இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக | 10th Social Science : Geography : Chapter 1 : India - Location, Relief and Drainage
IV. வேறுபடுத்துக
1. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்
இமயமலை ஆறுகள்
1. இமயமலையில் உற்பத்தியாகின்றன.
2. நீளமானவை மற்றும் அகலமானவை.
3. வற்றாத நதிகள்.
4. நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை.
தீபகற்ப ஆறுகள்
1. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
2. குறுகலான மற்றும் நீளம் குறைந்தவை.
3. வற்றும் ஆறுகள்.
4. நீர் (புனல்) மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது.
2. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
1. தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது.
2. மேற்கு கடற்கரைக்கு இணையாக உள்ளது.
3. தொடர்ச்சியான மலைகள்.
4. இம்மலையின் வடபகுதி சயத்ரி என்று அழைக்கப்படுகிறது.
கிழக்கு தொடர்ச்சி மலைகள்
1. தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது.
2. கிழக்கு கடற்கரைக்கு இணையாக உள்ளது.
3. தொடர்ச்சியற்ற மலைகள்.
4. இம்மலைத்தொடர் பூர்வாதிரி என்றும் அழைக்கப்படுகிறது.
3. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச்
சமவெளி.
மேற்கு கடற்கரைச் சமவெளி
1. மேற்கு தொடர்ச்சி மலைக்கும், அரபிக்கடலுக்கும் இடையே அமைந்துள்ளது.
2. வடக்கில் உள்ள ரானா ஆப் கட்ச்
முதல் தெற்கில் உள்ள கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது.
3. மேற்கு கடற்கரையின் வடபகுதி கொங்கணக்
கடற்கரை எனவும், மத்திய பகுதி கனரா கடற்கரை எனவும்
அழைக்கப்படுகிறது.
4. வேம்பநாடு ஏரி இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான ஏரியாகும்.
கிழக்கு கடற்கரை சமவெளி
1. கிழக்கு தொடர்ச்சி மலைக்கும், வங்காள விரிகுடாவிற்கும் இடையே அமைந்துள்ளது.
2. மேற்கு வங்காளம், ஒடிசா,
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு வரை நீண்டுள்ளது.
3. மகாநதிக்கும், கிருஷ்ணாநதிக்கும்
இடைப்பட்டப் பகுதி வடசர்க்கார் எனவும், கிருஷ்ணா மற்றும்
காவிரி ஆற்றிற்கு இடைப்பட்டப் பகுதி சோழ மண்டல கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.
4. கொல்லேறு ஏரி, பழவேற்காடு
(புலிகாட்) ஏரி இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான
ஏரியாகும்.