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
• ஜஸ்டிஸ் என்ற ஆங்கில பத்திரிகையின் பேரில் 1920இல் நீதிக்கட்சியாக பெயர் மாற்றம் பெற்றது.
• 1920இல் நடந்த சென்னை
மாகாண தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்து :சுப்பராயுலு முதல்
அமைச்சராக பொறுப்பேற்றார்.
சமூக நீதி பங்களிப்பு :
• பிராமணர் அல்லாதவர்களுக்கு ஆதரவாக இறங்கியது நீதிக்கட்சி.
• மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கியது.
• சாதி மறுப்பு திருமணத்திற்கு தடையாக இருந்த சட்ட சிக்கல்களை நீக்கியது.
• பொது இடங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தது.
• 1921 இல் அரசியலில் பெண்கள்
பங்கேற்பதை முதன்முதலாகக் கொண்டு வந்தது.
• 1924 இல் பணியாளர் தேர்வு
வாரியத்தை அறிமுகப்படுத்தி இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியது.
• 1926 இல் இந்து அறநிலையத்துறைச்
சட்டத்தைக் கொண்டு வந்து கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்க வழி செய்தது
• ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட இலவச மனைப்பட்டாக்கள் வழங்கியது.
• மதிய உணவுத் திட்டம் சென்னையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
• தேவதாசி முறையை ஒழித்தது.
3. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.
அறிமுகம் :
• ஈரோட்டைச் சார்ந்தவர், சுயமரியாதை
இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
• ஆரம்ப காலங்களில் இந்து மத பற்றாளராக இருந்து பின் வெறுத்து காங்கிரஸ்
கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
• காங்கிரஸ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்தை வெறுத்து 1925 இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
பெரியாரின் பங்களிப்பு :
• பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தவர்.
• இதற்கு இவர் குடியரசு, ரிவோல்ட்,
பகுத்தறிவு, விடுதலை போன்ற பத்திரிகைகளை நடத்தி
விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
• பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து இந்தி எதிர்ப்பு
போராட்டம் நடத்தினார்.
• ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார். எ.கா: கேரளா
வைக்கம் கோவில் நுழைவு போராட்டம்.
• மது குடிப்பதை தவிர்க்க தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டியவர்.
• பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்து குழந்தைத் திருமணத்தையும், தேவதாசி முறையையும் கண்டனம் செய்தவர்.
• பெண்களுக்கு சொத்துரிமை வழங்குதல், ஆண்-பெண் சம உரிமைக்கு போராடியவர்.
• கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர் முறையை எதிர்த்து அனைத்து நபர்களும்
அர்ச்சகர் ஆகலாம் என வாதிட்டவர்.
• சுய மரியாதை திருமணங்களை பரிந்துரைத்து செயல்படுத்தியவர்.
• சேரன்மகாதேவி குருகுலப் பள்ளியில் நடைபெற்ற சாதி வேறுபாடுகளை களைய
முற்பட்டவர்.
VII. மாணவர்களின் செயல்பாடுகள்
1. தொழிலாளர் இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் வேறுபடுத்திப் பார்க்க மாணவர்களுக்கு
கற்றுக் கொடுக்கலாம். உள்ளூர் அளவிலான
தொழில் சங்கங்களின் நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் ஒப்படைப்பு ஒன்றைச் செய்யலாம்.
மாணவர் செயல்பாடு.
2. உள்ளூர் அளவிலான எழுத்தாளர்கள் அமைப்புகளின் அல்லது
பெண்கள் அமைப்புகளின் செயல்பாடுகளை மாணவர்கள் தொகுக்கலாம்.
மாணவர் செயல்பாடு.