இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல் - பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 1 : India - Location, Relief and Drainage
VI. பின்வரும் வினாக்களுக்கு
விரிவான விடையளிக்கவும்.
1. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
இந்தியாவின் இயற்கை அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக
பிரிக்கலாம்.
1. ட்ரான்ஸ் இமயமலைகள் (மேற்கு
இமயமலை)
2. இமயமலைகள்
3. பூர்வாஞ்சல் குன்றுகள் (கிழக்கு
இமயமலை)
1. ட்ரான்ஸ் இமயமலை மேற்கு இமயமலை)
• இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும்
திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
• இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர்,
லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.
2. இமயமலைகள்
• இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
• இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது. இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
* உள் இமயமலைகள்
/ இமாத்ரி
* மத்திய இமயமலைகள்
/ இமாச்சல்
* வெளி இமயமலைகள்
3. பூர்வாஞ்சல் குன்றுக் (கிழக்கு
இமயமலை)
• இவை இமயமலைகளின் கிழக்கு கிளையாகும்.
• இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
• பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கு இடையே
காணப்படுகின்றன.
இமயமலையின் முக்கியத்துவம்:
• தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு
கனமழையைக் கொடுக்கிறது.
• இந்திய துணைக் கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
• வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. எ.கா: சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, மற்றும்
பிற ஆறுகள்.
• இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின்
சொர்க்கமாகத் திகழ்கிறது.
• பல கோடை வாழிடங்களும், புனிதத்தலங்களான
அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும்
வைஷ்ணவி தேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
• வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை
அளிக்கிறது.
• மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை
தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
• இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்குப் பெயர் பெற்றவை.
2. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
தீபகற்ப இந்திய ஆறுகள்:
தீபகற்ப ஆறுகளை அவைபாயும் திசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1) கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
2) மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்:
அ) மகாநதி:
• இந்நதி சத்தீஸ்கார் மாநிலத்தில் உற்பத்தியாகி ஒடிசா
மாநிலத்தின் வழியாக பாய்கிறது.
• மகாநதி பல கிளையாறுகளைப் பிரிந்து இந்தியாவின் மிகப்பெரிய
டெல்டாக்களை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
ஆ) கோதாவரி:
• தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு
(1465 கி.மீ).
• கோதாவரி, மகாராஷ்ட்ரா மாநிலத்தில்
அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
• இந்நதி விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
• இது ஆந்திரப்பிரதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில்
கலக்கிறது.
• கோதாவரி டெல்டா பகுதியில் நன்னீர் ஏரியான கொல்லேறு
ஏரி அமைந்துள்ளது.
இ) கிருஷ்ணா
:
• மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில்
பாய்கிறது.
• இது தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது பெரிய நதியாகும்.
• இந்நதி ஆந்திரப் பிரதேசத்தின் வழியாக பாய்ந்து ஹம்சலாதேவி
என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
ஈ) காவேரி:
• காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவேரியில்
உற்பத்தியாகி சுமார் 800 கி.மீ நீளத்துக்கு
பாய்கிறது.
• இது தென் இந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
• தமிழ்நாட்டில் நுழைந்து தொடர்ச்சியான மற்றும் குறுகலான
மலையிடுக்குகள் வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியாக பாய்கிறது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்:
அ) நர்மதை:
• மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில்
உற்பத்தியாகி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
• இது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானதாகும்.
ஆ) தபதி:
• இந்நதி மத்திய பிரதேசத்தில் உள்ள முல்டாய் என்ற இடத்திலிருந்து
உற்பத்தியாகிறது.
• பின்பு காம்பே வளைகுடா வழியாக அரபிக்கடலில் கலக்கிறது.
3. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
• கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ பரப்பளவில் பாய்கிறது.
• இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டது.
• கங்கை சமவெளியில் பல நகரங்கள்
ஆற்றங்கரையையொட்டியும் அதிக மக்களடர்த்தி கொண்டதாகவும் உள்ளது.
• கங்கை ஆறு 7010 மீ உயரத்தில்
கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
• இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ ஆகும்.
• வட பகுதியிலிருந்து கோமதி, காக்ரா,
கண்டாக், கோசி மற்றும் தென்பகுதியிலிருந்து யமுனை,
சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன.
• வங்கதேசத்தில் கங்கை “பத்மா”
என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
• கங்கை மற்றும் பிரம்மபுத்ரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே
மிகப் பெரிய டெல்டாவை
உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.