இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல் - காரணம் கூறுக. | 10th Social Science : Geography : Chapter 1 : India - Location, Relief and Drainage
III. காரணம் கூறுக.
1. இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.
• இமயமலைகள் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவி மேலோடு மடிக்கப்பட்டு
மடிப்பு மலைகளாக உருவாகின.
• எனவே இமயமலைகள் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன.
2. வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்.
கோடை காலத்தில் பனி உருகி நீராகவும் குளிர் காலத்தில் மழையினால் நீராகவும்
இருப்பதால் வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள் ஆகும்.
3. தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கிப் பாயும் நதிகள்.
• தென்னிந்திய நதிகள் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து
தோன்றியவை.
• மேற்குப் பக்கத்தின் உயரம் கிழக்குப் பக்கத்தைவிட அதிகமாக உள்ளது.
• எனவே, தென்னிந்திய நதிகள்
கிழக்கு நோக்கிப் பாயும் நதிகளாகும்.
4. மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை.
• மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் பீடபூமி பகுதியிலிருந்து தோன்றி கடலை
நோக்கி பாய்கின்றன.
• மேற்கு கரையோர சமவெளிக்கு அருகில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி
மலைகள் வழியாக அவை செல்கின்றன.
• எனவே மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை.