இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக. | 10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India
VI. வேறுபடுத்துக.
1. வானிலை மற்றும் காலநிலை.
வானிலை
1. வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின்
தன்மையைக் குறிப்பதாகும்.
2. மாறக்கூடியது.
காலநிலை
1. காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார்
30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
2. மாறாதது.
2. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க்
காடுகள்.
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
1. ஆண்டு மழைப் பொழிவு 200 செ.மீக்கு மேல்,
2. இப்பகுதியில் ஆண்டு வெப்பநிலை 22° C க்கு அதிகமாகவும், சராசரி ஆண்டு ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேலும் உள்ளது.
3. இரப்பர், எபனி, தென்னை, மூங்கில், சின்கோனா,
சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
இலையுதிர்க் காடுகள்
1. ஆண்டு மழைப்பொழிவு 100 செ.மீ - 200 செ.மீ.
2. இப்பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை 27°
C ஆகவும் மற்றும் சராசரி ஒப்பு ஈரப்பதம் 60 முதல்
70 சதவீதமாகவும் உள்ளது.
3. இங்கு தேக்கு சால், சந்தனமரம்,
ரோஸ்மரம், மூங்கில், போன்ற
மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
3. வடகிழக்கு பருவக்காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று.
வடகிழக்கு பருவக் காற்று
1. காலம் - அக்டோபர் முதல் நவம்பர்
வரை.
2. நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுகிறது.
3. குறைந்த மழைப்பொழிவு.
தென்மேற்கு பருவக்காற்று
1. காலம் - ஜுன் முதல் செப்டம்பர்
வரை.
2. கடலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது.
3. அதிக மழைப்பொழிவு.