வன உயிரினங்கள்
இயற்கைச் சூழ்நிலை அல்லது காடுகளை வாழிடமாகக் கொண்டு
வாழும் விலங்குகள் வன உயிரினங்கள் எனப்படுகின்றன. வன உயிரினங்கள் இருபிரிவுகளை
உள்ளடக்கியது. அவை முதுகெலும்புள்ளவை (மீன், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள்)
மற்றும் முதுகெலும்பில்லாதவை (தேனீ, பட்டாம் பூச்சி, அந்திப்பூச்சி அந்திப்பூச்சி போன்றவை). இந்தியா
அதிக வன உயிரினங்களையும்,
வன உயிரின
வகைகளையும் கொண்ட நாடு. உலகிலுள்ள 1.5 மில்லியன் வகையான வன விலங்கு உயிரினங்களில்
இந்தியாவில் மட்டும் 81,251 க்கும்
மேற்பட்ட வகையான வன விலங்கினங்கள் உள்ளன.
புலி, சிங்கம், சிறுத்தை, பனி சிறுத்தை, மலைப்பாம்பு, நரி, ஓநாய், கரடி, முதலை,
காண்டாமிருகம், நீர்யானை, ஒட்டகம், வரிக்குதிரை, காட்டுநாய், குரங்கு, பாம்பு, மான் வகை, காட்டு எருமை வகை, வலிமை மிக்க யானை
வகை போன்ற வனவிலங்குகளின் வாழிடமாக இந்தியா திகழ்கிறது. வேட்டையாடுதல், காடழிப்பு மற்றும்
இதர மனித குறுக்கீடுகளினால் வன விலங்குகளின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு பல
உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
1952ஆம் ஆண்டு வன
விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு
வழங்க நிறுவப்பட்ட அமைப்பு இதுவாகும்.
வனவிலங்குகளைப்
பாதுகாக்கவும், வேட்டையாடுதல், கடத்துதல் மற்றும்
சட்டவிரோத வணிகம் ஆகியவற்றைக்
கட்டுப்படுத்தும்
நோக்கத்துடனும்
இந்திய அரசு 1972இல் வன விலங்கு
பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது.
இந்திய வனவிலங்கின்
செழுமைத் தன்மையையும், பன்மையையும் பாதுகாக்க
102 தேசிய பூங்காக்கள்
மற்றும் 515 வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன.
உயிர்க்கோள
பெட்டகம் என்பது நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று.
இந்திய அரசாங்கம் 18 உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் பணி இயற்கை
வாழ்விடத்தின் பெரும் பகுதிகளைப் பாதுகாத்தல், ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட தேசிய பூங்காக்களைப் பாதுகாத்தல் இவைகளின் பொருளாதார பயன்பாட்டு அண்மைப் பகுதிகளைப்
பாதுகாத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது.
புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973இல் தொடங்கப்பட்டது. புலிகளை பாதுகாக்கவும்
அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன.
இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் 11 காப்பகங்கள்
(மன்னா வளைகுடா, நந்தா தேவி, நீலகிரி, நோக்ரேக்,
பச்மாரி, சிம்லிபால், சுந்தரவனம்,
அகத்திய மலை, பெரிய நிக்கோபார், கஞ்சன்ஜங்கா மற்றும் அமர்கண்டக்) யுனெஸ்கோவின் (UNESCO) மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.