Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவான விடையளிக்கவும்.

இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

விரிவான விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: விரிவான விடையளிக்கவும்.

VIII. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

 

1. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.

• பருவக்காற்று பொதுவாக ஜுன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜுன் இரண்டாவது வாரத்திலும் ஜுலை 15, இல் அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.

• எல்நினோ காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

•  தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்ப நிலையானது 46° C வரை உயருகிறது.

• இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) “பருவமழை வெடிப்புஎனப்படுகிறது.

இருபிரிவுகள்:

• இதன் ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும்

• மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.

அரபிக்கடல் கிளை:

• தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப்பொழிவைத் தருகிறது.

• இக்கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது.

• ஆரவல்லி மலைத்தொடர் இக்காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை.

வங்காள விரிகுடா கிளை:

வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது.

இது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் மிக கனமழையைத் தருகிறது.

பிறகு இக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும்போது மழைப்பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப்பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.

 

2. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.

அயனமண்டல பசுமைமாறாக் காடுகள்:

ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு மேலும், ஆண்டு வெப்பநிலை 22° C க்கு அதிகமாகவும், சராசரி ஆண்டு ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேலும் உள்ள பகுதிகளில் இவ்வகைக்காடுகள் காணப்படுகின்றன.

இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.

அயனமண்டல இலையுதிர்க் காடுகள்:

இவ்வகை காடுகள் ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

இப்பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை 27° C ஆகவும் மற்றும் சராசரி ஒப்பு ஈரப்பதம் 60 முதல் 70 சதவீதமாகவும் உள்ளது.

இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக்காலத்தின்  முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.

இக்காடுகள் நறுமண திரவியங்கள் வார்னிஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசைன திரவியங்களை அளிக்கின்றன.

அயனமண்டல வறண்ட காடுகள்:

ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

அயனமண்டல வறண்ட காடுகள் ஒரு இடைநிலை வகைக் காடாகும்.

பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள்:

இக்காடுகளைமுட்புதர்க் காடுகள்என்றும் அழைப்பர். இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் மற்றும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.

அல்பைன் காடுகள்:

சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகள் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. இவ்வகைக்காடுகள் ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன.

ஒக், சில்வர்பிர், பைன் மற்றும் ஜீனிபர் மரங்கள் இக்காட்டின் முக்கிய மரவகைகளாகும்.

அலையாத்திக் காடுகள்:

இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்புநிலக் காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

 

 

Tags : Climate and Natural Vegetation of India | Geography | Social Science இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India : Answer in detail Climate and Natural Vegetation of India | Geography | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : விரிவான விடையளிக்கவும். - இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்