அமைவிடமும் பரப்பளவும்
இந்தியா
8°4' வட அட்சம் முதல் 37°6'
வட
அட்சம் வரையிலும் 68°7 கிழக்கு தீர்க்கம் முதல் 97°25'
கிழக்கு
தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது. அட்ச தீர்க்க பரவல்படி இந்தியா முழுமையும்
வடகிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவின்
தென்கோடி பகுதியான முன்பு பிக்மெலியன் என்று அழைக்கப்பட்ட இந்திரா முனை 6°
45' வட
அட்சத்தில் அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய
நிலப்பகுதியின் தென்கோடி குமரி முனையாகும். வடமுனை இந்திரா கோல் எனவும்
அழைக்கப்படுகிறது.
இந்தியா,
வடக்கே
லடாக்கிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 3214
கி.மீ
நீளத்தையும், மேற்கே குஜாரத்திலுள்ள ரான் ஆப் கட்ச் முதல்
கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை 2933 கி.மீ நீளத்தையும்
கொண்டுள்ளது. 23°30' வட அட்சமான கடகரேகை
இந்தியாவின் மையமாக அமைந்து தென்பகுதி வெப்ப மண்டலமாகவும்,
வடபகுதி
மித வெப்ப மண்டலமாகவும், இரு பெரும் பகுதிகளாக பிரிக்கிறது.
இந்தியா
28 மாநிலங்களாகவும் 9
யூனியன்
பிரதேசங்களாகவும் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது.
மேற்கில்
உள்ள குஜராத் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசதம் வரை இந்தியா ஏறத்தாழ 30
தீர்க்க
கோடுகளைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது. இந்த நேர வேறுபாட்டை தவிர்ப்பதற்காக, இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82° 30' கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது. இந்திய திட்ட நேரமானது கீரீன்வீச் திட்ட நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.
• மேற்கு
- கிழக்கு மற்றும் வடக்கு - தெற்கு பரவல்.
• அதிக மற்றும் குறைந்த பரப்பளவுள்ள மாநிலங்கள்.
• சர்வதேச எல்லைகளைக் கொண்டிராத மாநிலங்கள் ஆகியவற்றை கண்டறிக.
உங்களுக்குத்
தெரியுமா?
ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர் ஆகும். ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி 2024வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்.