தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu
பாடச்சுருக்கம்
• காலனியத்தின்
தலையீட்டினாலும் பகுத்தறிவு இயக்கத்தின் எழுச்சியினாலும் இந்திய அறிவுஜீவிகளிடையே
தன்னைத்தானே உள்ளாய்வு செய்து கொள்ளும் உள்முகச் சிந்தனைச் செயல்படுவதை
பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா எதிர்கொண்டது. இது இந்திய மறுமலர்ச்சிக்கு
இட்டுச் சென்றது.
• தமிழ்நாட்டில்,
அச்சுக்
கூடங்களின் வளர்ச்சி, பழம்பெரும் சமயச் சார்பற்ற தமிழ் இலக்கியங்கள்
வெளியிடப்பட்டு பரவுவதற்கு செயலூக்கியாய் அமைந்தது.
• பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தமிழறிஞர்கள் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை வெளியிடுவதற்கு அயராது உழைத்தனர்.
• இம்மாற்றம் தமிழ்மொழி,
இலக்கியம்
ஆகியவற்றுக்கு மட்டும் புத்தூக்கம் அளிக்கவில்லை. நடைமுறையிலிருந்த
சாதிப்படிநிலைகளுக்குச் சவாலாக அமைந்தது.
• 1916இல்
நிறுவப் பெற்ற நீதிக்கட்சி, சென்னை மாகாணத்தில் இருந்த பிராமணர்
அல்லாதவர்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்தது.
• சுயமரியாதை இயக்கத்தின்
முன்னோடியான பெரியார் ஈ.வெ. ராமசாமி, அடிப்படைவாதத்தின்
நிறை குறைகளை மதிப்பிட்டார்.
• இறுதியாகத் தமிழ் நாட்டின்
பகுத்தறிவுச் சிந்தனைகள் நவீன இந்திய அரசின் ஆக்கபூர்வமான வளர்ச்சிகளுக்கு
மாதிரியாய் அமைந்தது.
கலைச்சொற்கள்
சுவிசேஷர்கள், நற்செய்தியாளர் : evangelical Christian groups that
believe that the teaching of the Bible and persuading others to join them is
extremely important
மேலாதிக்கம் : hegemony leadership or dominance, especially by one
country or social group over others
எழுச்சி : resurgence renewal, revival
மொழியியலாளர்கள் : linguists a person skilled in languages
ஒதுக்கப்பட்ட
: marginalised a person, group concept treated as insignificant or
sidelined
எரிச்சலூட்டும் : irked irritated, annoyed
ஒழித்துக்கட்டும்
: debunking expose the falseness or hollowness of (a myth,
idea or belief)
படுதோல்வியுறச்
செய்தல் : trounced defeat heavily in a contest
விமர்சிப்பது : critiquing evaluate in a detailed and analytical way
அநீதியான : iniquitous grossly unfair and morally wrong
புனைபெயர் : pseudonym a fictitious name, especially one used by an
author
பெயரிடப்பட்டு : rechristened give a new name to